animated gif how to

உலக முஸ்லிம்களை ஒன்றிணைக்கும் புதிய சமூக வலைத்தளம் 'salam world' ரமழானில் அறிமுகம்!

June 14, 2012 |

-முஹம்மட் இஹ்ஸான்-
பேஸ்புக், ட்வீட்டர் ஆகிய சமூக இணையதளங்களை போன்ற ஒரு புதிய சமூக இணையத்தளம் வருகின்ற ரமழான் மாதம் அறிமுகமாகவுள்ளது.
ஹலால் சம்மந்தமான இந்த இணையதளத்திற்கு ‘சலாம் வேர்ல்ட் – 'Salam World’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இது முஸ்லிம்களுக்கான ஒரு பாதுகாப்பு வலைத்தளமாகவும், பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கிற்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ளது.(வீடியோ இணைப்பு)
இதனால் இஸ்லாத்தில் அனுமதிக்கப் படாதவை இந்த வலைத்தளத்தில் அனுமதிக்கப்படமாட்டது. உதாரணமாக குற்ற நடவடிக்கைகள், ஏமாற்றுதல், சூதாட்டம் மற்றும் போதை விளம்பரங்கள் போன்ற இஸ்லாத்திற்கு எதிரான அனைத்தும் இதில் தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.
இது போன்ற வலைத்தளத்தினை உருவாக்குவதன் நோக்கமே தீங்கு விளைவிக்க கூடிய விசயங்களில் இருந்து விடுதலை பெறவும், கலாச்சாரம் மற்றும் குடும்ப பின்னணியின் மதிப்பை அங்கீகரிக்கவும், முஸ்லிகளின் தேவையை உணர்ந்தே இந்த ‘Salam World’ சமூக இணையததளம் ஆரம்பிக்கப்படுகிறது.
மேலும் ஹுர்ரியத் தினசரி ஊடங்கத்திற்க்கு பேட்டி அளித்த வலைத்தளத்தின் உரிமையாளர் அப்துல் வாஹீத் நிஜாயோவ், முஸ்லிம்களுக்கு இணையத்தளத்தில் அத்துணை பிரதிநிதித்துவம் இல்லாமல் இருக்கிறது, நாம் இந்த சூழ்நிலையை மாற்ற வேண்டும், மேலும் இணையத்தள மஸ்ஜித்தை கட்டவில்லை, மாறாக ஹலாலான ஒரு சூழ்நிலை மாற்றத்தை முஸ்லிம்களுக்கு இடையில் ஏற்ப்படுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
இன்னும் மூன்று வருடங்களில் குறைந்தது 50–மில்லியன் பயனாளர்களை இந்த இஸ்லாமிய இணையதளம் கைப்பற்றும் என்றும் அவர் தெரிவித்தார்.


இணையத்தளம்: Salam World

1 கருத்துரைகள் :

Islam said...

Alhamthulilah

Post a Comment

Flag Counter

Free counters!