animated gif how to
Showing posts with label islam. Show all posts
Showing posts with label islam. Show all posts

மனித மாண்பு காக்கும் புனித நோன்பு..!

July 14, 2012 |

- எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) -
புனித ரமழான் எம்மை நோக்கி வந்துகொண்டிருக்கின்றது. அருள் மறையாம் திருமறைக் குர்ஆன் அருளப்பட்ட இப்புனித மாதத்தில் மனிதம் சிறப்புப் பெற நோன்பிருக்க வேண்டுமென்பது அல்லாஹ்வின் கட்டளையாகும்.

‘கலீபா உமர் பின் கத்தாப்’ தொலைக்காட்சி தொடர் ரமழானில் ஒளிபரப்பாகிறது.! (வீடியோ இணைப்பு)

July 05, 2012 |

இஸ்லாத்தின் 2வது கலீபா உமர் பின் கத்தாப் வரலாற்றை அடிப்படையாக கொண்ட தொலைக்காட்சி தொடர் வருகிற ரமழான் மாதம் முதல் ஒளிபரப்பாகும் என கட்டார் தொலைக்காட்சியின் இயக்குநர் முஹம்மது பின் அப்துர்றஹ்மான் அல்கவாரி அறிவித்துள்ளார்.

உலக முஸ்லிம்களை ஒன்றிணைக்கும் புதிய சமூக வலைத்தளம் 'salam world' ரமழானில் அறிமுகம்!

June 14, 2012 |

-முஹம்மட் இஹ்ஸான்-
பேஸ்புக், ட்வீட்டர் ஆகிய சமூக இணையதளங்களை போன்ற ஒரு புதிய சமூக இணையத்தளம் வருகின்ற ரமழான் மாதம் அறிமுகமாகவுள்ளது.
ஹலால் சம்மந்தமான இந்த இணையதளத்திற்கு ‘சலாம் வேர்ல்ட் – 'Salam World’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இது முஸ்லிம்களுக்கான ஒரு பாதுகாப்பு வலைத்தளமாகவும், பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கிற்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ளது.(வீடியோ இணைப்பு)

"மதுபானப் பரிசை மறுக்கிறேன், நான் ஒரு முஸ்லிம்" - பிரபல கால்பந்தாட்ட விரர் (வீடியோ இணைப்பு)

May 13, 2012 |

இங்கிலாந்தில் இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் (EPL) எனப்படும் கால்பந்து போட்டி பட்டையைக் கிளப்புகிறது. இப்போட்டிகளில் கடந்த ஞாயிறுக்கிழமை நடந்தேறிய சம்பவம் சுவாரஸ்யமானது.

முஸ்லிம் அமெரிக்கர்கள் - ஓர் ஆய்வு கட்டுரை

March 14, 2012 |

ஆஷிக் அஹ்மத் அ. 

உங்கள் அன்றாட வாழ்வில் மார்க்கம் முக்கிய பங்கு வகிக்கின்றதா?

இது, பிரபல காலப் (Gallup poll) நிறுவனத்தால் சென்ற வருடம் முஸ்லிம் அமெரிக்கர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் கேட்கப்பட்ட கேள்விகளுள் ஒன்று.

இதற்கான பதில் - ஆம் - 80%

கியாமத் நாளின் சில அடையாளங்கள்!

March 09, 2012 |

-முஹம்மத் ஜான்ஸின்-

செல்வம் செல்வந்தர்களிடையே பகிரப்படும். ஏழைகளுக்கு அதிலிருந்து பலன் கிடைக்காது. ஸகாத் கொடுப்பது மக்களுக்கு ஒரு தடையாக காணப்படும். பள்ளிவாசல்களில் சத்தங்கள் உயர்த்தப்படும் போது (பள்ளிவாசல்களுக்காக சண்டைகள் இடம்பெறும்). மக்களின் தலைவர்கள் மிகவும் கெட்டவர்களாக இருப்பார்கள் (இயக்கங்களின் தலைவர்கள்) . மக்கள் ஒருவரிடம் ஏதாவது எதிர்பார்த்து அவரை கன்னியப்படுத்துவார். அதிகமாக வைன் அருந்தப்படும். அக்காலத்தில் சூடான காற்று வீசும் அல்லது பூமி அவர்களை விழுங்கிவிடும் அல்லது அவர்கள் மிருகங்களாக உருமாற்றப்படுவார்கள்.

முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது,

பண்பாடுகள் சீராகும்போது வழிபாடுகள் அங்கீகரிக்கப்படும்

March 02, 2012 |

எஸ். எச். எம். பளீல் (நளீமி) எம்.ஏ.
சிரேஷ்ட விரிவுரையாளர் - ஜாமியா நளீமியா

இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் ஒழுக்கப் பண்பாடுகள் என்பவை கட்டாயக் கடமைகளாகும். அவற்றை நிறைவேற்றத் தவறும் பட்சத்தில் ஒரு முஃமினது ஈமான் கூட பாதிக்கப்படுகிறது. பண்பாடுகளது பலவீனம் ஈமானின் பலவீனமாகவே கணிக்கப்படுகிறது. எனவே, ஈமான் செயலாகப் பரிணமிக்காதபோது அதனால் எப்பயனுமில்லை என்பதே இஸ்லாத்தின் கருத்தாகும்.

அனைத்து மதங்களும் நன்மையையே போதிக்கும் போது ஏன் இஸ்லாத்தை மட்டுமே பின்பற்ற வேண்டும்?

February 03, 2012 |


மாற்று மதத்தவர்களால் இஸ்லாமியர்களிடம் கேட்கப்படும் பொதுவான கேள்விகளுக்கு டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் பதில்கள்:
  
கேள்வி எண்: 19
உலகில் உள்ள எல்லா மதங்களும் – நல்லதையே செய்ய வேண்டும் – நல்லதையே பின்பற்ற வேண்டும் என்று சொல்லும் போது – ஒரு மனிதன் இஸ்லாமிய மதத்தை மாத்திரம் ஏன் பின்பற்ற வேண்டும்.? மற்ற மதங்களில் எதையேனும் ஒன்றை பின்பற்ற முடியுமே!

பாடசாலைகளிலிருந்து இஸ்லாமிய அறிஞர்கள் உருவாக வேண்டும்- யூசுப் முப்தி

January 27, 2012 |


உலகக் கல்வி, மார்க்கக் கல்வி என்று அல்குர்ஆன் எவ்விடத்திலும் கல்வியை பிரித்துப்பார்க்கவில்லை என்று அஷ்ஷெய்க் யூசுப் முப்தி தெரிவித்துள்ளார். அநுராதபுர, நாச்சியாந்தீவில் நடைபெற்ற அரபுக் கல்லூரி திறப்பு விழாவொன்றில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

பாடசாலைகளிலிருந்து இஸ்லாமிய அறிஞர்கள் உருவாக வேண்டும். இன்று பாடசாலைகளில் கற்கும் மாணவர்கள் சிந்தனா ரீதியாக இன்று மதம் மாறியுள்ளார்கள். எனவே பாடசாலைக் கல்வியையும் அல்லாஹ்வுக்காக கற்கிறேன் என்ற மனநிலை உருவாக்கப்பட வேண்டும்.

ஜும்ஆ குத்பா உரியமுறையில் பயன்படுத்தப்படுமா..?

January 20, 2012 |


அஷ்ஷெய்க் எஸ். எச். எம். பளீல் (நளீமி)

வெள்ளிக்கிழமை குத்பாக்கள் மட்டுமல்ல பள்ளிவாசல்களிலும் பொது மேடைகளிலும் இடம்பெறும் உபந்நியாசங்களைப் பொறுத்தவரையிலும் அவை நன்கு திட்டமிடப்படல் வேண்டும். சமுதாயம் கதீப்களின் வழிகாட்டல்களை ஏக்கத்தோடு எதிர்பார்த்திருக்கிறது. அன்றாடம் சுற்றுச் சூழலில் இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பாகவும் சமூக உறவுகள், கொடுக்கல் வாங்கல் தொடர்பாகவும் இஸ்லாமிய ஷரீஆவின் நிலைப்பாடுகளை அறிய ஆவலாக இருக்கிறது. மார்க்கத்தைப் படித்தவர்கள் மீது பொதுமக்களுக்கிருக்கும் நம்பிக்கை அதிகமாகும். எனவே கதீப்மார் மிகுந்த பொறுப்புணர்வோடுதான் ஒவ்வொரு வார்த்தையையும் உதிர்க்க வேண்டும்.

உலகின் மிகப் பெரிய குர்ஆன் ஆப்கானிஸ்தானில்!

