animated gif how to

மர்ம மனிதர்கள்: காத்தான்குடியில் பதட்டம்

August 20, 2011 |

August 20, 2011.... AL-IHZAN Local News

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பாலமுனைக் கிராமத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட மர்ம மனிதன் பதற்றத்தினால் பொலிசாருக்கும் பொதுமக்கள் சிலருக்குமிடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக பாலமுனை மற்றும் கர்பலா காத்தான்குடி ஆகிய பிரதேசங்களில் அமைதியின்மை ஏற்பட்டது.


காத்தான்குடியை அண்மித்த ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பாலமுனை கிராமத்தில் மர்ம மனிதர்கள் இருவரின் நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்ததையடுத்து அப்பகுதியில் பதற்ற நிலை காணப்பட்டது.இதையடுத்து நேற்றிரவு 11 மணியளவில் பாமுனை மற்றும் கர்பலா பிரதேசங்களில் பெலாலிசார் குவிக்கப்பட்டனர்...
பொலிசாருக்கும் பொதுமக்கள் சிலருக்குமிடையில் முரண்பாடு அதிகரிக்கவே பொலிசாரை நோக்கி பொதுமக்கள் சிலர் கற்களை வீசியுள்ளனர். இதன் பின்னர் பதற்ற நிலை அதிகரித்த போது அங்கு வரவழைக்கப்பட்ட இரானுவத்தினர் சப்த வேட்டுக்களை தீர்த்து பொதுமக்களை கலைத்துள்ளனர்.


இதன் போது காத்தான்குடி கடற்கரை வீதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறி மற்றும்வேன் அதே போன்று புதிய காத்தான்குடி கர்பலாவீதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் என்பவற்றின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன் சில ஹோட்டல் கடைகளின் முன்பகுதி கண்ணாடிகளும் உடைக்கப்பட்டுள்ளன. இதே போன்று சில வீடுகளிற்குள் இருந்த மின் குமிழ்கள் வீட்டின் கதவுகளும் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளன.
  
பின்னர், இன்று அதிகாலையில் காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள குட்வின் சந்தியில் டயர்கள் போட்டு எரிக்கப்பட்டன. இதையடுத்து அங்கு விரைந்த காத்தான்குடி நகர சபை தலைவர் அஷ்பர் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் உள்ளிட்ட பொதுமக்கள் சிலர் எரிந்து கொண்டிருந்த டயர்களை அகற்றி வாகனப்போக்குவரத்தை சீர் செய்தனர். தற்போது மேற்படி பிரதேசங்களில் பதற்ற நிலை காணப்படுகின்றன.


அதேநேரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வெள்ளிக்கிழமை மாலை அலரி மாளிகையில் இப்தார் நிகழ்வொன்றை நடத்தியிருந்தமையும், அதனை அவர் இலங்கை முஸ்லிம்களை சங்கைப்படுத்துவதற்காக மேற்கொண்டதாகவும் எம்மில் சிலர் அறிவித்திருந்தனர்.


அதேவேளை இங்கு மற்றுமொரு விடயத்தையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இப்போது சில வருடங்களுக்கு முன் சர்வதேச ஊடக தினத்தில் மஹிந்த ராஜபக்ஸ ஊடகவியலாளர்களுக்கு கௌரவமளிக்கும் நோக்குடன் விருந்துபசாரமொன்றை ஏற்பாடு செய்திருந்தார். எனினும் அவர் தலைமையிலான அரசாங்கம் ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறையை பிரயோகிப்பதாக காணம் காட்டி பல ஊடகவியலலாளர்கள் அந்த விருந்துபசாரத்தை பகிஸ்கரித்திருந்தனர். அரசாங்க சார்பு ஊடகவியலலாளர்களே மாத்திரே மஹிந்தவின் விருந்துபசாரத்தில் பங்கேற்று மகிழ்ந்தனர் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!