August 19, 2011.... AL-IHZAN Local News
குருநாகல் மாவட்டத்தில் மர்ம மனிதனின் தொல்லை அதிகரித்து வருவதால் மக்களிடையே அச்சமும் பீதியும் அதிகரித்து வருகின்றது. மர்ம மனிதன் இரு முஸ்லிம் பெண்களை இழுத்துச் சென்ற இரு வேறுபட்ட சம்பவங்களில் ஒரு பெண் மீது அசிட் வீசப்பட்டுள்ளது. மற்றொரு பெண் படுகாயம் அடைந்துள்ளார். குருநாகல் மாவட்ட சியம்பளாகஸ்கொட்டுவ – அம்மையன் வெவ முஸ்லிம் கிராமத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு வுளுச் செய்வதற்காக வீட்டுக்கு வெளியே குழாயடிக்குச் சென்ற பெண் ஒருவரை முகமூடியணிந்து வந்த மர்ம மனிதன் இழுத்துச் சென்ற சம்பவத்தில் பெண் படுகாயம் அடைந்துள்ளார்...
நீண்ட தூரம் இருட்டுப் பகுதிக்கு இழுத்துச்சென்ற சமயம், பெண் கூக்குரலிட்ட போது வாயை மூடிய மர்ம மனிதனின் கைவிரலை பலமாக கடித்த போது பெண்ணை விட்டு மாயமாக மறைந்துள்ளான். பெண்ணின் அலறல் கேட்டு இஷாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த மக்களும் ஊரவரும் ஒன்றுகூடி மர்ம மனிதனை தேடிய போதும் பலனில்லை. இச்சம்பவத்துக்கு மனிதர்கள் மூகமூடியுடன் வந்ததாக நேரில் கண்ட வீட்டுப் பெண்கள் கூறுகின்றனர்.
இதேவேளை, பறகஹகொட்டுவ கிராமத்தில் கடந்த செவ்வாய்கிழமை இரவு இஷா தொழுகைக்காக வுளுச் செய்வதற்கு வெளியே வந்த பெண் மீது தென்னை மரத்தில் ஏறிநின்ற மர்ம மனிதன் பாயமுற்பட்ட போது குறித்த பெண் கல்லினால் மனிதனைத் தாக்க முற்பட்ட சமயம் ஒருவித அசிட் திரவத்தை வீசிவிட்டு தப்பியோடியுள்ளான். இச்சம்பவத்தில் காயமுற்ற பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டார்.
இச்சம்பவங்களில் ஈடுபட்ட மர்ம மனிதர்கள் ஓடுவதை தவிர்த்து தாவிச் செல்வதையே தாம் கண்டதாக பெண்கள் தெரிவிக்கின்றனர். தாவிச் செல்லக்கூடிய வகையில் சப்பாத்து அணிந்திருப்பதாக கூறப்படுகின்றது.
இதேவேளை ஹொரம்பாவை, மெடிவெல கெதரை, மாராபிட்டிய, மடிகே, மிதியாலை போன்ற பிரதேசங்களிலும் பல சம்பவங்கள் கடந்த ஒரு வார காலமாக நிகழ் ந்து வருகின்றன. இச்சம்பவங்கள் காரணமாக புனித ரமழான் காலத்தில் மக்கள் பள்ளிவாசலுக்கு செல்வதில்லை. இரவு நேரங்களில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லத் தயங்குவதுடன் ஆண்களும் வீடுகளில் முடங்கிக் கிடக்க வேண்டிய நிலை ஏற்பட் டுள்ளது.-இது தினகரன் பத்திரிகையில் இன்று வெளியான செய்தி
0 கருத்துரைகள் :
Post a Comment