உலகக் கல்வி, மார்க்கக் கல்வி என்று அல்குர்ஆன் எவ்விடத்திலும் கல்வியை பிரித்துப்பார்க்கவில்லை என்று அஷ்ஷெய்க் யூசுப் முப்தி தெரிவித்துள்ளார். அநுராதபுர, நாச்சியாந்தீவில் நடைபெற்ற அரபுக் கல்லூரி திறப்பு விழாவொன்றில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
பாடசாலைகளிலிருந்து இஸ்லாமிய அறிஞர்கள் உருவாக வேண்டும். இன்று பாடசாலைகளில் கற்கும் மாணவர்கள் சிந்தனா ரீதியாக இன்று மதம் மாறியுள்ளார்கள். எனவே பாடசாலைக் கல்வியையும் அல்லாஹ்வுக்காக கற்கிறேன் என்ற மனநிலை உருவாக்கப்பட வேண்டும்.
இக்ராஹ் பிஸ்மி ரப்பிக்க என்றுதான் குர்ஆனின் முதல் வசனம் ஆரம்பிக்கிறது. வெறுமனே இக்ராஹ் வாசிப்பீர் என்று கூறவில்லை. எனவே எந்தக் கல்வியை படித்தாலும் அல்லாஹ்வின் பெயரால் படிக்க வேண்டும் என்பது முக்கியமானது. அதன் பொருள் எதனையும் படிக்கலாம். ஆனால் உன்னைப் படைத்தவனை மறந்து படிக்க முடியாது என்பதாகும்.
ஒவ்வொருவருக்கும் அல்லாஹ் தந்த திறமைகள் வளங்கள் அமானிதங்களாகும். அவற்றை ஒவ்வொருவரும் தனது இறைவனை உலகிற்கு அறிமுகப்படுத்தவும், அவனது மார்க்கத்தை பூமியில் அமுல் நடத்தவுமே படிக்கிறேன் என்ற சிந்தனையுடன் படிக்க வேண்டும். கல்வியில் துன்யாக் கல்வி, தீன் கல்வி என்ற வித்தியாசமில்லை.
ஷஹீதின் இரத்தத்தைவிட பேனாவின் மை மேலானது என்று கூறப்பட்டதற்கு காரணம் இரத்தத்தின் பின் விளைவுகள் மட்டுப்படுத்தப்பட்டதாகும். மாறாக மையின் தாக்கம் மறுமைவரை நீடிக்கும் என்றார்.
0 கருத்துரைகள் :
Post a Comment