animated gif how to

மர்ம மனிதன் பீதியால் கல்முனையில் இன்றும் பதற்றம் (படங்கள் இணைப்பு)

August 14, 2011 |

August 14, 2011.... AL-IHZAN Local News

கல்முனை நகரப் பிரதேசத்தில் அமைந்துள்ள இஸ்லாமபாத் சுனாமி வீட்டுத்திட்டத்தில் இளைஞர் ஒருவர் மர்ம மனிதனால் தாக்கப்பட்ட சம்பவமொன்று இன்று இடம்பெற்றது. இவ்வாறு தாக்குதலுக்குள்ளானவர் ஏ.சபீக் எனும் இளைஞராவார். 
சுனாமி வீட்டுத்திட்டத்தில் உள்ள வீடு ஒன்றுக்குள் மர்மமனிதர் ஒருவர் நுழைய முற்பட்ட போது அங்கு வருகை தந்த அந்த வீட்டு இளைஞனால் தடுக்கபட்ட வேளை மர்மமனிதன் இளைஞனின் கையில் கூரிய ஆயுதத்தினால் தாக்கிவிட்டு தலைமறைவாகியுள்ளதாக தெரியவருகிறது.
மதியவேளையில் இப்பிரதேசத்தில் பதற்ற நிலை ஏற்பட்டதோடு அக்கிராம மக்கள் மர்ம மனிதனைத் தேடும் நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.(படங்கள் இணைப்பு)
அதேவேளை இன்று பிற்பகல் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் பொது மக்களால் மர்ம மனிதன் எனப் பிடிக்கப்பட்டு பள்ளிவாசல் ஊடாக பொலிஸில் ஒப்படைக்கப்பட்ட சம்பவமொன்று இன்று பிற்பகல் வேளையில் இடம்பெற்றது. 


குறித்த இளைஞர் ஒரு கடற்படை வீரர் மேலதிக பயிற்சிக்காக செல்வதற்கு பணம் தேவைப்பட்டதால் சாய்ந்தமருது கராச் ஒன்றில் தொழில் புரியும் தனது மாமனாரிடத்தில் பெற்றுச் செல்வதற்காக வந்த வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 


இதனையடுத்து பிரதேச பொது மக்களால் பொலிஸ் நிலையம் சுற்றி வளைக்கப்பட்டதனால் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஏ.றஸ்ஸாக் (ஜவாத்) உள்ளிட்டோர் பொலிஸ் நிலையம் சென்று நிலைமைகளை ஆராய்ந்து தெளிவு பெற்று கூடியிருந்த மக்களுக்கு பள்ளிவாயல் ஒலிபெருக்கி ஊடாக தெளிவுபடுத்தினர். 
எனினும் குறிப்பிட்ட சில இளைஞர்கள் கற்களை வீசி குழப்ப முற்பட்ட வேளை இராணுவத்தினர் துரத்தியடித்து நிலைமையைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். இதனால் நகரிலுள்ள கடைகள் மூடப்பட்டு, தொடர்ந்தும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடைமைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.










0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!