August 15, 2011.... AL-IHZAN Local News
திருகோணமலை கிண்ணியாவில் மர்மமனிதர் விவகாரத்தினால் பொதுமக்களுக்கும் படையினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
கிண்ணியாவில் நடமாடிய மர்மமனிதர்களை பொதுமக்கள் துரத்திச் சென்ற போது அவர்கள் கிண்ணியா கடற்படை முகாமுக்குள் புகுந்து கொண்டனர்.
இதையடுத்து கடற்படை முகாம் மீது பொதுமக்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். இதன்போது கடற்படையினர் பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் மூவர் படுகாயமடைந்தனர். இதையடுத்து அங்கு சென்ற பொலிஸ் ஜீப் வண்டியொன்றையும் பொதுமக்கள் தீயிட்டு எரித்தனர். பொதுமக்களின் கல்வீச்சுக்கு இலக்காகி பொலிஸ் இருவரும் காயமடைந்தனர்...
அதேவேளை, கிண்ணியா மத்திய பள்ளிவாசலுக்குள் இன்று திங்கட்கிழமை அதிகாலை 3 மணியளவில் புகுந்த மர்ம மனிதர்கள் பத்துப் பேர் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன் நேற்றைய சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று கூறி 24 பேரை திங்கட்கிழமை கைதுசெய்துள்ளனர்.
இவர்களை விடுவிக்குமாறு கோரி பொதுமக்கள் கிண்ணியா பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முற்றுகையிடப்பட்டுள்ள பிரதேச செயலகத்துக்குள் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் மேஜர் ஜெனரல் வீ.ஆர்.டி.சில்வா, கிழக்குப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா உள்ளிட்ட பலரும் வெளியேற முடியாமல் முடங்கியுள்ளனர்.

0 கருத்துரைகள் :
Post a Comment