animated gif how to

ஷஹீத் ஒசாமாவுக்கு ஜனாசா தொழுகை!

May 06, 2011 |

May 06, 2011.... AL-IHZAN India News
சென்னை அண்ணா சாலை மக்காஹ் மஸ்ஜிடில் இன்று (06/05/2011) ஜெயித்தது யார்? ஒசாமாவா? ஒபாமாவா? என்ற தலைப்பில் மௌலவி.சம்சுதீன் காசிமி அவர்கள் ஜும்மா  உரை நிகழ்த்தினார்கள்.அதில் அமெரிகாவின் அநீதிகளை பட்டியலிட்டதோடு வசதிமிக்க குடும்பத்தில் பிறந்த ஒசாமா முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கெதிராக ஆயுதம் ஏந்திய வரலாற்றை எடுத்து சொன்னார். அமெரிக்காவின் அநீதி தொடரும் பட்சத்தில் ஓராயிரம் ஒசாமாக்கள் உருவாகி கொண்டே இருப்பார்கள் என்றார்.ஏற்கனவே இறந்து விட்ட ஒசாமாவை தற்போது கொன்றதாக நாடகம் நடத்தும் ஒபாமாவின் அரசியலை தோலுரித்தார்.

ஒசாமா ஏற்கனவே இறந்து விட்டாலும் செய்தி தற்போது உறுதி செய்யப்பட்டு விட்டதால் அவருக்கு ஜனாஸா தொழுவதற்கு தடை இல்லை என்ற காசிமி ஒசாமா பெயரை சொல்வதற்கே தமிழ்நாட்டில் பலர் பயப்படுவதாகவும் இந்திய பிரதமரை கொன்ற இந்தியாவில் தேடப்படும் குற்றவாளிகள் கொள்ளப்படும் போது தமிழக முதல்வர் கவிதை வாசிக்கும் போது இந்தியாவில் எந்த குற்றமும் இழைக்காத ஒசாமாவுக்கு தொழுகை நடத்த தடை ஏதும் இல்லை என்றார்.  இனி முஸ்லிம் சமூகத்தில் பிறக்கும்..........

குழந்தைகளுக்கு ஒசாமா என்ற பெயரை வைக்க வேண்டும் என்றும் கேட்டுகொண்டார். ஜும்மா தொழுகைக்கு பின்னர் காயிப் ஜனாசா தொழுகையும் நடைபெற்றது.ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் பத்திரிக்கையாளர்களும் உளவு துறையினரும் கலந்து கொண்டனர்.

ஒசமாவுக்காக யாரும் பேச மாட்டார்களா என்று ஏங்கி கொண்டிருந்த நூற்றுக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் இந்த தொழுகையில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே...

ஹைதராபாத்தில் ஒசாமா மரணத்துக்கு வழிபாடு!
அமெரிக்க படைகளால் ஒசாமா கொல்லப்பட்டுள்ளதை அடுத்து ஹைதராபாத் நகரத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பேகம்பட்டில் உள்ள யு.எஸ் தூதரகத்துக்கு அனைத்து நுழைவு வாயில்களிலும் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிப்பட்டுள்ளது. மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக கூடுதல் கமிஷனர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறினார்.

அவ்வழியில் வரும் அனைத்து வாகனமும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறது என்று தெரிவித்தார். ஆயுதம் ஏந்திய போலிஸ் பாதுகாப்பு போட்டுள்ளதாகவும், தூதரக அதிகாரிகள் வெளியெ தனியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பதற்றம் நிறைந்த பகுதியான சய்தாபாத் மற்றும் பர்காஸ் பகுதி முழுவதும் போலீஸாரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சில இடங்களில் அவர் கொல்லப்பட்டதற்கு கண்டன கூட்டம் நடைபெற்றுள்ளது. ஒரு இயக்கம் ஒசாமாக்காக உஜாலே ஷா ஈத்காவில் தொழுகை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கிறது இதற்கு முன்னர் கடந்த வாரம் உளவுப்பிரிவு ஆந்தரா, குஜராத், மும்பை மாநில போலிஸுக்கு அல் காயிதாவினால் வழிபாட்டு தளம், காவல் நிலையம் ஏனைய பகுதிகளில் தாக்குதல் நடத்தப்படலாம் என உஷார் படுத்தப்பட்டுள்ளது.


0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!