January 13, 2012 |

உலகின் மிகப் பெரிய குர்ஆன் ஆப்கானிஸ்தானில் உருவாக்கப்பட்டுள்ளது. 7 அடி நீளமும் 10 அடி அகலமும் கொண்டதாக இப்புனித குர்ஆன் உருவாக்கப்பட்டுள்ளது.

218 பக்கங்கள் கொண்ட இந்குர்ஆன் 30 வகையான எழுத்துவடிவங்களைக் கொண்டுள்ளது. இதை உருவாக்கவதற்கு சுமார் 5 வருடங்கள் தேவைப்பட்டுள்ளளன.

பிரபல பாடகர் ஜோஸ் கெமிலன் புனித இஸ்லாத்தை ஏற்றார்

|

சுவனப்பிரியன்
ஆப்ரிக்காவிலும் உலகம் முழுவதிலும் தனது இசையால் பலரை கொள்ளைக் கொண்ட ஜோஸ் கெமிலன் ஜாஃபர் கடாபியாக தனது வாழ்வை மாற்றியுள்ளார். 

எல்லாப் புகழும் இறைவனுக்கே! 

ஆம்.. வழக்கமாக இசைத் துறையில் மற்றுமொரு புயல் வீசத் தொடங்கியுள்ளது.

இஸ்லாத்தின் பார்வையில் உலகவாழ்க்கை!

January 05, 2012 |

-ஆலிஃப் அலி இஸ்லாஹி-
[மனிதன் என்பவன் இப்பூமியில் வெறுமனே உண்டு கழித்துவிட்டு இறந்துபோகக் கூடிய விலங்கினமோ அல்லது விரும்பியவாறு தனது மனோஇச்சையின் பிரகாரம் வாழ்ந்துவிட்டுப் போகும் சதைப் பிண்டமோ அல்ல. மாறாகஅவனது வாழ்வு இறை வழிகாட்டலின் கீழ் அமையவேண்டும். இவ்வுலகில் நமது பணிஎன்ன என்பதை விளங்கவேண்டும்.

இஸ்லாமிய தேசியம் - எழுச்சியும் வீழ்ச்சியும்...

January 01, 2012 |

- ஆஷிக் அஹ்மத்.அ -
நம் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.


இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி. அமெரிக்காவில், ஆப்ரிக்க அமெரிக்க இனத்தவர் கடுமையான அடக்குமுறைகளுக்கு ஆளான நேரம்.

அல்குர்ஆன் கூறும் சூறாவளி எச்சரிக்கைகள்

December 23, 2011 |

December 23, 2011.... AL-IHZAN Article 
உங்களில் யாராவது ஒருவர் இதை விரும்புவாரா? – அதாவது அவரிடம் பேரீச்ச மரங்களும், திராட்சைக் கொடிகளும் கொண்ட ஒரு தோட்டம் இருக்கிறது. அதன் கீழே நீரோடைகள் (ஒலித்து) ஓடுகின்றன. அதில் அவருக்கு எல்லா வகையான கனி வர்க்கங்களும் உள்ளன. (அப்பொழுது) அவருக்கு வயோதிகம் வந்துவிடுகிறது.

இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான யூத ஊடகங்கள் (அவசரமாக வாசியுங்கள்)

December 12, 2011 |

December 12, 2011.... AL-IHZAN Article

-அலாவுத்தீன் இம்தாதி-
நபிமார்களைப் பொய்யாக்குவது, படுகொலை செய்வது (5:70, 2:87) அல்லாஹ்வைப் பிச்சைக்காரன் என்று இழிவாகப் பேசுவது, அல்லாஹ்வை விட நாங்கள் செல்வச் செழிப்பு மிக்கவர்கள் என்று திமிராகப் பேசுவது (3:181) அல்லாஹ்வின் வலிமையையே நாங்கள் வென்றவர்கள் என்று கிறுக்குத்தனமாக உளறுவது (5:64) 
அல்லாஹ்வினால் அருளாக வழங்கப்பட்ட வேத வசனங்களை இடம் மாற்றி, பொருள் மாற்றிப் புரட்டல் செய்வது (4:46)

இஸ்லாமிய புதுவருடத்தை வரவேற்போம்!

