animated gif how to

லிபியாவில் அமெரிக்க ராஜ தந்திரிகள் கொலை: சியோனிச நலன்களுக்காக காவு கொடுக்கப்படும் அமெரிக்கா

September 20, 2012 |

(மூலக்கட்டுரை: லதீப் பாறூக் / தமிழுருவம்: KWC)

லிபியாவுக்கான அமெரிக்க தூதுவர் கிறிஸ்தோபர் ஸ்டீவன்ஸ் மற்றும் அவருடன் பணியாற்றிய மூன்று இராஜதந்திரிகள் லிபியாவின் பெங்காழி நகரில் அமைந்துள்ள லிபியாவுக்கான அமெரிக்க தூதரக செயலகத்தில் வைத்து கிளர்ந்தெழுந்த ஆர்ப்பட்டக்காரர்களால் கொல்லப்பட்டுள்ளனர்.

அமெரிக்க இஸ்ரேலிய யூத திரைப்படத் தயாரிப்பாளாரான சாம் பாசில் என்ற நபர் புரிந்த ஒரு குற்றத்துக்காக இவர்கள் காவு கொடுக்கப்பட்டுள்ளார்கள். கடந்த மே மாதம் லிபியாவுக்கான அமெரிக்க தூதராக பணியேற்ற கிறிஸ்தோபர் இதற்கு முன்னரும் கூட லிபியாவின் அரபு வசந்த எழுச்சி காலப்பகுதியிலும் கூட அங்கு பணியாற்றியிருந்தார்.

முஸ்லிம்களின் அப்பாவித்தனம்திரைப்படம் இஸ்ரேலுக்கு அரசியல் ரீதியாக உதவும் நோக்கில் தயாரிக்கப்பட்டதாக கூறும் இதன் தயாரிப்பாளர் சாம் பாசில் இவ்வாறான எதிர் தாக்கங்களை தான் எதிர் பார்த்ததாகவும் இவை இஸ்லாத்தை ஒரு பயங்கரமான மதமாக காண்பிக்க தனக்கு உதவும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த திரைப்படத்தில் நபிகள் நாயகம் அவர்களை பற்றி மிகவும் கீழ்த்தரமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2011 கோடை காலத்தில் பாசிலும் அமெரிக்காவில் வசிக்கும் எகிப்தை சேர்ந்த கோப்டிக் கிறிஸ்டியன் என்பவரும் இணைத்து இந்த இரண்டு மணி நேரம் ஓடக்கூடிய திரைப்படத்தை எழுதி, இயக்கி தயாரித்திருந்தனர். 59 நடிக நடிகைகள் நடித்த இந்த படத்துக்கு பின்புல பணியாளர்களாக 45 பேர் இருந்தனர். இந்த படத்துக்கு செலவான ஐந்து மில்லியன் டாலர் பணம் நூற்றுக்கு மேற்பட்ட யூத கொடை வழங்குனர்களால் வழங்கப்பட்டிருந்தது. பெரும்பாலான நடிக நடிகைகள் மற்றும் ஏனைய ஊழியர்கள்  இந்த படத்தின் கதை மற்றும் நோக்கங்கள் பற்றி அறிந்திருக்கவில்லை என்று நம்பப்படுகின்றது.

உலக முஸ்லிம்கள் இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்களை தமது உயிரினும் மேலாக மதிக்கின்றனர். இதேபோல் ஈசா, மூஸா மற்றும் இப்ராஹீம் நபி மாரையும் கௌரவ படுத்துகின்றனர். பதினான்கு நூற்றாண்டுகளுக்கு மேற்பட்ட இஸ்லாமிய வரலாற்றில் மற்ற மதங்களை கேவலப்படுத்துவதோ அல்லது மாற்று மத அன்பர்களின் மத உணர்வுகளை புண் படுத்துவதோ இஸ்லாமிய கலாச்சாரத்தின் அங்கமாக இருந்ததில்லை.

