animated gif how to

கியாமத் நாளின் சில அடையாளங்கள்!

March 09, 2012 |

-முஹம்மத் ஜான்ஸின்-

செல்வம் செல்வந்தர்களிடையே பகிரப்படும். ஏழைகளுக்கு அதிலிருந்து பலன் கிடைக்காது. ஸகாத் கொடுப்பது மக்களுக்கு ஒரு தடையாக காணப்படும். பள்ளிவாசல்களில் சத்தங்கள் உயர்த்தப்படும் போது (பள்ளிவாசல்களுக்காக சண்டைகள் இடம்பெறும்). மக்களின் தலைவர்கள் மிகவும் கெட்டவர்களாக இருப்பார்கள் (இயக்கங்களின் தலைவர்கள்) . மக்கள் ஒருவரிடம் ஏதாவது எதிர்பார்த்து அவரை கன்னியப்படுத்துவார். அதிகமாக வைன் அருந்தப்படும். அக்காலத்தில் சூடான காற்று வீசும் அல்லது பூமி அவர்களை விழுங்கிவிடும் அல்லது அவர்கள் மிருகங்களாக உருமாற்றப்படுவார்கள்.

முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது,

'எனது உம்மத்தில் சிலரை பூமி விழுங்கிவிடும். இன்னும் சிலர் மிருகங்களாக உருமாற்றம் பெருவார்கள். இன்னும் சிலர் மீது கல்மாரி பொழியப்படும்'. அது எப்போது நிகழும் என ஒருவர் கேட்ட போது இசைக்கருவிகளும் பாடகர்களும் மக்களிடையே பிரபல்யமாக இருக்கும் போதும் அதிகமாக மது அருந்தப்படும் போதும். –அறிவிப்பவர் :இம்ரான் இப்னு ஹுஸைன் (ரலி) அவர்கள்.

ஒட்டகங்கள் பிரயாணத்துக்கான வாகனமாக பாவிக்கப்பட மாட்டாது. பூமியின் தூர அளவு குறையும் (வேகமான பிரயாண வசதிகள்). குதிரைகள் யுத்தத்துக்காக பாவிக்கப்பட மாட்டாது. முஸ்லிம்கள் பைசான்தினைக் வெற்றிகொள்வார்கள். அத்துடன் கொண்ஸ்டான்டினோபில் அவர்கள் வசம் வரும். யூதர்கள் மீண்டும் கன்ஆனில் (இஸ்ரேலில்) ஒன்று கூடி வாழ்வார்கள்.உயரமான கட்டிடங்கள் கட்டப்படும்.

பகுத்தறிவு மறைந்து போகும். மக்கள் கொலைகளைச் செய்யக்கூடிய அளவுக்கு ஒருவரை ஒருவர் உதாசீனம் செய்பவர்களாக மாறுவார்கள். சினா மற்றும் விபச்சாரம் பெருகிவிடும். மது சர்வசாதாரணமாக எல்லோராலும் அருந்தப்படும். ஆண்களின் எண்ணிக்கை குறைந்து பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். விபச்சாரம் செய்பவர்கள் மீது மருந்தில்லாத நோய் (எய்ட்ஸ்) இறக்கப்படும். மக்கள் ராசி பலன்களை நம்பி கலாகதிரை நிராகரிப்பர். தற்கொலைகள் அதிகரிக்கும். யூப்பிரடிஸ் நதி வற்றும். அதன் கீழ் தங்கம் வெளியாகும். மக்கள் அதற்காக சண்டையிட்டு மடிவர். பூமியதிர்ச்சிகள் அதிகரிக்கும். நேரம் வேகமாகச் செல்லும். கொலைகள் அதிகரிக்கும். செல்வம் பெருகும். பெண்கள் ஆடை அணிந்தும் அணியாதவர்களாக இருப்பார்கள். 

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!