animated gif how to

பனிப்போர் பொறிகளுக்கு பலிக் கடாவாக நம் இளைஞர் சிக்கிவிடக் கூடாது...

August 17, 2011 |

August 17, 2011.... AL-IHZAN Local News
- மஸீஹுதீன் இனாமுல்லாஹ்-

சகல ம ஹ ல்லாக் களிலும் மஜ்லிஸ் அல்-  ஷூராக்களை அமைத்துக் கொள்ளுங்கள்...
இன்று காலை "SLBC " மற்றும் "லக்ஹண்ட" அலைவரிசைகளில் கிண்ணிய சம்பவம் பற்றிய கருத்துக்கள் நேரடி  மக்கள்  பரிமாறப்பட்டன,  கடற்படை முகாமை அகற்றுமாறு  சில அடிப்படை வாதிகள் கோரிக்கை விடுப்பதாகவும், அவர்களுக்கு அரசும் ,இராணுவமும் தலை சாய்க்க கூடாதென்றும் மிகவும் ஆக்ரோஷமான இனவாதக் கருத்துகள் வெளியிடப் பட்டன.!
எதிர்கால அரசியல் இராஜ தந்திர, முஸ்தீபு களுக் காகவும், பாது காப்பு கெடு பிடிகளுக்காகவும் ஒரு பொது சன அபிப்பிராயம் தோற்றுவிக்கப் படுகிறதா என்ற சந்தேகம் எழுவது நியாய மானதே. நீண்ட கால எதிர்விளைவுகளை கவனத்திற் கொண்டு சிதறி வாழும் சிறுபான்மை முஸ்லிம்கள் சமயோசிதமாக நடந்து கொள்ள வேண்டும்...
அவசரகால சட்டம் நீடிப்புக்கு நியாயங்கள் தேவைப் படலாம், மேலை நாடுகளும் ,சர்வதேச சமூகமும், இந்தியாவும் விடுக்கின்ற அழுத்தங்களுக்கு முன்னால், அவர்களை திருப்திப் படுத்தக் கூடிய, இஸ்லாமிய அடிப்படை வாதம், பயங்கர வாதம் என்ற புதிய ஒரு எதிரி அறிமுகப் படுத்தப் படலாம், தற்போதையா நிலையில்  மிக மிக விழிப்பாக முஸ்லிம்கள் இருந்து கொள்ளுங்கள்.
அச்சுறுத்தல் உள்ள ஒவ்வொரு பள்ளி வாயில் களிலும் ஒரே நேரத்தில் எல்லோரும் ஜமாஅத் தொழுகையில் ஈடுபடாது ஒரு குழு தொழுது முடியும் வரை மற்றொரு குழு விழிப்புக் குழுவாக செயற் படுத்தல் நல்லது, அதேவேளை ஜும்மாத் தொழுகை நடை பெறுகின்ற வேலை ஒரு சில விழிப்புக் குழுக்கள் ஒரு சில வாகனங்களில் ஊரிற்குள் அவதானிப்பு நடவடிக்கைகளை ஆரவாரமின்றி மேற்கொள்வது சிறந்தது.

கிரீஸ் மனிதன் போலிசுக்குள்ளும் இராணுவத் திற்குள்ளும் உங்களை சதி வலை போட்டு அழைத்துச் செல்கின்றானோ என்றும் கருத இடமுண்டு.

 போரிற்கு பின்னரான வட கிழக்கில் பிராந்திய மற்றும் சர்வதேச பின்புலத்துடன்  பல்வேறு உளவு சக்திகள் செயற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன, அதே போல் அரசிற்கும் படைகளுக்கும் எதிரான சக்திகளும் சந்தர்ப் பத்தை சரியாகப் பயன் படுத்தி முஸ்லிம் சமூகத்தை தமது இலக்குகளுக்காக பலிக் கட வாக்கவும் சாத்தியப் பாடுகள் நிறையவே  உள்ளன.

இத்தகைய பனிப்போர்  பொறிகளுக்குள் நமது இளைஞர்கள் சிக்கிக் கொள்ளக் கூடாது...!

இந்த நிலைமையில் முஸ்லிம்கள் பிற சமூகங்களோடு கூட்டாகவும் தனித்தும் தமது பாது காப்பு குறித்து கவனம் செலுத்த வேண்டும், வெறுமனே அரசியல் வாதிகளையோ, பிரபலங்கலையோ ,கொழும்பிலுள்ள அமைப்புகளையோ மாத்திரம் நம்பியிராது சிவில் சமூக கூட்டு நடவடிக்கைகளை சகல இயக்க கட்சி குழு வேறுபாடுகளுக்கப்பால் எடுக்க முன்வர வேண்டும்.

ஜும்மா குத்பாக்களில் உலமாக்கள் பள்ளி நிர்வாகிகளின் ஆலோசன்களைப் பெற்று மிகவும் பொறுப்புடனும், நிதானமாகவும் மக்களை அறிவுறுத்தல் வேண்டும், தொழுகையில் குனுத் ஓதி எல்லாம் வல்ல இறைவனிடம் நமது பாது காப்பிற்காக கரமேந்துவதொடு, தீய சக்திகளை அழித்து ஒழித்து சகல சமூகங்களின் சமாதான சக வாழ்விற்காகவும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

ஜும்மா தொழுகையின் பின்னர் அல்லது கூடிய விரைவில் ஒவ்வொரு மகால்லவிலும் சகல தரப்புகளையும் கொண்ட "மஜ்லிஸ் அல் ஷூரா" க்களை அமைத்துக் கொள்ளுவதன் மூலம் தமது இருப்புக்கும் பாதுகாப்புக்கும் ,சமூக பொருளாதார வாழ்விற்கும் விடுக்கப் படுகின்ற எத்தகைய சவால்களுக்கும் முகம் கொடுக்க தயாராக வேண்டும். இந்த நாட்டின் பிரஜைகள் நாம் எத்தகைய தீய சக்திக்கும் அஞ்சி வாழ வேண்டிய அவசியம் கிடையாது...

 அடுத்த சமூகங்களுடன் எப்பொழுதும் போல புரிந்துணர்வை வளர்த்துக் கொள்வதோடு குறித்த பிரச்சினையில் அக்கம் பாக்கத்திலுள்ள அடுத்த மதத் தலைவர்கள் சிவில் அமைப்புகளையும் கலந்து பேசி தீய சக்திகளை ஒழித்துக் கட்ட அவர்களிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள நாம் மிகவும் சமயோசிதமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

குறிப்பாக ஊடக வியலாளர்கள் தமது சமூகப் பொறுப்பை சரிவரச் செய்வதன் மூலம் இந்த செய்தியை உரிய தரப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு வருவார்கள் என எதிர் பார்ப்பதோடு இவ்வாறான அறிவுறுத்தல்களை வாசிக்கும் ஏனைய சகோதரர்களும் தமது ஊர் ஜமாத்துகளின் அவதானத்திற்கு கொண்டு வருமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!