animated gif how to

எம்மைப்பற்றி...

|

அஸ்ஸலாமு அலைக்கும்.

நாளுக்கு நாள் ஊடகங்களின் வளர்ச்சி அதீதத்தை எட்டினாலும், இணையத்தளத்தின் வளர்ச்சி என்பது உலகின் அனைத்துத் திசைகளிலும் வாழ்கின்ற மக்களை ஒருசேர இணைக்கின்ற ஒரு பாலமாகத் திகழ்கின்றது.

இதன் அடிப்படையில் உலகெங்கும் பரந்து வாழும் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கத்திய ஊடகங்கள், சினிமாக்கள் மற்றும் ஏனைய சமூகங்களில் மேற்கொள்ளும் பிரச்சா‌ரங்களை முறியடிப்பதற்க்கு இப்போது இருக்கக்கூடிய ஒரே பலமாகவும் இணையத்தளம் திகழ்கின்றது.

எமது சமூகத்தின் பிரச்சினைகளையும் அவை சார்ந்த விடயங்களையும் உரியவகையில் வெளிப்படுத்தி முடிந்தளவில் எமது சமூகத்துக்காக பங்காற்ற வேண்டும் என்ற விருப்பார்வத்துடன் அல்-இஹ்ஸான் நியூஸ்‌என்கின்ற செய்தித்தளத்தினை ஆரம்பமாக உலகத்தமிழ் பேசும் மக்களின் முன் கொண்டுவருவதில் அல்-இஹ்ஸான் ஊடக வலையமைப்புபெருமிதம் கொள்கின்றது. அல்ஹம்துலில்லாஹ்...

எதிர்வருகின்ற காலங்களில் இவ்விணையதளத்தின்‌ ஆங்கிலம், அரபு, சிங்களம் போன்ற மொழிகளிலான பதிப்புக்களை வெளியிடுவதற்கு தயாராக இருக்கின்றோம். இன்ஷாஅல்லாஹ்...

ஊடகத்துறையின் இளம் ஊடகர்களை வாசகர்கள் எதிர்பார்க்கும் உண்மையான, உடனடியான, முழுமையான செய்திகளையும் செய்தி சார் விடயங்களையும் உங்களின் அல்-இஹ்ஸான் நியூஸ்வெளிப்படுத்தும்.

புதிய ஊடகக் குழந்தையின் வளர்ச்சியில் உங்கள் ஒவ்வொருவரது ஆதரவும் பெருந்துணையாய் நிற்கும் என்பதே வெளிப்படை. உங்கள் எண்ணங்களை உங்கள் விமர்சனங்களை உங்கள் பகுதி செய்திகளை உங்கள் அல்-இஹ்ஸான் நியூஸ்இணையத்தில் வெளிப்படுத்துங்கள்.

நன்றி.
அல்-இஹ்ஸான் ஊடக வலையமைப்பு

Flag Counter

Free counters!