animated gif how to
Showing posts with label greece-man. Show all posts
Showing posts with label greece-man. Show all posts

சட்டத்தை எவரும் கையிலெடுக்க அனுமதிக்க போவதில்லை முஸ்லிம் பிரதிநிதிகள் மத்தியில்: கோட்டாபய

August 24, 2011 |

August 24, 2011.... AL-IHZAN Local News

அகில இலங்கை ஜம்இயதுல் உலமா மற்றும் தற்போது மர்ம மனிதன் தொடர்பாக பிரச்சினைகள் எழுந்துள்ள அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, புத்தளம், கண்டி, குருநாகல் மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களிலுள்ள பிரதான மஸ்ஜித்களின் பிரதிநிதிகளை இன்று செவ்வாய்க்கிழமை பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ்வை சந்தித்தித்துள்ளனர். பாதுகாப்புச் செயலாளரின் ஏற்பாட்டில் விசேட விமாங்கள் மூலம் அழைத்து வரப்பட்ட இவர்கள் பாதுகாப்பு அமைச்சில் ஏற்பாடு செய்யபட்டிருந்த மாநட்டில் பங்கு கொண்டுள்ளனர்.படங்கள்

புத்தளத்தில் கிறீஸ் மனிதன் - பொலிஸார், பொது மக்கள் மோதல் - கான்ஸ்டபிள் பலி

August 22, 2011 |

August 22, 2011.... AL-IHZAN Local News

இணைப்பு-2
ஒரு போலீஸ் சிப்பாய் கொல்லப்பட்டதுடன் ஐந்து பொதுமக்கள் துப்பாக்கி சூட்டியில் காயம்
புத்தளம் புத்தளம் புறநகர பகுதியான மணல் குன்று பகுதியில்  இரு மர்ம மனிதர்கள் என்று தெரிவிக்கப்படும் மனிதர்கள் பொதுமக்களினால் பிடிக்கப்பட்டு மரத்தில் கட்டபட்ட நலையில் அங்கு வந்த போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது போலீசார்   துப்பாக்கி பிரயோகம் செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் பின்னர் பொலிசாரால் கொண்டுசெல்லப்பட்ட மர்ம மனிதர்கள் என்று தெரிவிக்கப்படும் இருவரும் விடுவிக்கப் பட்டதாக தெரிவித்து சற்றுமுன்னர் புத்தளம் நகரபகுதில் வீதிகளில் டயர்கள் போட்டு எரிக்கப்பட்டுள்ளது.
இதன் போது சம்பவ இடத்துக்கு வந்த போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மீண்டும் மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது...

இந்த அராஜகம் எப்படியிருக்கு..??

August 21, 2011 |

August 21, 2011.... AL-IHZAN Local News


கிரீஸ் பூதம் (கிரீஸ் யக்கா அல்லது மர்ம மனிதன்) தொடர்பில் தவறான தகவல்களை பரப்பியதாகக்கூறி கைது செய்யப்பட்ட முகத்துவார பிரதேச முச்சக்கர வண்டிச் சாரதியை நாளை திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கிரீஸ் பூத நடவடிக்கையின் பின்புலமாக அரசு செயற்படுவதாக முச்சக்கர வண்டிச் சாரதி மக்களை அச்சுறுத்தியதாக குற்றம்சுமத்தியே அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.


பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் சாராதி பரப்பிய பிழையான கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

மர்ம மனிதர்கள்: காத்தான்குடியில் பதட்டம்

August 20, 2011 |

August 20, 2011.... AL-IHZAN Local News

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பாலமுனைக் கிராமத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட மர்ம மனிதன் பதற்றத்தினால் பொலிசாருக்கும் பொதுமக்கள் சிலருக்குமிடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக பாலமுனை மற்றும் கர்பலா காத்தான்குடி ஆகிய பிரதேசங்களில் அமைதியின்மை ஏற்பட்டது.


