animated gif how to

பிரான்சில் ரோஹிங்கியா முஸ்லிம்களை ஆதரித்து மனித உரிமை ஆர்வலர்கள் பேரணி

September 20, 2012 |

மியான்மர் அரசின் அடக்குமுறைக்கும், புத்த தீவிரவாதிகளின் வன்முறைக்கும் பலியாகும் சிறுபான்மை ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு ஆதரவாக பிரான்சு நாட்டின் தலைநகர் பாரிஸில் மனித உரிமை ஆர்வலர்கள் பேரணியை நடத்தினர். ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான பாரபட்சமான, இனரீதியான தாக்குதலை நிறுத்தவேண்டும் என்று பேரணியில் கலந்துகொண்டவர்கள் வலியுறுத்தினர்.

மியான்மரின் ராக்கேன் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு முஸ்லிமின் வீடும் போலீசின் கட்டுப்பாட்டில் உள்ளது. பிறந்த மண்ணில் வாழும் உரிமையை மியான்மர் அரசு ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு அளிக்கவேண்டும் என்று பேரணியில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலையை நிறுத்த நோபல் பரிசுப் பெற்ற ஆங்சான் சூகி எதுவும் செய்யவில்லை என்று பேரணியில் கலந்துகொண்டவர்கள் குற்றம் சாட்டினர்.
அண்மையில் மியான்மரி ராக்கேன் மாநிலத்தில் நடந்த இனப்படுகொலையில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் தீவிரவாத புத்தர்களால் கொலைச் செய்யப்பட்டனர். ஏராளமான முஸ்லிம்கள் அங்கிருந்து புலன்பெயர்ந்தனர். மியான்மர் அரசுஇவர்களை தங்களது நாட்டு குடிமக்களாக அங்கீகரிக்கமாட்டோம் என கூறுகிறது.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!