-அஸ்ரப்.ஏ.சமத்-
கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர்
சங்கத்தின் கொழும்புக் கிளையின் ஒன்று கூடல் எதிர்வரும் டிசம்பர் 11ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பி.ப.06.00 மணிக்கு
இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வு மருதானை தெமட்டக்கொட வீதியில்
உள்ள வை.எம்.எம்.ஏ பேரவையின் கேட்போர் கூடத்தில் கல்லூரியின் புதிய அதிபர் ஏ.எம்.ஏ
ஆதம்பாவா தலைமையில் இடம்பெறவுள்ளது .
குறிப்பாக மேல் மாகாணத்தில் 1600க்கும்
மேற்பட்ட கல்முனை ஸாஹிராக்கல்லூரியின் பழைய மாணவர்கள் பல்வேறு அரச மற்றும் தணியார்
தினைக்களங்களில் தொழில் செய்கின்றனர்.சிலர் கொழும்பில் நிரந்தராக வதிபவர்களாக
அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஆகவே கல்முனை ஸாஹிரா கல்லூரியின் பழைய
மாணவர்கள் கொழும்பில் வதிவோர் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கல்லூரி அதிபர்
கேட்டுள்ளார்.
இதில் வைத்தியர்கள், பொறியியலாளர்கள் கணக்காளர்கள்
சட்டத்தரணிகளும் தணியார் கம்பனிகளின் உரிமையாளர்களும் துறைமுக அதிகார சபையில் 300 பேரும் இதில்
அடங்குகின்றனர். கடந்த 5 வருடங்களுக்கு
முன் இயங்கிய இச் சங்கத்தினை மேலும் இயங்கவைப்பதற்கே மேற்படி ஒன்று கூடல் நிகழ்த்த
உள்ளதாக அதிபர் தெரிவித்தார்.
இந்த ஒன்று கூடல் ஏற்பாடு குழு சார்பாக 0773630668 என்ற
தொலைபேசி இலக்கத்தின் ஊடாக ஊடகவியலாளர் றிப்தி அலியை தொடர்பு கொள்ள முடியும்.
0 கருத்துரைகள் :
Post a Comment