animated gif how to
Showing posts with label osama. Show all posts
Showing posts with label osama. Show all posts

ஒஸாமா பின்லேடன் சாமர்த்தியம் மிக்கவர் - ஒப்புக்கொள்கிறது அமெரிக்கா

June 18, 2011 |

June 18, 2011.... AL-IHZAN World News
அல்-குவைதா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லாடன், கடந்த மே 2ம் தேதி, பாகிஸ்தான் அபோதாபாத்தில், அமெரிக்கப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து, ஒசாமாவின் இடத்தை, யார் நிரப்பப் போகின்றனர் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.  இதனால் உலக நாடுகளால் தேடப்படும் ஒருவரான அய்மேன் அல் ஜாவாஹிரி, அல்-குவைதா அமைப்பின் புதிய தலைவரானார்.

இது பற்றி அமெரிக்க ராணுவ அமைச்சர் ராபர்ட் கேட்ஸ் அளித்த பேட்டியில், அல்-குவைதா தலைவர் பொறுப்பை ஏற்றுள்ள அய்மேன் அல் ஜாவாஹிரிக்கு, ஆதரவாளர்களை ஒன்று திரட்டி செயல்படும் திறன் இல்லை.

ஒசாமா பின்லாடனைப் போன்ற சாமர்த்தியம் இவருக்கு கிடையாது. அல்-குவைதா பயங்கரவாத அமைப்புக்கு அய்மேன் தேர்வு செய்யப்பட்டதில் இருந்து, அந்த அமைப்பு ஒசாமாவின் வழியைப் பின்பற்ற இன்னும் உயிரோட்டத்துடன் இருக்கிறது என்பது நினைவூட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாகத்தான் இருக்கிறது என்பதும் தெரிகிறது, என்றார்.

ஒஸாமா ஜனாஸாவை கண்டுபிடிக்க கடலில் தேடுதல் ஆரம்பம்

June 12, 2011 |

June 12, 2011.... AL-IHZAN World News
வடக்கு அரபிக்கடல் பகுதியில் அமெரிக்க கடற்படையினர் அடக்கம் செய்த பின்லேடன் உடலை தேடி கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்காவின் புதையல் வேட்டைக்காரர் பில் வாரன் ஈடுபட்டுள்ளார். பின்லேடனை அமெரிக்க கடற்படையின் சீல் பிரிவு கமாண்டோக்கள் பாகிஸ்தானின் அபோதாபாத் பகுதியில் கடந்த 2ம் திகதி சுட்டுக் கொன்றனர்.

பின்லேடனின் உடல் ஹெலிகாப்டர் மூலம் அரபிக்கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யு.எஸ்.எஸ் கார்ல் வின்சன் போர்க்கப்பலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு டி.என்.ஏ உள்பட எல்லா வித சோதனைகளையும் முடித்து பின்லேடனின் உடல் கடலில் அடக்கம் செய்ததாக அமெரிக்கா செய்தி வெளியிட்டது....

ஒஸாமா ஏற்கனவே வபாத்தாகிவிட்டார் - ஈரான்

May 10, 2011 |

May 10, 2011.... AL-IHZAN World News

அல் கைதாவின் தலைவர் ஒஸாமா பின்லேடன் இயற்கை மரணமடைந்து வருடங்கள் கடந்துவிட்டதென தெரிவித்த ஈரான் பாதுகாப்பு அமைச்சர் அமெரிக்கா ஆடியவை அனைத்தும் நாடகமென விளக்கினார். போரில் அடைய முடியாத இலட்சியத்தை அமெரிக்கா இயற்கை மரணத்தில் அடைந்து கொள்ள எடுத்த பொய்யான நாடகமே ஒஸாமா பின்லேடனை சுட்டுக்கொன்றதாக விடுத்த அறிவித்தல் என்றும் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கடுமையாகச் சாடினார். 

