animated gif how to

தொழுகைக்காக கடைகளை மூட அக்குரணை பிரதேச வர்த்தகர்கள் தீர்மானித்துள்ளனர்

December 16, 2011 |

December 16, 2011.... AL-IHZAN Local News

-அஸ்லம் அலி-
கண்டி மாவட்டம் அக்குரணை பிரதேசம் முஸ்லிம் வர்த்தகர்கள் தொழுகைக்காக தமது வர்த்தகங்களை இடைநிறுத்த தீர்மானித்துள்ளனர். அக்குரணை பிரதேசம் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசமாகும் அங்கு 90 வீதமான வர்த்தக நிலையங்கள் முஸ்லிம்களுக்கு உரியதாகும். அங்குள்ள மஸ்ஜிதுகளில் பாங்கு -தொழுகைகான அழைப்பு-  செய்யப்படும்போது முஸ்லிம் வர்த்தகர்கள் தமது கடைகளை குறித்த நிமிடங்கள் தொழுகைக்காக மூடிவிட ஏகமனதாக தீர்மானித்துள்ளனர்.

இதற்கான தீர்மானத்தை நேற்று முன்தினம் அக்குரணை பெரிய பள்ளியில் கூடிய வர்த்தகர்கள் மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பாக தீர்மானிக்க நேற்று முன்தினம் அக்குரணை பெரிய பள்ளியில் கூடிய நூற்றுகணக்கான வர்த்தகர்கள் ஏகோபித்த இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த நிமிடங்கள் தொழுகைக்காக வர்த்தக நிலையங்கள் மூடப்படும் போது வாடிக்கையாளர்களுக்கு சிரமங்கள் ஏற்படாதவாறு குறிப்பாக முஸ்லிம் அல்லாத வாடிக்கையாளர்களுக்கு சிரமங்கள் ஏற்படாதவாறு நடந்து கொள்ளும் ஒழுங்குகள் தொடர்பாக அக்குரணை ஜம்இயதுல் உலமா வர்த்தகர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.


இன்று அக்குரணையில் தொழுகைக்கான அழைப்பு செய்யப்பட்டபோது அக்குரணை பிரதேச வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடுவதை காணக் கூடியதாக இருந்தது .லங்கா முஸ்லிம் இன்று லுஹர், மற்றும் அஷர் தொழுகைக்காக முழு வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு முதலாளி , தொழிலாளி உட்பட அனைவரும் மஸ்ஜிதுகளுக்கு சென்றனர்.


இதன் மூலம் தொழுகைக்காக தமது வர்த்தகத்தை இடை நிறுத்தும் முதல் முஸ்லிம் பிரதேசம் என்ற பெருமையை அக்குரணை பிரதேசம் பெற்றுள்ளது.

இது தொடர்பான எமது முந்திய பதிவு:

பாங்கு சொன்னவுடன் வர்த்தக நிலையங்கள் தொழுகைக்காக மூடப்பட சட்டம்: பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!