தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்
கழகத்தின் தலைவர் ஜே.எஸ். ரிபாயி வெளியிடும் அறிக்கை:
பிரபல திரைப்பட நடிகர் கமல்ஹாசன்
விஸ்வரூபம் என்ற படத்தை நடித்து இயக்கியிருக்கிறார்.அதில்
ஆப்கானிஸ்தான் போரை முன்னிலைப்படுத்தி கதை இருப்பதாகவும் அதில் முஸ்லிம்களை வன்முறையாளர்களாக சித்தரிக்கும் காட்சிகள் இருப்பதாகவும் தகவல்கள்
வருகின்றன.
கடந்த பல வருடங்களாக தமிழகத்தில் சிலர்
தங்களின் பிழைப்புக்காகவும்,
வளர்ச்சிக்காகவும் முஸ்லிம்களை மட்டுமே
குற்றவாளிகளாக சித்தரித்து படம் எடுத்து வருகிறார்கள். ஈராக்கில் 6 லட்சம் மக்களை கொன்ற அமெரிக்க பயங்கரவாதம் பற்றியோ, 60 ஆண்டுகளுக்கு மேலாக பாலஸ்தீனர்கள் மீது இன அழிப்பை நடத்தி வரும்
இஸ்ரேலின் பயங்கரவாதம் பற்றியோ யாருக்கும் படம் எடுக்க மனமில்லை, துணிவில்லை. இந்தியாவில் குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களின்
அவலங்களை தோலுரிக்க தைரியமில்லை. எதிர்விளைவுகளையும், உலக அளவில் வஞ்சிக்கப்படும் சமூகத்தையும் மட்டுமே குறிவைத்து
திரைப்படம் எடுப்பது இப்போது வழக்கமாகி வருகிறது.
கமல்ஹாசனின் திரைப்படமான விஸ்வரூபம்
பற்றி மாறுப்பட்ட கருத்துகளும், சந்தேகங்களும்
வலுத்துள்ளன அவர் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களை சந்தித்ததன் பின்னணியும் இதுதான்
என கூறப்படுகிறது.
இந்த சந்தேகங்களை போக்கை வகையில், இத்திரைப்படத்தை முஸ்லிம் பிரதிநிதிகளிடமும், மனித உரிமை ஆர்வலர்களிடமும் முதலில் திரையிட்டு காண்பித்து
ஆட்சேபனைக்குரிய காட்சிகள் ஏதேனும் இருந்தால் அதை தவிர்த்துவிட்டு வெளியிட
வேண்டும் என கோருகிறோம்.
கருத்து சுதந்திரம் என்ற பெயரில்
முஸ்லிம்களை புண்படுத்தும் வகையிலான ஊடக திரிபுகளை அனுமதிக்க முடியாது என்பதை
உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்
(ஜே.எஸ். ரிபாயி)
President - TMMK & MMK
08.11.2012
0 கருத்துரைகள் :
Post a Comment