காத்தான்குடியை அண்மித்த ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பாலமுனை கிராமத்தில் மர்ம மனிதர்கள் இருவரின் நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்ததையடுத்து அப்பகுதியில் பதற்ற நிலை காணப்பட்டது.இதையடுத்து நேற்றிரவு 11 மணியளவில் பாமுனை மற்றும் கர்பலா பிரதேசங்களில் பெலாலிசார் குவிக்கப்பட்டனர்...

இரு முஸ்லிம் பெண்கள் இழுத்து செல்லப்பட்டு ஒருவர் மீது அசிட் வீச்சு

August 19, 2011 |

August 19, 2011.... AL-IHZAN Local News

குருநாகல் மாவட்டத்தில் மர்ம மனிதனின் தொல்லை அதிகரித்து வருவதால் மக்களிடையே அச்சமும் பீதியும் அதிகரித்து வருகின்றது. மர்ம மனிதன் இரு முஸ்லிம் பெண்களை இழுத்துச் சென்ற இரு வேறுபட்ட சம்பவங்களில் ஒரு பெண் மீது அசிட் வீசப்பட்டுள்ளது. மற்றொரு பெண் படுகாயம் அடைந்துள்ளார். குருநாகல் மாவட்ட சியம்பளாகஸ்கொட்டுவ – அம்மையன் வெவ முஸ்லிம் கிராமத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு வுளுச் செய்வதற்காக வீட்டுக்கு வெளியே  குழாயடிக்குச் சென்ற பெண் ஒருவரை முகமூடியணிந்து வந்த மர்ம மனிதன் இழுத்துச் சென்ற சம்பவத்தில் பெண் படுகாயம் அடைந்துள்ளார்...

கிறீஸ் மனிதனை காரணம்காட்டி கிழக்கு முஸ்லிம் பகுதிகளில் இராணுவம் குவிப்பு

August 18, 2011 |

August 18, 2011.... AL-IHZAN Local News

கிழக்கு மாகாண முஸ்லிம் பிரதேசங்களில் மர்மமனிதர் விவகாரத்தினால் எழுந்துள்ள பதற்ற நிலையைக் காரணம் காட்டி அரசு அங்கு தனது படைகளைக் குவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் பொதுமக்களுக்கும் கடற்படையினருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்ற கிண்ணியா பிரதேசத்துக்கு மேலதிகமாக இரண்டு பற்றாலியன்  இராணுவத்தினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 


இந்த இரண்டு பற்றாலியன்களையும் சேர்ந்த சுமார் 1500 படையினர் கிண்ணியா பிரதேசத்தில் புதிய படை முகாம்களை நிறுவி நிலை கொண்டுள்ளது. இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள கிழக்குப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா, புதிதாக அமைக்கப்பட்டுள்ள படைமுகாம்கள் கிண்ணியாவின் முழுப்பகுதியினதும் பாதுகாப்பைக் கவனித்துக் கொள்ளவுள்ளதாகக் கூறியுள்ளார்.  அதேவேளை கிண்ணியா கடற்படை முகாமை அகற்ற முடியாது என்று  பாதுகாப்பு அமைச்சு திட்டவட்டமாகக் கூறியுள்ளது. இந்த முகாமின் பாதுகாப்புக்காக மேலதிக கடற்படையினரை அனுப்பி வைத்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்...

பனிப்போர் பொறிகளுக்கு பலிக் கடாவாக நம் இளைஞர் சிக்கிவிடக் கூடாது...