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் நீண்டு செல்லும் பிரயோசமில்லாத போரை அமெரிக்க மக்கள் வெறுக்கத் தொடங்கியுள்ளனர். அதிகரித்துச் செல்லும் போர் செலவீனகளால் அமெரிக்காவின் பொருளாதாரம் நலிவடைந்து செல்கின்றது. இதனால்..........

ஜெயித்தது யார், ஒபாமாவா ? ஒசாமாவா? (வீடியோ இணைப்பு)

May 07, 2011 |

May 07, 2011.... AL-IHZAN India News


makkamasjid
(இங்கே கிளிக் செய்யுங்கள்)

அஷ் சஹீத் உஸாமா பின் லாதினுக்கு காத்தான்குடியில் ஜனாஸா தொழுகை

May 06, 2011 |

May 06, 2011.... AL-IHZAN Local News
கடந்த முதலாம் திகதி அமெரிக்கப் படைகளால் கொலை செய்யப்பட்ட அஷ் சஹீத் உஸாமா பின்லாதினுக்குஇன்று காத்தான்குடியில் ஜனாஸா தொழுகை நடாத்தப்பட்டது.

காத்தான்குடி நகர சபையின் தலைவர் விடுத்த வேண்டுகோளையடுத்து காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் ஜும் ஆ பள்ளிவாயலில் இன்றைய ஜீம் ஆ தொழுகையின் பின்னர் ஜனாஸா தொழுகை நடாத்தப்பட்டது.
தொழுகையினை மௌலவி மஸுத் காஸிமி நடாத்தினார். இதன் போது துஆ பிராத்தனையும் நடாத்தப்பட்டது.
இந்த ஜனாஸா தொழுகையில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா மற்றும் காத்தான்குடி நகர சபை தலைவர் அஸ்பர் உள்ளிட்ட பிரமுகர்கள், முக்கியஸ்த்தர்கள் என பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

ஷஹீத் ஒசாமாவுக்கு ஜனாசா தொழுகை!

|

May 06, 2011.... AL-IHZAN India News
சென்னை அண்ணா சாலை மக்காஹ் மஸ்ஜிடில் இன்று (06/05/2011) ஜெயித்தது யார்? ஒசாமாவா? ஒபாமாவா? என்ற தலைப்பில் மௌலவி.சம்சுதீன் காசிமி அவர்கள் ஜும்மா  உரை நிகழ்த்தினார்கள்.அதில் அமெரிகாவின் அநீதிகளை பட்டியலிட்டதோடு வசதிமிக்க குடும்பத்தில் பிறந்த ஒசாமா முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கெதிராக ஆயுதம் ஏந்திய வரலாற்றை எடுத்து சொன்னார். அமெரிக்காவின் அநீதி தொடரும் பட்சத்தில் ஓராயிரம் ஒசாமாக்கள் உருவாகி கொண்டே இருப்பார்கள் என்றார்.ஏற்கனவே இறந்து விட்ட ஒசாமாவை தற்போது கொன்றதாக நாடகம் நடத்தும் ஒபாமாவின் அரசியலை தோலுரித்தார்.

ஒசாமா ஏற்கனவே இறந்து விட்டாலும் செய்தி தற்போது உறுதி செய்யப்பட்டு விட்டதால் அவருக்கு ஜனாஸா தொழுவதற்கு தடை இல்லை என்ற காசிமி ஒசாமா பெயரை சொல்வதற்கே தமிழ்நாட்டில் பலர் பயப்படுவதாகவும் இந்திய பிரதமரை கொன்ற இந்தியாவில் தேடப்படும் குற்றவாளிகள் கொள்ளப்படும் போது தமிழக முதல்வர் கவிதை வாசிக்கும் போது இந்தியாவில் எந்த குற்றமும் இழைக்காத ஒசாமாவுக்கு தொழுகை நடத்த தடை ஏதும் இல்லை என்றார்.  இனி முஸ்லிம் சமூகத்தில் பிறக்கும்..........

