August 10, 2011.... AL-IHZAN Local News
நாடு பூராகவும் பரவிவரும் பெண்களை இரத்தம் ஓடச் செய்து பலியிடுதல் என்பது இப்போது கிழக்கு மாகாணத்திலும் பரவி வருகிறது. சில தினங்களாக மட்டக்களப்பு எல்லைக் கிராமங்களான ரிதிதன்ன, ஜெயந்தியாய பகுதிகளிலும் வெலிகந்தைப் பகுதியில் கட்டுவன்வில, செவனபிட்டி பகுதியிலும் இந்தச் செய்தியால் மக்கள் பீதியடைந்திருந்தனர்.
நேற்று ஓட்டமாவடிப் பகுதியில் நாவலடி, கேணிநகர், அமீரலி கிராமம், பாலை நகர் போன்ற எல்லைப் புற
கிராமங்களிலிருந்து மக்கள் தற்காப்பிற்காக அங்கிருந்து வெளியேறி பிற பகுதிகளுக்கு சென்றிருந்தனர். ஆண்கள் மாத்திரம் காவலுக்கு இரவு நேரங்களில் தங்கியிருந்தனர்...
இன்று இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் ஒன்று நாவலடியில் வசிக்கும் பெண்ணொருவரின் வீட்டுக்கு தண்ணீர் கேட்டுச் சென்ற இளைஞர் ஊசிபோன்ற கூரிய ஆயுதத்தைக் கொண்டு தாக்கியுள்ளார். இதனால் இரத்தம் வெளியேறி இப்பெண் மயக்கமுற்ற நிலையில் மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.

பின்னர் ஊரவர்கள் கூடி அந்நபரைப் பிடித்து வாழைச்சேனைப் பொலஸில் ஒப்படிடைத்தனர். பொலிஸ் இவரை கைது செய்யாது தப்பியோட விட்டதால் கோபமடைந்த ஊர்மக்கள் ஓட்டமாவடி பிரதான வீதியில் திரண்டு போராட்டம் நடாத்திக் கொண்டிருக்கி்ன்றனர். இச்சம்பவத்தின் போது போலீஸ் மக்களை நோக்கிச் சுட்டதில் ஒருவர் தலையில் காயமுற்று வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். கொழும்பு – மட்டக்களப்பு பிரதான போக்குவரத்துப் பாதையும் மட்டக்களப்பு – திருகோணமலை போக்குவரத்துப் பாதையும் இதனால் முற்றாகத் தடைப்பட்டுள்ளது.
அண்மையில் இதே போன்ற நிகழ்வுகள் பல எல்லைப்புற கிராமங்களில் நடந்திருக்கின்றன. இரக்காமத்திலும் ஒரு பெண்ணை தாக்கிய இளைஞர் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டும் பொலிஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் மக்கள் ஆத்திரமடைந்து பொலிஸைத் தாக்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பெண்களை இரத்தப் பலி கொடுப்பது புதையல் எடுப்பதற்காக இருக்கலாம் என்று மக்கள் நம்புகின்றனர். நாடுபூராகவும் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதால் அவதானமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நன்றி: கல்குடா முஸ்லிம்ஸ் இணையம்
0 கருத்துரைகள் :
Post a Comment