animated gif how to

ஒஸாமா பின்லேடன் சாமர்த்தியம் மிக்கவர் - ஒப்புக்கொள்கிறது அமெரிக்கா

June 18, 2011 |

June 18, 2011.... AL-IHZAN World News
அல்-குவைதா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லாடன், கடந்த மே 2ம் தேதி, பாகிஸ்தான் அபோதாபாத்தில், அமெரிக்கப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து, ஒசாமாவின் இடத்தை, யார் நிரப்பப் போகின்றனர் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.  இதனால் உலக நாடுகளால் தேடப்படும் ஒருவரான அய்மேன் அல் ஜாவாஹிரி, அல்-குவைதா அமைப்பின் புதிய தலைவரானார்.

இது பற்றி அமெரிக்க ராணுவ அமைச்சர் ராபர்ட் கேட்ஸ் அளித்த பேட்டியில், அல்-குவைதா தலைவர் பொறுப்பை ஏற்றுள்ள அய்மேன் அல் ஜாவாஹிரிக்கு, ஆதரவாளர்களை ஒன்று திரட்டி செயல்படும் திறன் இல்லை.

ஒசாமா பின்லாடனைப் போன்ற சாமர்த்தியம் இவருக்கு கிடையாது. அல்-குவைதா பயங்கரவாத அமைப்புக்கு அய்மேன் தேர்வு செய்யப்பட்டதில் இருந்து, அந்த அமைப்பு ஒசாமாவின் வழியைப் பின்பற்ற இன்னும் உயிரோட்டத்துடன் இருக்கிறது என்பது நினைவூட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாகத்தான் இருக்கிறது என்பதும் தெரிகிறது, என்றார்.

1 கருத்துரைகள் :

Mca Fareed said...

அமெரிக்காவின் தலைவிதி என்னவென்றால் சிறந்தமுட்டாள்களை தெரிவுசெய்து அதிபராக வைத்துக்கொள்வது,முட்டிவிட்டு தலைகவிழ்ப்பதில் தலைசிறன்ந்த கெட்டிக்காறர்கள்தான் ஒவ்வொரு அமெரிக்க அதிபனும்,

Post a Comment

Flag Counter

Free counters!