உஸாமா கைது செய்யப்பட்டு பின்னர் படுகொலை செய்யப்பட்டார்: அவரின் மகள் தகவல்

May 05, 2011 |

May 05, 2011.... AL-IHZAN World News
M.ரிஸ்னி முஹம்மட்

அமெரிக்க நிர்வாகம் நிராயுத பாணியாக இருந்த அஷ் ஷெய்க் உஸாமா பின் லாதினை படுகொலை செய்த காட்சிகள் அடங்கிய படங்களைவெளியிட மறுத்துள்ளது .அமெரிக்க தேசிய பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று வெள்ளை மாளிகை தெரிவிக்கின்றது அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா நேற்று புதன் கிழமை இந்த முடிவை அறிவித்துள்ளார் இந்த முடிவுக்கு CIA உளவு அமைப்பின் தலைவர் பனெட்டா தவிந்த பாதுகாப்பு செயலாளர் ரோபட் கேட்ஸ் உட்பட ஏனைய உயர் மட்ட அதிகாரிகள் ஒபாமாவின்  முடிவை ஆதரித்துள்ளனர்.


அஷ் ஷெய்க் உஸாமா பின் லாதின் படுகொலை செய்யப்பட்டதை மீட்டும் உறுதி செய்த வெள்ளை மாளிகை அவரின் DNA பரிசோதனை இன்னும் நடத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது அஷ் சஹீத் அஷ் ஷெய்க் உஸாமா பின் லாதின் இருந்ததாக அமெரிக்கா தெரிவித்த வீட்டில் அமெரிக்கா தனது படுகொலையை அரங்கேற்றும்போது கொல்லப்பட்ட மூவரின் படங்களை வெளியிட்டுள்ளது அத்துடன் அமெரிக்கா கழுகுகள் பயணித்த சேதமடைந்து விழ்ந்த ஹெலிகொப்டர் படங்களையும் பின்னர் அந்த ஹெலிகொப்டர் அழிக்கப்பட்ட படங்களையும்  வெளியிட்டுள்ளது.  (படங்கள் கோரமானவை)..........

ஒசாமா கொலை பாகிஸ்தான் இறைமைக்கு விடுத்துள்ள அச்சுறுத்தலாகும்

May 04, 2011 |

May 04, 2011.... AL-IHZAN Local News

அமெரிக்கா பாகிஸ்தானிற்குள் தனது படையினரை அனுப்பி ஒசாமா பின்லேடனை கொலை செய்துள்ளதுள்ளதோடு ஒசாமாவின் சடலத்தினை எடுத்தும் சென்றுள்ளது. இது ஓர் மனித உரிமை மீறலாகும் என பிரதமர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
‘அமெரிக்கா பாகிஸ்தானுள் நுழைந்து இவ்வாறான செயலை செய்தமை அந்த நாட்டின் இறைமைக்கு விடுத்துள்ள அச்சுறுத்தலாகும். மே மாதம் 19 ஆம் திகதியும் அமெரிக்கா போலவே தாமும் செயற்பட்டதாகவும் ஆனால் அமெரிக்கா அதனை போர்க்குற்றம் என இலங்கை மீது குற்றம் சாட்டி வருகின்றது”. எனவும் அவர் தெரிவித்துள்ளார் கொழும்பு புறக்கோட்டையில் நடைபெற்ற நிகழவொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்

இஸ்லாத்திற்காக ஒஸாமா போராடினார் - அலவி மௌலான தெரிவிப்பு

|

May 04, 2011.... AL-IHZAN Local News

1967ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ம் திகதி சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் பிறந்த சிவில் இன்ஜினியரும் பொருளியல் பட்டதாரியுமான ஒசாமா பின்லேடன் ஏகாதிபத்திய நாடுகளினால் இஸ்லாத்திற்கு முரணாக மேற்கொண்ட அக்கிரமங்களை பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில் 1979ஆம் ஆண்டு அல் கைதா இயக்கத்தை ஆரம்பித்தார். 

