-எம்.எப்.எம் இஹ்ஸான்-
BRITISH COLLEGE OF APPLIED STUDIES -BCAS- கல்லூரியின் வருடாந்த பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (16/11/2012) பண்டாரநாயக்க
சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
பிகாஸ் என்று அழைக்கப்படும் இந்த கல்லூரி
மாணவர்களின் அபிமானத்தை வென்ற கல்லூரி என்பது குறிபிடத்தக்கது. இந்த கல்லூரி பல
துறைகளில் மாணவர்களை கற்பித்து வருகின்றது என்பதுடன் உடன் வேலை வாய்ப்புகளையும்
பெற உறுதுணையாக செயல்பட்டு வருகின்றது. இந்த கல்லூரி 1999 ஆம் ஆண்டு கண்டியில் உருவாக்கப்பட்டு
பின்னர் கொழும்பிற்கும்
விஸ்தரிக்கப்பட்டது.
இந்த பட்டமளிப்பு விழா இதன் தலைவர் பொறியலாளர் அப்துல் ரஹ்மான் தலைமையில் இடம்பெற்றது.
இந்த விழாவில் இந்த வருடம் பாடதிட்டங்களை
முடித்துக்கொண்ட 820 மாணவர்களுக்கு
சான்றிதல்கள் வழங்கபட்டன இந்த விழாவுக்கு பல பிரமுகர்கள்
அழைக்கபட்டிருந்தனர் சிறப்பு விருந்தினர்களாக பிரிட்டன்
பல்கலை க்கழகம் ஒன்றின் கல்வி சார் அபிவிருத்தி
தலைவர் பேராசிரியர் பில் ஹார்ரிஸ்
மற்றும் சூர்ய பிபில்ல ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 கருத்துரைகள் :
Post a Comment