August 22, 2011.... AL-IHZAN Local News
புத்தளம் பகுதியில் முஸ்லிம்களுக்கும், பொலிஸாருக்கும் பெரும் மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிறீஸ் மனிதன் விவகாரம் தொடர்பிலேயே இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாகவும், பொது மக்களின் பலத்த தாக்குதல் காரணமாக பொலிஸ் கன்ஸ்டபிள் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் பல முஸ்லிம்களும் காயமடைந்துள்ளதாகவும் அறியவருகிறது.
தற்போது புத்தளம் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் பெரும் பதற்றம் நிலவுவதாகவும், பல்வேறு இடங்களிலும் இருந்தும் புத்தளம் நோக்கி இராணுவம் மற்றும் பொலிஸார் விரைந்துள்ளதாகவும், இதனால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன், இளைஞர்கள் பெருமளவு வீதிகளில் கூடியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இணைப்பு-2
ஒரு போலீஸ் சிப்பாய் கொல்லப்பட்டதுடன் ஐந்து பொதுமக்கள் துப்பாக்கி சூட்டியில் காயம்
புத்தளம் புத்தளம் புறநகர பகுதியான மணல் குன்று பகுதியில் இரு மர்ம மனிதர்கள் என்று தெரிவிக்கப்படும் மனிதர்கள் பொதுமக்களினால் பிடிக்கப்பட்டு மரத்தில் கட்டபட்ட நலையில் அங்கு வந்த போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது போலீசார் துப்பாக்கி பிரயோகம் செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் பின்னர் பொலிசாரால் கொண்டுசெல்லப்பட்ட மர்ம மனிதர்கள் என்று தெரிவிக்கப்படும் இருவரும் விடுவிக்கப் பட்டதாக தெரிவித்து சற்றுமுன்னர் புத்தளம் நகரபகுதில் வீதிகளில் டயர்கள் போட்டு எரிக்கப்பட்டுள்ளது.
இதன் போது சம்பவ இடத்துக்கு வந்த போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மீண்டும் மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது...
தற்போதையா நிலையை கருத்தில் கொண்டு புத்தளம் ஜம்இயதுல் உலமா , மற்றும் புத்தளம் பெரிய பள்ளி நிர்வாகம் ஆகியன நிலைமை தொடர்பாக கூட்டம் ஒன்றை நடத்திவருவதாக ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது புத்தளம் நகர் முழுவதும் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
இணைப்பு-1புத்தளம் பகுதியில் முஸ்லிம்களுக்கும், பொலிஸாருக்கும் பெரும் மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிறீஸ் மனிதன் விவகாரம் தொடர்பிலேயே இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாகவும், பொது மக்களின் பலத்த தாக்குதல் காரணமாக பொலிஸ் கன்ஸ்டபிள் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் பல முஸ்லிம்களும் காயமடைந்துள்ளதாகவும் அறியவருகிறது.
தற்போது புத்தளம் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் பெரும் பதற்றம் நிலவுவதாகவும், பல்வேறு இடங்களிலும் இருந்தும் புத்தளம் நோக்கி இராணுவம் மற்றும் பொலிஸார் விரைந்துள்ளதாகவும், இதனால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன், இளைஞர்கள் பெருமளவு வீதிகளில் கூடியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
1 கருத்துரைகள் :
Aiyyoooo Aiyoooo Antha Constablukku stomach perisaaa?
Post a Comment