June 12, 2011.... AL-IHZAN World News
வடக்கு அரபிக்கடல் பகுதியில் அமெரிக்க கடற்படையினர் அடக்கம் செய்த பின்லேடன் உடலை தேடி கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்காவின் புதையல் வேட்டைக்காரர் பில் வாரன் ஈடுபட்டுள்ளார். பின்லேடனை அமெரிக்க கடற்படையின் சீல் பிரிவு கமாண்டோக்கள் பாகிஸ்தானின் அபோதாபாத் பகுதியில் கடந்த 2ம் திகதி சுட்டுக் கொன்றனர்.
பின்லேடனின் உடல் ஹெலிகாப்டர் மூலம் அரபிக்கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யு.எஸ்.எஸ் கார்ல் வின்சன் போர்க்கப்பலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு டி.என்.ஏ உள்பட எல்லா வித சோதனைகளையும் முடித்து பின்லேடனின் உடல் கடலில் அடக்கம் செய்ததாக அமெரிக்கா செய்தி வெளியிட்டது....
இதுகுறித்து தகவல் வெளியிட்ட அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன்,"முஸ்லிம் மதப்படி எல்லாவித சடங்குகளும் செய்யப்பட்டு பின்லேடனின் உடல் அதிக எடையுள்ள பையில் வைத்து தட்டையான பலகையில் வைத்து கட்டப்பட்டு கடலில் மூழ்கடிக்கப்பட்டது" என கூறியது.
ஆதாரத்தை வெளியிடாமல் பின்லேடன் மரணம் பற்றி அமெரிக்க அதிபர் ஒபாமா வாய்மொழியாக தகவல் தெரிவித்தது அமெரிக்கர்கள் பலருக்கு உடன்பாடு இல்லை. இத்தகவல் வெளியானவுடன் அரபிக் கடல் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தி, பின்லேடன் உடலை கண்டுபிடிக்க வேண்டும் என முடிவு செய்தார் கலிபோர்னியா மாநிலத்தை சேர்ந்த புதையல் வேட்டைக்காரர் பில் வாரன். கடலில் மூழ்கிய கப்பல்கள் பலவற்றை இவர் கண்டுபிடித்துள்ளார். கடலில் தேடும் தொழிலை வர்த்தக ரீதியாக 1972ம் ஆண்டு முதல் பில் வாரன் செய்து வருகிறார்.
இதுகுறித்து பில் வாரன் கூறியதாவது, அமெரிக்கர்கள் தேசபக்தியுடைவர்கள். பின்லேடனை கொன்று புதைத்து விட்டோம் என்பதை ஆதாரத்துடன் நிருபிக்க அதிபர் ஒபாமா தவறிவிட்டார் என நினைக்கிறோம். ஒபாமா அரசை நான் நம்பவில்லை. அதனால் பின்லேடன் உடலை தேடும் பணியில் ஈடுபடுகிறோம்.
வடக்கு அரபிக்கடல் பகுதியில் பின்லேடனை புதைத்தாக கூறப்பட்டுள்ளது. மற்ற எந்த விவரமும் வெளியிடப்படவில்லை. அதிநவீன சாதனங்கள், படகுகளுடன் பின்லேடன் உடலை தேடும் பணியில் ஈடுபடுகிறேன். எங்கள் குழு பின்லேடன் உடலை கண்டுபிடிக்கும் என நம்புகிறேன். இதற்கு கோடிக்கணக்கில் பணம் செலவாகும்.

0 கருத்துரைகள் :
Post a Comment