முஸ்லிம் எயிட் ஸ்ரீலங்காவின் தொழில் திறன் பயிற்சி
நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் ஹொரவப்பத்தானை, கஹட்டஸ்ககெதிரிய
பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 30 இளைஞர்களுக்கு
மர வேலை திறன் பயிற்சி அளிக்கப்பட்டது.
தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார
சபை சேர்ந்த தகுதிமிக்க பயிற்றுவிப்பாளர்களினால் இந்த ஆறு மாத பயிற்சி நெறி
நடத்தப்பட்டது. பயிற்சி நெறி முடிவில் தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி
அதிகார சபையினால் நடத்தப்பட்ட பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு மாத்திரமே சான்றிதழ்கள்
வழங்கப்பட்டன.
இந்த பயிற்சி நெறியினை நிறைவு 30 செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு
அண்மையில் இடம்பெற்றது. இதன்போது முஸ்லிம் எயிட் ஸ்ரீலங்கா நிறுவனத்தினால் மரவேலை
உபகரணங்களும் வழங்கப்பட்டன.
0 கருத்துரைகள் :
Post a Comment