animated gif how to

முஸ்லிம் சேவை கட்டணம் 100 வீதம் அதிகரிப்பு - ஊழியர்களுக்கோ சம்பளம் இல்லை

September 03, 2012 |

நவமணி: இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பாகும் விளம்பரங்களுக்கான கட்டணங்கள் உடனடியாக அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்கான புதிய கட்டண விபரங்கள் அடங்கிய பட்டியல் கூட்டுத்தாபனத் தலைவரால் அதன் வர்த்தகப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அதேவேளை, ஏனைய சேவைகளின் வர்த்தக விளம்பரக் கட்டணங்களில் எவ்வித மாற்றமும் செயப்படவில்லையென தெரியவந்திருக்கின்றது.

இது தொடர்பாக முஸ்லிம் வர்த்தகப் பிரமுகர்கள் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தலைவரோடு தொடர்பு கொண்டு கேட்டபோது, முஸ்லிம் நிகழ்ச்சியில் ஒலிபரப்பப்படும் விளரம்பரங்களுக்கான கணட்டங்களை அதிகரிக்கவேண்டிய தேவை தமக்குள்ள அதேவேளை தங்களது விளம்பரங்களை முஸ்லிம் சேவையில் ஒலிபரப்ப வேண்டிய தேவை முஸ்லிம்களுக்கும் உள்ளதெனப் பதிலளித்துள்ளார்.

மேலும் இலங்கை வர்த்தக யுகத்தை பொறுத்த வரையில் முஸ்லிம்களிடையே அதிக பணவசதி உள்ளதாகக் கூறியுள்ள அவர் அவற்றினைச் செலவிடுவதில் என்ன தவறெனக் கேட்டுள்ளார்.

இந்த அநீதியான பாரபட்சமான விளரம்பரக் கட்டண உயர்வு காரணமாக முஸ்லிம் நிகழ்ச்சியில் தங்களது விளம்பரங்களை ஒலிபரப்ப முடியாத நிலைமை முஸ்லிம் வர்த்தகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வருமானத்தில் முஸ்லிம் சேவையின் வருமானமே அதிக பங்களிப்பைச் செலுத்தி வருகிறது. இருப்பினும் அங்கு கடமை புரியும் முஸ்லிம்களின் நால்வர் மட்டுமே நிரந்தர சேவைக்கு உள்ளீர்க்கப்பட்டுள்ளனர், ஏனையோர் பகுதி நேர ஊழியர்களாகப் பணியாற்றுகின்றனர். அத்துடன் இவர்களுக்கு ஒரு நிறுவனத்தினால் வழங்கப்படுகின்ற எந்த வித வசதிகளும் வழங்கப்படாததும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை முஸ்லிம் சேவைக்கான விளம்பரக் கட்டணங்கள் மாத்திரம் இந்த ஆண்டு ஜனவரியில் 5 வீதத்தினாலும், மார்ச்சில் 20 வீதத்தினாலும் அதிகரிக்கப்பட்டிருந்தது.

இந்தக் கட்டண அதிகரிப்பு தமிழ், சிங்கள சேவை நிகழ்ச்சிகளுக்கு மேற்கொள்ளப்படாததுடன், தமிழ் சேவையில் கட்டணம் ஏதும் அறவிடப்படாத நிலையில் கோயில் திரு விழாக்களின் நேரடி ஒலிபரப்புக்களும் ஏனைய நிகழ்ச்சிகளின் ஒலிபரப்புக்களும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூட்டுத்தாபனத் தலைவரின் புதிய சுற்று நிருபத்தின்படி 4500 ரூபாவாக உள்ள 15 நிமிட கட்டணங்கள் 7500 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளன. வரிகள் சேரும்போது கட்டணம் மேலும் அதிகரிக்கும். அத்தோடு 7500 ரூபாவாக தற்போதுள்ள அரை மணித்தியால கட்டணங்கள் 15000 ரூபாவாகவும், 16,000 ரூபாவாக உள்ள ஒரு மணித்தியாலயக் கட்டணங்கள் 30,000 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளன.

அத்தோடு நேரடி ஒலிபரப்புக்கள், பள்ளிவாசல், பொது அமைப்புக்களின் ஒலிபரப்புக்கள் தொடர்பிலும் கட்டண அதிகரிப்பை மேற்கொள்ளுமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!