August 24, 2011.... AL-IHZAN Local News
அகில இலங்கை ஜம்இயதுல் உலமா மற்றும் தற்போது மர்ம மனிதன் தொடர்பாக பிரச்சினைகள் எழுந்துள்ள அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, புத்தளம், கண்டி, குருநாகல் மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களிலுள்ள பிரதான மஸ்ஜித்களின் பிரதிநிதிகளை இன்று செவ்வாய்க்கிழமை பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ்வை சந்தித்தித்துள்ளனர். பாதுகாப்புச் செயலாளரின் ஏற்பாட்டில் விசேட விமாங்கள் மூலம் அழைத்து வரப்பட்ட இவர்கள் பாதுகாப்பு அமைச்சில் ஏற்பாடு செய்யபட்டிருந்த மாநட்டில் பங்கு கொண்டுள்ளனர்.படங்கள்
அங்கு உரையாற்றியுள்ள பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ் புலிகளை அழித்த படையினருக்கு முகாம்களை சுற்று வளைக்கும் முஸ்லிம் வாலிபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது சிரமமான விடயமல்ல. சிலர் வதந்திகளை பரப்பி அமைதியை குழைக்க முயற்சிகின்றனர். அரசாங்கம் வடக்கு கிழக்கில் அபிவிருத்திகளை மேற்கொண்டு வருகின்றது அதனை சீர் குழைக்க எந்த தேவையும் அரசாங்கத்துக்கு இல்லை. அவசரகால சட்டத்தை நீடிக்க செய்ய இவ் வாறான வேலைகளை செய்ய அரசாங்கத்துக்கு எந்த அவசியமும் இல்லை. ஜனாதிபதி நினைத்தால் அவசர கால சட்டத்தை நீக்கலாம். அல்லது நீடிக்கவும் செய்யலாம்.
இது தொடர்பாக நீங்கள் மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும் எந்த வொரு தனிநபரும் சட்டத்தை கையில் எடுக்க அரசாங்கள் அனுமதிக்க போவதில்லை அவ்வாறானவர்களுக்கு உரிய தண்டனையை அரசாங்கம் வழங்க தயங்காது என்றும் தெரிவித்துள்ளார்.இதில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் மாவட்ட ரீதியாக கருத்துகளை முன்வைக்க சந்தர்பம் வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புச் செயலளர் தலைமையில் இடம்பெற்ற மாநாட்டில் மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலான, முப்படைகளின் கூட்டுத் தளபதி, விமானப்படை தளபதி, இராணுவ மற்றும் போலீஸ் தளபதிகள் கலந்து கொண்டுள்ளனர். அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரமும் நேற்று பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ்வை சந்தித்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்யுமாறு கேட்டிருந்தனர் என்பது குறிபிடத்தக்கது.
மாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதிகளுக்கு இப்தாரும் , இரவு உணவும் பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை நேற்று பாதுகாப்புச் செயலாளருடன் நடைபெற்ற சந்திப்பின் போது ஐம்இய்யத்துல் உலமா பொதுச் செயலாளர் மௌலவி முபாரக் ,உபத் தலைவர் அஷ்ஷெய்க் அகார் முஹம்மத், முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம்.அமீன், மற்றும் பல பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.அதில் நேற்று இரவு முதல் ரமழான் பெருநாள் முடியும் வரை இந்த மாவட்டங்களில் உள்ள சகல மஸ்ஜித்களுக்கும் உரிய பாதுகாப்பை வழங்குமாறு பாதுகாப்புச் செயலாளர் உயர் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்திருந்தார் என்பது குறிபிடதக்கது.
News:Lankamuslim
1 கருத்துரைகள் :
There no law prevails in Sri Lanka only barbarians rule...
Post a Comment