August 17, 2011 |

August 17, 2011.... AL-IHZAN Local News
- மஸீஹுதீன் இனாமுல்லாஹ்-

சகல ம ஹ ல்லாக் களிலும் மஜ்லிஸ் அல்-  ஷூராக்களை அமைத்துக் கொள்ளுங்கள்...
இன்று காலை "SLBC " மற்றும் "லக்ஹண்ட" அலைவரிசைகளில் கிண்ணிய சம்பவம் பற்றிய கருத்துக்கள் நேரடி  மக்கள்  பரிமாறப்பட்டன,  கடற்படை முகாமை அகற்றுமாறு  சில அடிப்படை வாதிகள் கோரிக்கை விடுப்பதாகவும், அவர்களுக்கு அரசும் ,இராணுவமும் தலை சாய்க்க கூடாதென்றும் மிகவும் ஆக்ரோஷமான இனவாதக் கருத்துகள் வெளியிடப் பட்டன.!
எதிர்கால அரசியல் இராஜ தந்திர, முஸ்தீபு களுக் காகவும், பாது காப்பு கெடு பிடிகளுக்காகவும் ஒரு பொது சன அபிப்பிராயம் தோற்றுவிக்கப் படுகிறதா என்ற சந்தேகம் எழுவது நியாய மானதே. நீண்ட கால எதிர்விளைவுகளை கவனத்திற் கொண்டு சிதறி வாழும் சிறுபான்மை முஸ்லிம்கள் சமயோசிதமாக நடந்து கொள்ள வேண்டும்...

மர்மமனிதனின் தாக்குதல்: பரபரப்பு வாக்குமூலம்

August 16, 2011 |

August 16, 2011.... AL-IHZAN Local News

கல்முனை, நிந்தவூர், திருக்கோவில் மற்றும் பொத்துவில் பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்கள் உட்பட ஐவர் மர்ம மனிதனின் தாக்குதலுக்குள்ளாகி கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


 கல்முனை அனீசா 19 , சகீல் 18 , நிந்தவூர் பஸ்னா 27  , திருக்கோவில் ரவீந்திரன் 48  ,பொத்துவில் ஆசிக்கா 22  ஆகியோரே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணியளவில் திறந்திருந்த வீட்டின் கதவினூடாக நுழைந்த கறுப்பு நிற உருவம் கொண்டவனே தம்மைத் தாக்க முற்பட்டதாகவும் அவனிடமிருந்து விடுவித்து ஓட முற்படும்போது இடக்கை கிழிக்கப்பட்டதாகவும் கைவிரலில் அணிந்திருந்த கூரிய ஆயுதமே தன்னைக் கீறியிருக்கலாம் எனவும் கல்முனையைச் சேர்ந்த அனீசா தெரிவித்தார்.

மர்ம மனிதர்களால் காயமுற்றவர்கள் சிகிச்சை பெற்றுவரும் காட்சிகள்

|

August 16, 2011.... AL-IHZAN Local News

கல்முனை, நிந்தவூர், திருக்கோவில் மற்றும் பொத்துவில் பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்கள் உட்பட ஐவர் மர்ம மனிதனின் தாக்குதலுக்குள்ளாகி கல்முனை அஷ்ரப்ஞாபகார்த் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

நாவலப்பிட்டியில் அகப்பட்ட மர்மமனிதன் (வீடியோ இணைப்பு)

August 15, 2011 |

August 15, 2011.... AL-IHZAN Local News
நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓவிட்ட, ஜெயசுந்தரபுர ஆகிய பிரதேசங்களில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய நபரொருவரை பிரதேச மக்கள் பிடித்து நாவலப்பிட்டிய பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். நாவலப்பிட்டி ஓவிட்ட பகுதியில் சந்தேகத்தக்கு இடமான முறையில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் நடமாடிய நபரொருவரை அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து பிடித்து ஜெயசுந்தரப் பகுதியில் உள்ள தொலைபேசிக் கம்பமொன்றில் கட்டி வைத்தனர்.



