பந்தயக்காரர்களுக்கு
வரிச்சலுகை அளித்துள்ள அரசாங்கம் முஸ்லிம்களின் விசேட நோன்பு காலத்தில்
வெளிநாடுகளிலிருந்து அன்பளிப்பாகக் கிடைக்கப்பெற்ற பேரீச்சம்பழங்களுக்கு 90 லட்சம் ரூபாவை வரியாக அறவிட்டுள்ளது.
இந்தப்
பணம் முஸ்லிம் கலாசார திணைக்களத்துக்கு வழங்கப்பட்ட நிதியில் இருந்தே
செலுத்தப்பட்டுள்ளது. இது மிகவும் விசனத்துக்குரிய செயலாகும் என ஐக்கிய தேசியக்
கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச நேற்றுமுன்தினம் நாடாளுமன்றில்
சுட்டிக்காட்டினார்.
வாய்மூல
விடைக்கான கேள்வி நேரத்தின் போது பௌத்த சாசனம் மற்றும் மத விவகார அமைச்சரிடம்
முஸ்லிம் பள்ளி வாசல்களுக்கு ஒதுக்கியுள்ள நிதி தொடர்பாக கேள்வி ஒன்றை
எழுப்பினார்.
இந்தக்
கேள்விக்கு பிரதி அமைச்சர் எம்.கே.டி.எஸ். குணவர்த்தன பதில் அளித்தார்.
அப்போது
இடைக்கேள்வி ஒன்றை எழும்பிய சஜித் பிரேமதாச, அமைச்சரின் கூற்றின் படி முஸ்லிம் பள்ளிவாசல்களுக்கு ஒதுக்கப்பட்ட
நிதி படிப்படியாகக் குறைக்கப்பட்டுள்ளமை ஏன்? என்றார்.
"நாம் ஒரு போதும் குறைக்கவில்லை. அவர்களால்
கேட்கப்பட்ட தொகையைத்தான் வழங்கியுள்ளோம்'' என்றார் அமைச்சர்.
இந்தச்
சந்தர்ப்பத்திலேயே சஜித்,
பேரீச்சம்பழ விவகாரத்தை
முன்வைத்தார். "பந்தயக்காரர்களுக்கு வரி நீக்கம் செய்துள்ள அரசு
வெளிநாடுகளிலிருந்து அன்பளிப்பாக கிடைக்கப்பெற்ற பேரீச்சம் பழங்களுக்கு 90 இலட்சம் ரூபாவை வரியாக அறவிட்டுள்ளது
கவலைக்குரியது''என்றார்.
1 கருத்துரைகள் :
இவ்விடயம் பற்றி முஸ்லிம் தலைமைகளும், அரசியல்வாதிகளும் வாய்மூடி மௌனம் காப்பதன் மர்மம் அறியாமையா அல்லது தங்கள் சொகுசுகளுக்கு பங்கம் ஏற்பட்டுவிடும் என்ற இழிவான எண்ணமா ....?
Post a Comment