இவர் இஸ்லாமிய மார்க்க பற்றுமிக்கவர். இவரது தீவிரவாத செயல்கள் யாவும் இஸ்லாத்திற்கு முரணானவர்களுக்கு எதிராகவே இருந்தது. இவரது இவ் இயக்கம் இல்லாது இருந்தால் இன்று முஸ்லிம் நாடுகளை ஏகாதிபத்திய நாடுகள் அடக்கி ஒடுக்கியிருக்கும்.

ஒசாமா பின்லேடன் பயங்கரவாதியா? இஸ்லாமிய கொள்கை தீவிரவாதியா? என்பதை ஏகாதிபத்திய நாடுகள் தீர்மானிக்க முடியாது. அதை தீர்மானிக்கும் சக்தி படைத்தவன் அல்லாஹ் ஒருவனுக்கே உரியது. இன்று இஸ்லாமிய நாடுகள் ஏகாதிபத்திய நாடுகளினால் அடக்கி......

யார் இந்த உஸாமா?

May 03, 2011 |

May 03, 2011.... AL-IHZAN World News
1957-ஆம் ஆண்டு சவூதி அரேபியாவின் ரியாதில் பிறந்தார் உஸாமா பின் முஹம்மது பின் அவாத் பின் லேடன். உஸாமாவை இஸ்லாமிய தீவிரவாதத்தின் அதிகாரப்பூர்வ பிரதிநிதியாக மேற்கத்திய உலகம் கருதுகிறது. உஸாமா சவூதி அரேபியாவின் மன்னர் குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புடைய கோடீஸ்வர வர்த்தகர் முஹம்மது பின் அவாத் பின் லேடனின் மகனாவார்.

இஸ்லாமிய நம்பிக்கைகளில் உறுதி கொண்டதாக அவருடைய இளமைப்பருவம் அமைந்திருந்தது. 1968 ஆம் ஆண்டு முதல் 1976-ஆம் ஆண்டு வரை ரியாதில் அல் தாகர் மோடல் ஸ்கூலில் படித்த உஸாமா பின்னர் கிங் அப்துல் அஸீஸ் பல்கலைக் கழகத்திலிருந்து பொருளாதாரத்திலும், வர்த்தக நிர்வாகத்திலும் பட்டம் பெற்றார். 1979-ஆம் ஆண்டு உஸாமா சிவில் எஞ்சினீயரிங்கில் பட்டம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், பட்டப்படிப்பை மேற்கொள்ளும்போது 3-வது ஆண்டு உஸாமா கல்லூரியிலிருந்து வெளியேறியதாகவும் தகவல் உண்டு. மார்க்கரீதியான காரியங்களில் உஸாமா மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். ஒரு கவிஞராகவும் உஸாமா திகழ்ந்தார். பல்கலைக்கழகத்தில் பயிலும் பொழுது உஸாமா எகிப்தை மையமாகக் கொண்டு செயல்படும் இஃவானுல் முஸ்லிமீன் இயக்கத்துடன் தொடர்பை ஏற்படுத்திக்

உசாமாவின் மரணம் தொடர்பில் வெளியிடப்பட்ட புகைப்படம் போலியா?