கிண்ணியாவில் பதற்றம் - தொழுகையின்போது தாக்குதல், பிரதேச செயலகம் முற்றுகை

|

August 15, 2011.... AL-IHZAN Local News

திருகோணமலை கிண்ணியாவில் மர்மமனிதர் விவகாரத்தினால் பொதுமக்களுக்கும் படையினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. 
கிண்ணியாவில் நடமாடிய மர்மமனிதர்களை பொதுமக்கள் துரத்திச் சென்ற போது அவர்கள் கிண்ணியா கடற்படை முகாமுக்குள் புகுந்து கொண்டனர். 
இதையடுத்து கடற்படை முகாம் மீது பொதுமக்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். இதன்போது கடற்படையினர் பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் மூவர் படுகாயமடைந்தனர். இதையடுத்து அங்கு சென்ற பொலிஸ் ஜீப் வண்டியொன்றையும் பொதுமக்கள் தீயிட்டு எரித்தனர். பொதுமக்களின் கல்வீச்சுக்கு இலக்காகி பொலிஸ் இருவரும் காயமடைந்தனர்...

மர்ம மனிதன் பீதியால் கல்முனையில் இன்றும் பதற்றம் (படங்கள் இணைப்பு)

August 14, 2011 |

August 14, 2011.... AL-IHZAN Local News

கல்முனை நகரப் பிரதேசத்தில் அமைந்துள்ள இஸ்லாமபாத் சுனாமி வீட்டுத்திட்டத்தில் இளைஞர் ஒருவர் மர்ம மனிதனால் தாக்கப்பட்ட சம்பவமொன்று இன்று இடம்பெற்றது. இவ்வாறு தாக்குதலுக்குள்ளானவர் ஏ.சபீக் எனும் இளைஞராவார். 
சுனாமி வீட்டுத்திட்டத்தில் உள்ள வீடு ஒன்றுக்குள் மர்மமனிதர் ஒருவர் நுழைய முற்பட்ட போது அங்கு வருகை தந்த அந்த வீட்டு இளைஞனால் தடுக்கபட்ட வேளை மர்மமனிதன் இளைஞனின் கையில் கூரிய ஆயுதத்தினால் தாக்கிவிட்டு தலைமறைவாகியுள்ளதாக தெரியவருகிறது.
மதியவேளையில் இப்பிரதேசத்தில் பதற்ற நிலை ஏற்பட்டதோடு அக்கிராம மக்கள் மர்ம மனிதனைத் தேடும் நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.(படங்கள் இணைப்பு)

பொலிஸாரின் அராஜகத்தில் வபாத்தான இளைஞரின் ஜனாசா நல்லடக்கம்

|

August 14, 2011.... AL-IHZAN Local News
பொத்துவில் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட முப்பாக்கி பிரயோகத்தில் வபாத்தான 2 பிள்ளைகளின் தந்தையான அலியார் முஹம்மது மஹ்ஜுனின் ஜனாசா நல்லடக்கம் நேற்று

 சனிக்கிழமை நடைபெற்றுள்ளது.


இந்த ஜனாஸா நல்லடக்கத்தில் முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் பெரும் எண்ணிக்கையிலான பிரதேச மக்களும் கலந்து கொண்டுள்ளனர்.

மர்ம மனிதனின் தாக்குதலுக்குள்ளான முஸ்லிம் பெண் பரபரப்பு வாக்குமூலம்

August 13, 2011 |

August 13, 2011.... AL-IHZAN Local News
பொத்துவில் பிரதேசத்தில் மர்ம மனிதனால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் பெண் ஒருவர் கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  பொத்துவில் 06ஆம் வட்டாரம் கே.பி.எம்.வீதியை சேர்ந்த ஜூனைதீன் ஆஸிக் (22வயது) என்ற பெண்னே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
குறித்த பெண்ணின் கணவர் மத்திய கிழக்கு நாடொன்றில் தொழில்செய்துவரும் நிலையில் தனது தாய் தந்தையருடன் குறித்த பெண் வாழ்ந்துவருகின்றார். இது தொடர்பில் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் கருத்து தெரிவிக்கையில், 


நேற்று இரவு 8.30 மணியளவில் நான் வெளியில் தண்ணீர் எடுப்பதற்காக சென்றபோது என்னை யாரோ ஒருவர் திடிரென வீட்டில் மேல் பகுதியில் இருந்து தூக்கினர்...