November 25, 2011 |

November 25, 2011.... AL-IHZAN 
முஹம்மத் மிப்றாஹ் முஸ்தபா
ஜாமிஆ நளீமியா


இஸ்லாமிய கணக்கின்படி இறுதி மாதமான துல்ஹிஜ்ஜாவில் இருக்கின்ற நாம் இன்னும் சில தினங்களில் இஸ்லாமியப் புத்தாண்டில் கால்பதிக்க இருக்கின்றோம். ஆனால், யாருமே அதனை வரவேற்கத் தயாராக இல்லை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஏனெனில், எம்மில் அதிகமானவர்கள் கிறிஸ்த்தவர்கள் புத்தாண்டாக கொண்டாடுகின்ற ஜனவரி மாதத்தையே வரவேற்கத் தயாராகி வருகின்றனர் என்பது கசப்பானதோர் உண்மையாகும். இவ்வாறானதொரு நிலையில் இது தொடர்பாக சில விடயங்களை ஞாபகப்படுத்துவது சிறந்ததென கருதுகின்றேன்...

அல்-குர்ஆன் கூறும் கால்நடைகளும் பால் உற்பத்தியும்

November 17, 2011 |


நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளிலும் 
(தக்க) படிப்பினை இருக்கின்றது, அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும், 
 இரத்தத்திற்கும் இடையிலிருந்து கலப்பற்ற பாலை அருந்துபவர்களுக்கு 
இனிமையானதாக (தாராளமாகப்) புகட்டுகிறோம். அல்குர்ஆன் 16:66

இந்த இறைவசனத்தின் முதல் பகுதியில் கால்நடைகளிடம் தக்க படிப்பினை 
உள்ளதாக அல்லாஹ் கூறுகிறான். இங்கு படிப்பினை என்பதை ஆராச்சி என்ற 
கோணத்தில் பார்க்க வேண்டும். இந்த ஆராய்ச்சியை மேற்கொள்ள அல்லாஹ் ஐந்து விஷயங்களை (குளு) முன்வைக்கிறான் அவைகளாவன...

இஸ்லாமிய மயமாகும் பிரிட்டன்-பெருமளவில் இஸ்லாத்தை தழுவும் பிரிட்டன் மக்கள்

October 01, 2011 |

October 01, 2011.... AL-IHZAN World News
இது,  பிரிட்டனின் புகழ் பெற்ற நாளிதழான “தி இண்டிபெண்டன்ட்” தனது கட்டுரை ஒன்றிற்கு வைத்த தலைப்பு.ரிச்சர்ட் டாகின்ஸ் தளம் தொடங்கி பல்வேறு தளங்களில் பரபரப்பை/விவாதத்தை உண்டாக்கியிருக்கின்றது இந்த கட்டுரை.கடந்த பத்து ஆண்டுகளில் இஸ்லாமை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்கும் பிரிட்டன் மக்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதாக குறிப்பிடும் அந்த கட்டுரை கீழ்க்காணும் தகவல்களை தெரிவிக்கின்றது.

‘தீவிரவாதிகளாக இருந்தாலும் நல்லவர்கள்..’!!

August 06, 2011 |

August 06, 2011.... AL-IHZAN India News
பயணங்கள் எப்போதுமே அலாதியானவை. புதிய நபர்களின் சந்திப்பு, கலந்துரையாடல்கள் என புது அனுபவங்களை தருபவை. சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட ஒரு பேருந்து பயணம் ஒரு புது அனுபவமாக இருந்தது. பேருந்தில் ஏறிய எனக்கு அருகில் அமர இடம் அளித்தார் ஏறத்தாழ ஐம்பத்தைந்து வயதுடைய முதியவர்.
‘மாமா’ என்று அன்புடன் அழைத்து பேச்சை ஆரம்பித்தார். முஸ்லிம்களை இந்த முறையில் அழைப்பது தமிழகத்தில் சில பகுதிகளில் வழக்கம். அவர் யாதவ சமூகத்தை சேர்ந்தவர் என்பதை கேட்டு அறிந்து கொண்டேன். தங்கள் கடையில் வேலை செய்த ஒரு முஸ்லிம் குறித்து சிலாகித்து கூறினார். சட்டென்று ‘நீங்கள் எல்லாம் தீவிரவாதிகளாக இருந்தாலும் நல்ல குணம் உள்ளவர்கள்’ என்றார். கேட்டவுடன் எனக்கு பகீரென்றது.  ‘என்ன ஐயா, சட்டுனு இப்படி சொல்லிட்டீங்க?’ என்றேன். ‘உண்மையதானே சொன்னேன், உங்க ஆளுங்க செய்யாத காரியமா?’ என்றார் வெகுளியாக...

Flag Counter

Free counters!