இதே வேளை முஸ்லிம்களின் மத உணர்வுகளை கேவலப்படுத்தி அவர்களை வெகுண்டெழ வைப்பது காலம் காலமாக நடந்தேறி வருகின்றது. உதாரணமாக அண்மையில் டென்மார்க் கார்டூன் சம்பவத்தை குறிப்பிடலாம். பிளெமிங் ரோஸ் என்ற பெயரில் அறியப்படும் உக்ரைன் நாட்டு யூதர் ஒருவரால் டென்மார்க் பத்திரிகை நபிகள் நாயகம் அவர்களை கேலியாக சித்தரித்து வெளியிடப்பட்ட பன்னிரெண்டு கேலிச்சித்திரங்கள் முஸ்லிம் உலகை வெகுண்டெழ வைத்தது. முஸ்லிம் நாடுகள் எங்கும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கலவரங்கள் நடந்தேறின. இந்த பிளெமிங் ரோஸ் இஸ்ரேலின் தீவிர வலது சாரி அமைப்புகளுடன் தொடர்புடையவன் என்பது தெரிய வந்தது.

2004 ஆம் ஆண்டு இஸ்லாத்தை அவமதித்து திரைப்படம் எடுத்த ஒரு டச்சு படத்தயாரிப்பாளர் வான் கோப் கொல்லப்பட்டார். பத்தி எழுத்தாளர்களான ஜேம்ஸ் பெட்ராஸ் மற்றும் ரொபின் ஈஸ்ட்மன் ஆகியோரின் கருத்து பிரகாரம் முஸ்லிம் உலகுக்கும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசுகளுக்கும் இடையான பிணக்குகள் உலகை தன பக்கம் இழுக்க வேண்டும் என்ற யூத முயற்சிகளில் இருந்து ஊற்றெடுக்கின்றன என்று கூறுகிறார்கள்.

குறித்த திரைப்படம் பெருமானார் அவர்களை ஒரு மோசடிக்காரனாக, பெண்ணாசை கொண்டவராக மற்றும் ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவராக மோசமான முறையில் சித்தரிப்பதோடு அவர் உடலுறவு கொள்வது போலும் கொலைகளுக்கு உத்தரவிடுவது போன்றும் காண்பிப்பதுடன் நில்லாது அவரின் இறைத்தூதர் என்ற கடமையை கேள்விக்குட்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

எதிர்பார்க்கப்பட்டதை போன்று இந்த திரைப்படம் உலகளாவிய ரீதியில் உக்கிரமான ஆர்ப்பாட்டங்களை தோற்றுவித்தது. லிபியாவில் ஆரம்பித்த இந்த ஆர்ப்பாட்டங்கள் எகிப்து, துனிசியா, யேமன், பெய்ருத், பாக்தாத், டெஹ்ரான், ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் என்று எல்லா இடங்களுக்கும் பரவியது. வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின் பின்னரே அநேகமான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

இந்த திரைப்படம் பற்றி கருத்து தெரிவித்த எகிப்தின் முதன்மை முப்தி அலி அவர்கள் இந்த குற்றச்செயல் உலகளாவிய ரீதியில் மில்லியன் கணக்கான முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளது, கருத்துச்சுதந்திரம் என்ற பெயரில் இவ்வாறான திரைப்படங்கள் நியாயப்படுத்தப்பட முடியாது” “மதங்களின் புனிதத்தன்மை மீதான தாக்குதல்கள் இந்த சுதந்திரத்தில் அடங்கவில்லை