பொத்துவிலில் இராணுவத்தினர் சுட்டு ஒருவர் வபாத்: பலர் காயம்

August 12, 2011 |

August 12, 2011.... AL-IHZAN Local News

பொத்துவில் பிரதேசத்தில் இராணுவம் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் வபாத்தாஹியுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். ஏ.எம்.மஹ்ஜூன் என்பரே கொல்லப்பட்டவராவார்.

நேற்றிரவு பிடிக்கப்பட்ட 4 மர்ம மனிதர்களையும் காட்டுமாறுகோரி பொதுமக்கள் போராட்டம் நடாத்தியபோது பொலிஸார் ஆர்ப்பாட்டகாரர்களை கலைப்பதற்கு கண்ணீர்புகை பிரயோகித்து துப்பாக்கி பிரயோகம் செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் போது குறித்த நபர் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளார்.

இன்றைய தினம் பொத்துவில் பகுதியில் ஹர்த்தாலும் அனுஸ்டிக்கப்பட்டமை குறிப்படத்தக்கது.

மர்மமனிதரால் காயப்படுத்தப்பட்ட பெண் தொடர்ந்தும் கல்முனை அஸ்ரப் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

பிந்திய செய்தி:பொத்துவில் பிரதேசத்தில் பொலிஸார் ஊரடங்குச் சட்டத்தை பிறப்பித்துள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை காலை 6 மணிவரை இந்த ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொத்துவில் பாக்கியவத்தையில் மர்மமனிதர்கள்: பொலிஸார் பொதுமக்கள் இடையே மோதல், பாழடைந்த வீட்டினுள் பொலிஸாரின் சீருடைகள், தொப்பிகள், காலணிகள் மீட்பு(பட இணைப்பு)

|

August 12, 2011.... AL-IHZAN Local News
பொத்துவில் பாக்கியவத்தை பகுதியில் நேற்று மர்மமனிதர்களின் நடமாட்டத்தால் பொதுமக்களுக்கும் பொலிசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.


பாக்கியவத்தை பகுதியில் உள்ள சில வீடுகளை நேற்று இரவு 11 மணியளவில் மர்மனிதர்கள் தட்டியுள்ளனர். இதனையடுத்து பிரதேச மக்கள் இரண்டு மர்ம மனிதர்களையும் துரத்தி சென்ற போது இடைநடுவே இருந்து மேலும் இரண்டு மர்ம மனிதர்கள் இவர்களுடன் இணைந்து ஓடியுள்ளனர்.


இதனையடுத்து நான்கு மர்ம மனிதர்களும் குறித்த பிரதேசத்தில் இருந்த பாழடைந்த வீடொன்றினுள் புகுந்துள்ளனர். எனினும் மர்ம மனிதர்கள் வசம் துப்பாக்கி காணப்பட்டதால் பிரதேச மக்கள் அவர்களை நெருங்க வில்லை. இதனையடுத்து அங்கு ஒளிந்திருந்த மர்மமனிதர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.

கல்முனையிலும் மர்மமனிதனால் பதற்றம்

|

August 12, 2011.... AL-IHZAN Local News
வியாழக்கிழமை இரவு 8:30 மணியளவில் கல்முனை கன்னகி அம்மன் கோவில் வீதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் முகத்தை மறைத்து , கறுத்த உடை அணிந்து கையில் வால் ஏந்திய நிலையிலும் , மற்றவர் உடம்பில் கிறீஸ் பூசிய நிலையில் மண்ணெண்ணைக்களனை ஏந்திய நிலையில் இரண்டு மர்மமணிதர்கள் நடப்பதை அவதானித்த தமிழ் இளைஞர்கள் பிடிப்பதற்காக துரத்திய போது அவ்விரு மர்மமணிதர்களும் அருகில் இருந்த மையவாடியினூடாக பாய்ந்தார்கள்.
பின்னர் அவ்விரு மர்மமனிதர்களும்  கல்முனை அல்பஹ்றியா மஹாவித்தியாலய பாடசாலையில் பாய்ந்து ஒழிந்து கொண்டணர்.


