August 12, 2011.... AL-IHZAN Local News
பொத்துவில் பாக்கியவத்தை பகுதியில் நேற்று மர்மமனிதர்களின் நடமாட்டத்தால் பொதுமக்களுக்கும் பொலிசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
பாக்கியவத்தை பகுதியில் உள்ள சில வீடுகளை நேற்று இரவு 11 மணியளவில் மர்மனிதர்கள் தட்டியுள்ளனர். இதனையடுத்து பிரதேச மக்கள் இரண்டு மர்ம மனிதர்களையும் துரத்தி சென்ற போது இடைநடுவே இருந்து மேலும் இரண்டு மர்ம மனிதர்கள் இவர்களுடன் இணைந்து ஓடியுள்ளனர்.
இதனையடுத்து நான்கு மர்ம மனிதர்களும் குறித்த பிரதேசத்தில் இருந்த பாழடைந்த வீடொன்றினுள் புகுந்துள்ளனர். எனினும் மர்ம மனிதர்கள் வசம் துப்பாக்கி காணப்பட்டதால் பிரதேச மக்கள் அவர்களை நெருங்க வில்லை. இதனையடுத்து அங்கு ஒளிந்திருந்த மர்மமனிதர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.
பின்னர் குறித்த பாழடைந்த வீட்டினுள் சென்ற பிரதேசமக்கள் அங்கு பொலிஸாரின் சீருடைகள், தொப்பிகள், காலணிகள், அடையாள அட்டையின் பிரதிகள், மற்றும் பாஸ்போர்ட் பிரதிகள், ஆடைகள், தேர்தல் இடாப்பு கோப்பு, கத்தி முதலான பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.
சம்பவத்தையடுத்து அரை மணிநேரத்தின் பின் குறித்த இடத்திற்கு வந்த பொலிஸாருக்கும் பிரதேச மக்களுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டு பின் அது கைகலப்பாக மாறியுள்ளது. இதனால் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதோடு பொலிஸ் வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்..

0 கருத்துரைகள் :
Post a Comment