எகிப்தின் புதிய ஜனாதிபதி முர்சி அமைதியான ஆர்ப்பாட்டங்களை ஆதரிக்கும் அதே வேளை தூதரகங்கள் மீதான தாக்குதல்களை ஆதரிக்கவில்லை. இந்த திரைப்படுத்துக்கு தனது வலுத்த கண்டனங்களை வெளியிட்ட முர்சி, எல்லா எகிப்தியர்களும் இறைத்தூதர் மீதான சேறு பூசும் எல்லா முயற்சிகளையும் நிராகரிப்பதாக கூறினார்.
இந்த திரைப்படம் முஸ்லிம் உலகில் கொந்தளிப்புகளை ஏற்படுத்தும் என்ற படத்தயாரிப்பாளர் சாம் பாசிலின் கருத்தை நோக்கும் போது இந்த திரைப்படம் மீதான எதிர்ப்புகளின் உக்கிரம் அமெரிக்காவை நோக்கியே திரும்பும் என்று அவர் அறிந்திருப்பதாகவே எண்ணத்தோன்றுகின்றது. மேலும் இது அமெரிக்க ஸ்தாபக தந்தைகளில் ஒருவரான பெஞ்சமின் பிராங்ளின் அவர்களின் யூத சமூகம் அமெரிக்காவுக்கு ஏற்படுத்தக்கூடிய சேதங்களை முன்னறிவிப்பு செய்தமையும் எமது நினைவுக்கு வருகின்றது.
பெஞ்சமின் பிராங்ளின் அவர்களின் யூதர்கள் மீதான எச்சரிக்கை அமெரிக்க யாப்பு உருவாக்க மாநாட்டின் போது 1789 ஆம் ஆண்டு விடுக்கப்பட்டது. இவரின் இந்த எச்சரிக்கை இந்த மாநாட்டில் எழுத்து மூல பதிவாக்கத்துக்கும் உட்பட்டது. தெற்கு கலிபோர்னியாவை சேர்ந்த சார்லஸ் பின்கெனி என்பவரால் பதிவு செய்யப்பட இந்த எச்சரிக்கையின் வரி வடிவம் பிலடெல்பியாவில் அமைந்துள்ள பிராங்ளின் நிறுவனத்தில் இன்னும் இருப்பதாக கூறப்படுகின்றது.
பெஞ்சமினின் முன்னறிவிப்பு இவ்வாறு அமைந்திருந்தது: கனவான்களே! எமது இந்த இளைய தேசத்தை நீண்டகால நோக்கில் ஊடுருவும் மற்றும் செல்வாக்கு செலுத்த நினைக்கும் சக்திகளிடம் இருந்து பாதுகாக்க வேண்டும் என்ற ஜெனரல் வாஷிங்டன் அவர்களின் கருத்துடன் நான் முழுமையாக இணங்குகிறேன். இந்த சக்தி யூதர்களே ஆகும். எந்தெந்த நாடுகளில் யூதர்கள் அதிக எண்ணிக்கையில் குடியேறுகிறார்களோ அந்த நாடுகளின் தார்மீக தன்மையை குறைக்கிறார்கள். அவற்றின் வர்த்தக நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகிறார்கள். தங்களுக்குள் பிரிவினைகளை உண்டாக்கி ஒற்றுமையை சீர்குலைக்கிரார்கள். கிறிஸ்தவ விழுமியங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த நாட்டில் கிறிஸ்தவத்துக்குள் ஊடுருவி அம்மதத்தை வலுவிழக்க செய்ய முயற்சிக்கின்றார்கள். ஒரு தேசத்துக்குள் இன்னொரு தேசத்தை உருவாக்க முயற்சிப்பார்கள். இவரகளின் இந்த முயற்சிகளை அந்த நாடு எதிர்க்கும் போது குறித்த நாட்டை பொருளாதார ரீதியாக மரணிக்க செய்வார்கள். இவர்களின் இந்த செயல்களுக்கு ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல் என்பன சிறந்த உதாரணங்களாகும்
17 நூற்றாண்டுகளுக்கு மேலாக இவர்கள் தமது சொந்த மண்ணில் இருந்து வெளியேற்றப்பட்டு சொல்லொண்ணா துயரங்களுக்கு உற்பட்டோம் என்று நீலிக்கண்ணீர் வடிக்கின்றார்கள். கனவான்களே! இந்த நாகரிக உலகு அவர்களுக்கு அவர்கள் கூறும் பலஸ்தீன் தேசத்தையும் அவர்களது சொத்துக்களையும் திரும்ப பெற்றுக்கொடுத்தால் அங்கு மீண்டும் செல்வதை தவிர்ப்பதற்காக சுவாரசியமான புதிய காரணங்களை கண்டு பிடிப்பார்கள் ஏனெனில் அவர்கள் இரத்தக்காட்டேறிகள். இந்த காட்டேறிகள் ஒன்றுடன் ஒன்று தங்கி வாழ முடியாதவை. தமது இனத்தை சாராத கிறிஸ்தவர்கள் மற்றும் ஏனைய இனத்தவர்களுடன் தான் இவர்களால் வாழ முடியும்.