இன்னிலையில் மர்மமனிதர்கள் பாடசாலையில் ஒளிந்த செய்தி கேட்டு பொதுமக்கள் சுமார் 500 பேர்வரையில் பாடசாலையை சுற்றி முற்றுகையிட்ட போதிலும் மர்மமனிதன் அதிர்ஸ்ட்டவசமாக தப்பிச்சென்றுவிட்டனர்.  கடற்கறைப்பள்ளி வீதியில் மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டதாகவும். இது பயிற்சி பெற்ற இராணுவத்தினரின் செயலாக இருக்கலாம் என மக்கள் தெறிவிக்கின்றனர்.

சம்மாந்துறையில் மர்ம மனிதனால் கலவரம்

|

August 12, 2011.... AL-IHZAN Local News
-(ஜதுசன், எம்.சி.அன்சார்)  via Tamil Mirror.com-

மர்ம மனிதர்கள் என சந்தேகிக்கப்பட்ட இருவரை சம்மாந்துறை பொலிஸார் காக்க முற்பட்டார்கள் என்பதால் சம்மாந்துறை பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் கைலப்பு ஏற்பட்டுள்ளது. பொலிஸாருடன் கைகலப்பில் ஈடுபட்டவர்கள் மீது சம்மாந்துறை பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கலகத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளார்கள். இச்சம்பவம் இ வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது…
சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையிலுள்ள கோரக்கோயில் பிரதேசத்தில் பெண்ணொருவர் குளித்துக்கொண்டு இருந்திருக்கிறார். இரவுவேளை என்பதால் அவ்விடத்திற்கு மர்மமான முறையில் வந்த இருவர் அப்பெண்மீது சேஷ்டையில் ஈடுபட்டுள்ளனர். உடனே அப்பெண் கூச்சலிட்டு ஊரைக் கூட்டியதும் அவ்விருவரும் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்குள் ஓடி ஒழிந்துள்ளனர். இதனை அவதானித்த பொதுமக்கள் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு சந்தேக நபர்களை தங்களிடம் ஒப்படைக்குமாறு சத்தமிட்டுள்ளனர்...

நாடு பூராகவும் பரவிவரும் பெண்களை இரத்தம் ஓடச் செய்து பலியிடும் மர்ம நபர்கள்??? ஓட்டமாவடியில் தொடரும் பதட்டம்...

August 10, 2011 |

August 10, 2011.... AL-IHZAN Local News

நாடு பூராகவும் பரவிவரும் பெண்களை இரத்தம் ஓடச் செய்து பலியிடுதல் என்பது இப்போது கிழக்கு மாகாணத்திலும் பரவி வருகிறது. சில தினங்களாக மட்டக்களப்பு எல்லைக் கிராமங்களான ரிதிதன்ன, ஜெயந்தியாய பகுதிகளிலும் வெலிகந்தைப் பகுதியில் கட்டுவன்வில, செவனபிட்டி பகுதியிலும் இந்தச் செய்தியால் மக்கள் பீதியடைந்திருந்தனர். 


நேற்று ஓட்டமாவடிப் பகுதியில் நாவலடி, கேணிநகர், அமீரலி கிராமம், பாலை நகர் போன்ற எல்லைப் புற
கிராமங்களிலிருந்து மக்கள் தற்காப்பிற்காக அங்கிருந்து வெளியேறி பிற பகுதிகளுக்கு சென்றிருந்தனர். ஆண்கள் மாத்திரம் காவலுக்கு இரவு நேரங்களில் தங்கியிருந்தனர்...

Flag Counter

Free counters!