animated gif how to

இஸ்லாத்திற்காக ஒஸாமா போராடினார் - அலவி மௌலான தெரிவிப்பு

May 04, 2011 |

May 04, 2011.... AL-IHZAN Local News

1967ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ம் திகதி சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் பிறந்த சிவில் இன்ஜினியரும் பொருளியல் பட்டதாரியுமான ஒசாமா பின்லேடன் ஏகாதிபத்திய நாடுகளினால் இஸ்லாத்திற்கு முரணாக மேற்கொண்ட அக்கிரமங்களை பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில் 1979ஆம் ஆண்டு அல் கைதா இயக்கத்தை ஆரம்பித்தார். 

இவர் இஸ்லாமிய மார்க்க பற்றுமிக்கவர். இவரது தீவிரவாத செயல்கள் யாவும் இஸ்லாத்திற்கு முரணானவர்களுக்கு எதிராகவே இருந்தது. இவரது இவ் இயக்கம் இல்லாது இருந்தால் இன்று முஸ்லிம் நாடுகளை ஏகாதிபத்திய நாடுகள் அடக்கி ஒடுக்கியிருக்கும்.

ஒசாமா பின்லேடன் பயங்கரவாதியா? இஸ்லாமிய கொள்கை தீவிரவாதியா? என்பதை ஏகாதிபத்திய நாடுகள் தீர்மானிக்க முடியாது. அதை தீர்மானிக்கும் சக்தி படைத்தவன் அல்லாஹ் ஒருவனுக்கே உரியது. இன்று இஸ்லாமிய நாடுகள் ஏகாதிபத்திய நாடுகளினால் அடக்கி......
ஒடுக்கப்பட்டிருக்கின்ற இவ் வேளையில் அதைப்பற்றி குரல் கொடுப்பார் எவருமில்லை.

ஆனால் ஒசாமா பின்லேடன் இஸ்லாத்திற்காக இஸ்லாமிய கொள்கைகளை பேணுவதற்காக தனது சொத்துக்களை சுதந்திரத்தை கூட இழந்து போராடியவர். இவர் இஸ்லாமிய கொள்கைகளுக்காக போராடாமல் தன்பாட்டில் வாழ்ந்திருந்தால் இன்று உலகில் மாபெரும் செல்வந்தராக விளங்கியிருப்பார்.

அமெரிக்காவினதும் ஐக்கிய நாடுகள் சபையின் ஏகாதிபத்தியம் எவ்வாறானது எனில் பிரபாகரனை கொலை செய்தது மனித உரிமை மீறலாகவும் பாகிஸ்தானில் ஒசாமாவை கொலை செய்தது தீவிரவாத ஒழிப்பாகவும் காட்டப்படுகின்றது. இதன் விளக்கம்தான் என்ன?  பான் கீ மூன் பிரபாகரனுக்கு ஒரு நியாயமும் ஒசாமாவுக்கு வேறு நியாயமும் காட்டுவது ஏன்?

ஒசாமா இஸ்லாம் எங்கே பாதிக்கப்படுகின்றதோ அங்கே அதற்கெதிரான போராட்டங்களை மேற்கொண்டார். இவரது படுகொலை தீவிரவாதத்துக்கு எதிரான ஏகாதிபத்திய நாடுகளின் போராட்டமா? அல்லது இஸ்லாத்திற்கு எதிரான ஏகாதிபத்தியத்தின் போராட்டமா? என்பது சிந்தனைக்குரியது.

இந்த ஏகாதிபத்திய நாடுகளின் சூழ்ச்சியினால் இன்று உலக முஸ்லிம் நாடுகள் யாவும் பிரச்சினைக்குட்பட்டு இருக்கின்ற இவ்வேளையில் முஸ்லிம்களாகிய நாம் சிந்தனையுடன் செயல்பட வேண்டுமென உலக வாழ் முஸ்லிம்கள் அனைவரையும் வேண்டிக்கொள்கிறேன். இவ்வாறு ஆளுநர் அலவி மெனலானா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
News: yarlmuslim

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!