மேலும் இவரது எதிர்வு கூறலில்: இந்த யாப்பின் மூலம் இவர்கள் அமெரிக்காவில் இருந்து தனிமைப்படுத்தப்படாவிட்டால், ஒரு நூற்றாண்டுக்குள் இவர்கள் பல்கிப்பெருகி நம்மை ஆள்வதோடு இந்த தேசத்தை அழித்து விடுவார்கள். அமெரிக்கர்கள் இரத்தம் சிந்தி உயிர்களை பலி கொடுத்து உருவாக்கிய எமது அரச முறைமைகளை மாற்றி விடுவார்கள். 200 ஆண்டுகளில் எமது அமெரிக்க சிறுவர்கள் யூதர்களின் வயல் நிலங்களில் ஊழியம் புரியும் அதே வேலை யூதர்கள் சொகுசு வாழ்க்கை வாழ்வார்கள்.
கனவான்களே நான் உங்களை எச்சரிக்கின்றேன் நீங்கள் இந்த யூதர்களை வெளியேற்றாவிட்டால் உங்கள் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகள் உங்களது கல்லறைகள் மீது சாபமிடுவார்கள். இவர்களின் சிந்தனைகள் அமெரிக்கர்களின் சிந்தனைகளில் இருந்து வேறுபட்டவை. சிறுத்தை தனது புள்ளிகளை மாற்றிக்கொள்ள முடியாது. யூதர்கள் இந்த நாட்டுக்கு பெரிதும் ஆபத்தானவர்கள். அவர்களை இங்கு நுழைய அனுமதித்தால் அவர்கள் இந்த நாட்டின் நிறுவனங்களை ஆபத்தில் தள்ளி விடுவார்கள். இவர்கள் இந்த யாப்பில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று பெஞ்சமின் கூறினார்.
இவ்வாறான எச்சரிக்கை விடுக்கப்பட்டும் கூட யூத குடியேற்றம் அமெரிக்காவில் அனுமதிக்கப்பட்டது. காலப்போக்கில் இவர்களின் செல்வாக்கு சகல துறைகளிலும் செழித்து வளர்ந்தது. கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் நன்றாக காலூன்றிய இவர்கள் அமெரிக்க ஜனாதிபதி ஹரி ட்ருமனுக்கு அழுத்தங்களை பிரயோகித்து அவரின் மூலம் வளர்முக நாடுகள் பயமுறுத்தப்பட்டு இந்த நாடுகளின் வாக்குகளின் மூலம் பாலஸ்தீனம் பிரிக்கப்பட்டு இஸ்ரேல் உருவாக்கப்பட்டது.
1947 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அயல் கிழக்கு மற்றும் ஆபிரிக்க விவகாரங்களுக்கான பணிப்பாளர் லோய் ஹென்டர்சன் என்பவரால் அப்போதைய இராஜாங்க செயலர் ஜார்ஜ் சீ மார்ஷாலுக்கு பாலஸ்தீனத்தை துண்டாடுவதன் எதிர்கால பாரதூர விளைவுகள் பற்றிய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இவரது இந்த ஆவணம் இந்த துண்டாடலின் பின்விளைவுகள் பற்றி மிகவும் துல்லியமான ஆய்வுகளை அடிப்படையாக கொண்டிருந்ததோடு  இவரின் ஆய்வுகளை சக பணியாளர்கள் அனைவரும் அங்கீ கரித்திருன்தனர்.
இவ்வாறான முன்னறிவிப்புகள், காலப்போக்கில் அமெரிக்க நிர்வாகம் இஸ்ரேல் ஆதரவு யூத அமைப்புகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்த போது, நிதர்சனமாக மாறின.
பிராங்க்ளின் எதிர்வு கூறியது போல் அமெரிக்க அரசியல் வாதிகளையும் அரசுகளையும் யூதர்கள் ஆக்கவும் அழிக்கவும் வல்லமை பொருந்தியவர்களாக காணப்படுகின்றனர். வெள்ளை மாளிகைக்கான பாதை டெல் அவிவ் ஊடாகவே செல்கிறது என்று முன்னாள் இஸ்ரேலிய பிரதமரும் நோபல் பரிசு பெற்ற யூத தீவிரவாதியுமான மேனாசெம் பெகின் 1982 ஆம் ஆண்டு கூறியது அமெரிக்காவின் மீதான சியோனிச செல்வாக்கை எமக்கு கோடிட்டு காட்டுகின்றது.
