-அம்றித்-
ஹலால் சான்றிதழ் சிங்கள மக்கள் மீது திணிக்கப்படுவதாகவும்
ஹலால் குறியீட்டுடன்கூடிய பொருட்களை சிங்கள மக்கள் புறக்கணிக்குமாறும் பொதுபல சேனா
அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரர் வேண்டுகோள்விடுத்துள்ளார். நேற்று கொழும்பில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் இதனை
அவர் தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு தெரிவித்துள்ள தகவலில் நாட்டில் சுமார்
நான்காயிரம் ஹலால் சான்றிதழ் பெற்ற பொருட்கள் உள்ளன. இதன் மூலம் பெறப்படும் பணம்
இஸ்லாமிய பிரசாரப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுவகிறது. இதற்கு சிங்கள மக்கள்
பங்காளர்களாக இருக்கக் கூடாது. இந்தச் சான்றிதழ் எமக்குத் தேவையில்லை. ஹலால்
சான்றிதழ் பொறிக்கப்படாத பொருட்களையே கொள்வனவு செய்யுமாறு சிங்கள மக்களிடம்
வேண்டுகோள்விடுகிகிறோம் என அவர் தெரிவித்துள்ளார் .
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினால் ஹலால் சான்றிதள்கள்
வழக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துரைகள் :
Post a Comment