May 02, 2011 |

May 02, 2011.... AL-IHZAN World News

உசாமா பின் லாதன் மரணித்த பின் எடுக்கப்பட்டதாக கூறி செய்திச் சேவைகள் வெளியிட்டு  எமது இணையத்திலும் வெளியிடப்பட்ட புகைப்படம் போலியானது என்னும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது பரவலாக பேஸ்புக் போன்ற தளங்களில் பகிரப்படும் இவ்விடயத்துக்கான சந்தேகத்தை வலுப்படுத்தும் படத்தொகுப்பு வாசகர்களுக்காக வெளியிடப்படுகின்றது.
இது தொடர்பாக நாம் டிஜிட்டல் புகைப்படத்துறையில் அனுபவம் பெற்ற ஒருவரிடம் கருத்துக் கேட்ட பொது, புகைப்படம் போலியாக தயார் செய்யப்பட்டுள்ளதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். புகைப்படம் வேறொரு சடலத்தின் முகத்தின் மீது பொருத்தப்பட்டது போல் தோன்றும் இடங்களில் காணப்படும் தெளிவின்மை புகைப்பட மாற்றும் மென்பொருட்களை பாவித்து செய்யப்பட்டிருக்கலாம் என அவர் விளக்கினார்.

Video

ஒஸமாவின் ஜனாஸாவை விளம்பரப்படுத்துகிறது அமெரிக்கா, குடும்பத்தினரும் கைது

|

May 02, 2011.... AL-IHZAN World News

அல் காய்தா தலைவர் ஒசாமா பின்லேடனின் 2 மனைவிகளும், 6 பிள்ளைகளும் கைது செய்யப் பட்டுள்ளதாக ஊடகத் தகவல் ஒன்று குறிப்பிடுகிறது.

பாகிஸ்தானின் அப்போட்டாபாத் நகரில் அமெரிக்கப் படையினரின் தாக்குதலில் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டார். அவரது உடலும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இஸ்லாமாபாதுக்கு வடக்கே 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலைப்பகுதியில் பாகிஸ்தான் படையினர் இன்று அதிகாலை நடத்திய தேடுதல் வேட்டையின்போது ஒசாமாவின் 6 பிள்ளைகளும், 2 மனைவிகளும் மற்றும் அவருக்கு நெருக்கமான 4 நண்பர்களும் கைது செய்யப்பட்டதாக துன்யா தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன

ஆப்கனுக்கு கொண்டு செல்லப்படுகிறது பின்லேடன் ஜனாஸா

அமெரிக்க படைகளால் கொல்லப்பட்ட பின்லேடனின் ஜனாஸா ஆப்கானிஸ்தானில் இருக்கும் பார்கிரம் விமான தளத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு வைத்து ஒசாமாவின் ஜனாஸாவை பத்திரிகையாளர்களுக்கு காட்ட முடிவு செய்யப்படுள்ளதாக அமெரிக்க செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. 
அமெரிக்க: செப்டம்பர் 11 இரட்டை கோபுரம் தாக்குதல் அமெரிக்க சதியே

Dr.Zakir Naik in Tamil

                                                            9/11 Was An INSIDE JOB 

உஸாமா பின் லேடன் மரணம்-அமெரிக்கா தகவல்

|

May 02, 2011.... AL-IHZAN World News

வாஷிங்டன்:அல்காயிதா போராளி இயக்கத்தின் தலைவர் உஸாமா பின் லேடன் மரணித்துவிட்டதாகவும், அவருடைய உடல் அமெரிக்கா வசம் உள்ளதாக அமெரிக்கா அதிகாரிகளை மேற்கோள்காட்டி அமெரிக்கா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்து அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா விரைவில் அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளார்.
உஸாமா பின் லேடன் அமெரிக்காவின் கண்களில் விரலை விட்டு ஆட்டியவர். செப்டம்பர் 11  தாக்குதலுக்கு பிறகு அமெரிக்காவின் மிகப்பெரிய எதிரியாக கருதப்பட்டார். அவரை பிடிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளாக அமெரிக்கா லட்சத்திற்கு மேற்பட்ட ராணுவ வீரர்களுடன் ஆப்கானை ஆக்கிரமித்து அப்பாவிகளை கொலை செய்துவருகிறது. இந்நிலையில் உஸாமா பின் லேடன் இறந்துவிட்டதாக அமெரிக்கா ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ பாகிஸ்தானில் நடந்த தேடுதல் வேட்டையின் போது சுட்டுக்கொன்றதாக கூறப்படுகிறது.

Flag Counter

Free counters!