அமெரிக்க சட்டவாக்கத்தின் மீது ஆதிக்கம் செலுத்தும் யூத குழுக்களும் சியோனிச பல்தேசிய கூட்டு வர்த்தக நிறுவனங்களும் அமெரிக்காவின் அரசியல், பொருளாதாரம், மற்றும் ஊடகம் உட்பட சகல துறைகளிலும் தமது செல்வாக்கை செலுத்துகின்றன. இவற்றில் ஊடகங்கள் இந்த குழுக்களால் யூத நலன்களை ஆதரிக்கும் வகையில் அமெரிக்கர்களை மூளைச்சலவை செய்து அவர்களை தலையாட்டி பொம்மைகளாக மாற்றுகின்றன.
அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்கள் கூட இவர்கள் எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருப்பினும் யூத அமைப்புகளாலேயே முடிவு செய்யப்படுகின்றனர்.உதாரணமாக நம்பகமான அறிக்கைகளின் பிரகாரம் பராக் ஒபாமாவின் தெரிவு சிகாகோ நகரை சேர்ந்த யூத செல்வந்தர் ஒருவராலேயே தீர்மானிக்கப்பட்டதாக அறிய வருகின்றது. கடந்த தேர்தலின் போது இஸ்ரேலுக்கு விஜயம் செய்த ஒபாமா யூதர்களின் கலாசார தொப்பியை அணிந்து கொண்டு ஜெருசலம் இஸ்ரேலின் தலை நகர் என்பதில் எந்த கேள்விக்கும் இடமில்லை என்று உலகுக்கு அறிவித்தார். 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற அரபு இஸ்ரேல யுத்தத்தின் போதே ஜெருசலம் யூதர்களால் திருடப்பட்டது என்பது ஒபாமா அறியாத விடயமல்ல.
ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவுடன் ஒபாமா செய்த முதல் காரியம் வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரியாக யூத இர்குன் தீவிரவாத பிரபலம் ஒருவரின் மகனான ராம் இஸ்ரேல் எமானுவேல் என்பவரை நியமித்தது தான். ஒபாமா அடிக்கடி கூறும் இரண்டு விடயங்கள் எந்த நேச அணியும் இஸ்ரேலை விட முக்கியமானது அல்ல என்பதும் இஸ்ரேலின் பாதுகாப்பு என்று வரும்போது எந்த வித விட்டுக்கொடுப்பும் சாத்தியமில்லை என்பதுதான். இந்த கூற்றுகளின் அடிப்படையில் செயல் படும் ஒபாமா இதன் மூலம் முஸ்லிம் உலகில் அமெரிக்காவுக்கு ஏற்படும் சேதங்கள் மற்றும் நஷ்டங்கள் பற்றி அறியாதவர் அல்ல.
அமெரிக்காவின் கண்மூடித்தனமான இஸ்ரேல் அபிமானம் அந்த நாட்டுக்கு முஸ்லிம் உலகின் பாரிய எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. ஆரம்ப காலம் தொட்டு அமெரிக்க ஆட்சியாளர்களின் முழுமையான ஆதரவுடன் தான் இஸ்ரேல் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பூமியில் படு பாதகங்களை கட்டவிழ்த்து வருகின்றது. அமெரிக்க வரியிறுப்போரின் மில்லியன் கணக்கான டாலர் பணம் மூலம் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கான குடியிருப்புகள் அமைக்கப்படுகின்றன.
நாம் அனைவரும் நன்கு அறிந்த விடயம் 1989 ஆம் ஆண்டு சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பின்னர் அமெரிக்காவின் முதல் எதிரியாக இஸ்லாமும் முஸ்லிம்களும் மாறியுள்ளனர். நன்கு திட்டமிடப்பட்ட ஒரு நிகழ்ச்சி திட்டத்தின் மூலம் இஸ்லாமும் முஸ்லிம்களும் குறிவைக்கப்பட்டுள்ளனர். 9/11 தாக்குதல்கள் இதற்காக அரங்கேற்றப்பட்டு இதன் மூலம் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் என்ற பெயரில் முஸ்லிம்களை அழிப்பதற்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
உலகளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் இந்த நிகழ்ச்சி திட்டத்தின் பங்குதாரர்களாக சியோனிச யூதர்கள், சியோனிச கிறிஸ்தவர்கள், எவாங்களிக்கள் கிறிஸ்தவர்கள், மீண்டும் பிறந்த கிறிஸ்தவர்கள் RSS அமைப்பு, மற்றும் அதன் ஒருங்கிணைக்கப்பட்ட இந்து தீவிரவாத அமைப்புகள் என்பனவற்றுடன் முஸ்லிம் நாடுகளின் இறை நம்பிக்கை அற்ற சில சர்வாதிகாரிகளும் கை கோர்த்துள்ளனர்.
முஸ்லிம்களின் மத உணர்வுகளை காயப்படுத்தி அவர்களை கொந்தளிக்க செய்வதன் மூலம் முஸ்லிம்களுக்கும் உலகளாவிய கிறிஸ்தவ சமூகத்துக்கும் இடையில் பிணக்குகளை உருவாக்க முயற்சிகள் ஏற்படுத்தப்படும் தூண்டல்கள் அதிகரித்து வருகின்றன. சாம் பாசிலின் இந்த திரைப்படமும் ஒரு தூண்டலை ஏற்படுத்தும் கனகச்சித நகர்வே ஆகும்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க படைவீரர்கள் ஆப்கான் பொது மக்களின் சடலங்கள் மீது சிறுநீர் கழித்த சம்பவம் உலகளாவிய கண்டனத்துக்கு உள்ளானது. அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளிண்டன் இதற்கு வருத்தம் தெரிவித்தார். இந்த சம்பவத்துக்கு சற்று முன்னர் அமெரிக்க படைவீரர்கள் தம்மால் கொல்லப்பட்ட ஆப்கான் பொது மக்களின் உடல் பகுதிகளை நினைவுச் சின்னங்களாக சேர்த்த புகைப்படங்கள் வெளியாகின. இவைகள் நேடோ மற்றும் அமெரிக்க படைகளால் ஆப்கான், ஈராக், லிபியா போன்ற முஸ்லிம் நாடுகளில் புரியும் கொடூரங்களுக்கான சில உதாரணங்களே ஆகும்.
ஹோலோகோஸ்ட் என்ற பெயரில் அறியப்படும் யூத படுகொலைகளை விமர்சிப்பதை கருத்து சுதந்திரத்தை கருத்தில் கொள்ளாது வன்மையாக தடுக்கும் மேற்கத்தைய ஊடகங்களுக்கு இஸ்லாத்தை அவமானப்படுத்தும் இந்த திரைப்படம் பற்றிய செய்திகளை ஏன் தணிக்கை செய்ய முடியாதுள்ளது என்பது ஒரு முக்கிய கேள்வியாகும்.
மறு புறத்தில் முஸ்லிம்கள் மிக இலகுவாக இவ்வாறான சம்பவங்களால் தூண்டப்பட்டு பொருத்தமற்ற விடயங்களில் ஈடுபடுவது வருத்த தக்கதாகும். இவ்வாறான நடவடிக்கைகள் எந்த வித அனுகூலங்களையும் ஏற்படுத்தாது. இந்த பெங்காழி சம்பவம் மற்றும் உலகளாவிய ஆர்ப்பாட்டங்கள் இல்லாத விடத்து இந்த திரைப்படம் இத்தனை பிரபலமாக முடியாது என்பது ஒரு வேதனை கலந்த உண்மையாகும்.
முஸ்லிம் உலகின் சமகால நிலை பற்றி விமர்சிக்கும் முன்னாள் மலேசிய பிரதமர் மஹாதீர் முஹம்மது பின்வருமாறு கூறுகிறார். “1400 ஆண்டுகளுக்கு மேற்பட்ட இஸ்லாமிய வரலாற்றில் இஸ்லாமும் அதை பின்பற்றுவோரும் இந்த அளவுக்கு மோசமாக அவமானப்படுத்தப்படவோ, நியாமமற்ற முறையில் விமர்சிக்கப்படவோ ஒடுக்கப்படவோ இல்லை. முஸ்லிம்களை ஒரு பெரிய நாகரிகமான சமுதாயமாக ஸ்பெயின் முதல் சீனா வரை வியாபித்திருந்த ஒரு அகண்ட சாம்ராஜ்ஜியத்துடன் வாலவைத்திருந்த இந்த மேன்மையான மார்க்கம் இன்று இஸ்லாம் தோன்றுவதற்கு முன்னிருந்த நிலை போல் வன்முறையை தூண்டும் ஒரு மார்க்கமாக உலகளாவிய ரீதியில் சித்தரிக்கப்படுகின்றது. இதை மாற்றுவதற்கு நம்மால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியவில்லை
இவ்வாறான சூழ்நிலைகளில் முஸ்லிம்களை தூண்டும் இந்த நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
(நன்றி- www.kattankudi.info)



0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!