February 01, 2011.... AL-IHZAN Local News
எதிர் வரும் மே மாதம் 7 ஆம் திகதி தொடக்கம் காத்தான்குடி நகர வியாபர நிலையங்கள் ‘ பாங்கு’ -தொழுகைக்கான அழைப்பு- சொல்லப்பட்டதும் தொழுகைக்காக மூடப்படவேண்டும் என்ற சட்டம் அமுல் படுத்தப்படும் என்று பிரதியமைச்சர் எம் .எல் .ஏ.எம் ஹிஸ்புல்லாதெரிவித்துள்ளார்.
இலங்கை வந்துள்ள இஸ்லாமிய அறிஞரான டாக்டர் சாகிர் நாயிக் நேற்று காத்தான்குடிக்கு சென்று பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து காத்தான்குடி முகைதீன் மெத்தை பெரிய பள்ளிவாசலில் ஏற்பாடு செய்யபடிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார் இதன் போது அந்த நிகழ்வில் உரையாற்றியுள்ள பிரதியமைச்சர் எம் .எல் .ஏ.எம் ஹிஸ்புல்லா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் விரிவாக
அங்கு அவர் ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகளை இங்கு தருகின்றோம் – காத்தான்குடியை ஒரு புனிதமான நகராக கட்டியெழுப்ப வேண்டும் ஏனைய முஸ்லிம்களுக்கு இந்த நாட்டின் முஸ்லிம்களுக்கு ஒரு முன்மாதிரியாக திகழவேண்டும் நமது மண்ணில் நாம் நடைமுறைப்படுத்தும் இஸ்லாமிய சட்டங்கள் ஏனைய பிரதேசங்களுக்கும் இன்ஷா அல்லாஹ் நடைமுறைப்படுத்த முன்மாதிரியாக இருக்கவேண்டும் என்பதற்காக நிறைய தீர்மானங்களை எடுத் திருகின்றோம் அந்த அடிப்படையில் இன்ஷா அல்லாஹ் மே மாதம் தொடக்கம் நமது மண்ணில் பாங்கு- தொழுகைக்கான அழைப்பு- சொன்னவுடன் கடைகள் மூடப்பட்டு முதல் கட்டமாக பிரதான வீதியில் உள்ள கடைகள் மூடப்பட்டு தொழுகைக்காக பள்ளிக்கு செல்லவேண்டும் என்ற ஒரு சட்டத்தை நாங்கள் நடைமுறைப்படுத்த இருக்கின்றோம் இன்ஷா அல்லாஹ் மே மாதம் 7 ஆம் திகதி தொடக்கம் அந்த சட்டம் அமுலுக்கு வரவிருக்கின்றது என்று தெரிவித்துள்ளார்.
News: Lankamuslim
0 கருத்துரைகள் :
Post a Comment