animated gif how to

மட்டக்களப்பு வைத்தியசாலையில் உள்ள மலசலகூடங்களில் அரபு எழுத்தனி மாபில்கள்

August 27, 2012 |

-எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ்-

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ள மலசலகூடங்களில் அரபு எழுத்தனி கொண்ட மாபில்கள் பதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி இன்போ வாசகர் ஒருவர் எமக்கு தெரியப்படுத்தினார்.

இதை உறுதிப்படுத்துமுகமாக அங்கு சென்று பார்த்த போது, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒன்பதாம் இலக்க ஆண்கள் விடுதி மலசலகூடத்திலேயே இவ்வாரான தரை மாபிள்கள் பதிக்கப்பட்டுள்ளதை .அறியமுடிந்தது.

இந்த மலசலகூடங்களில் காணப்படும் அரபு எழுத்துக்களை நோக்கியபோது அவை அல்லாஹ், பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான், முஹம்மத் போன்ற வசனங்கள் காணப்பட்டது. இதை உறுதிப்படுத்துமுகமாக காத்தான்குடி இன்போ அரபு மொழியில் தேர்ச்சி பெற்ற மௌலவிமார்களிடம் இதன்னுடைய புகைப்படங்களை காட்டியபோது, அவர்கள் மேற்கூரிய அரபு வசனங்கள் காணப்படுவதாக உறுதிப்படுத்தினார்கள்.

இது தோடர்பாக மேலதிக விசாரணைகளை முடுக்கி விட்டபோது, இந்த தரை மாபிள்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை 6 மாதங்களுக்கு முன் திருத்த வேலை செய்யும் போது ஒப்பந்தக்காரர்களால் பதிக்கப்படுள்ளதை அறியமுடிந்தது.
காத்தான்குடியில் கட்டட பொருட்கள் விற்பனை செய்யும் கடை உரிமையாளர் ஒருவரிடம் இது தொடர்பாக வினவியபோது, இவ்வகையான தரை மாபிள்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாகவும், இதில் காணப்படும் அரபு எழுத்தணி காரணாமாக இதன் இறக்குமதி இலங்கையில் முற்றாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாவும், இவை மிகவும் விலை குறைந்த தரை மாபிள்கள் எனவும் அவர் கூறினார்.
இவ்விடயம் தொடர்பாக மட்டக்களப்பு பொதனா வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் முருகானந்தம் அவர்களுடன் காத்தான்குடி இன்போ தொடர்பு கொண்டு கேட்டபோது, இவ்விடயம் தொடர்பாக நீங்கள் தெரிவிக்கும்வரை வேறு எவரும் இதுபற்றி தனக்கு தெரியப்படுத்தவில்லை எனவும், அவ்வாறு தெரியப்படுத்தி இருந்தால் குறித்த ஒப்பந்தகாரருடன் பேசி இருக்கமுடியும் எனவும், தற்போது தன்னால் இவ்விடயம் தொடர்பாக சென்று பார்க்க முடியுமாக இருந்தாலும் குறிப்பிட்ட அரபு எழுத்தனிபற்றி அறிந்து கொள்ளக்கூடிய ஆற்றல் தனக்கு இல்லாததால் அதுபற்றி வைத்தியசாலை அபிவிருத்தி குழுவில் உள்ள முஸ்லிம் சகோதரர்களுடன் சென்று பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பதாகவும், இவ்வாரான விடயங்களை காண்கின்றபோது முதலில் தனக்கு தெரியப்படுத்தினால் அவைகளை உடன் நிவர்த்திக்கமுடியும் எனவும் தெரிவித்தார்.
இது தொடர்பாக காத்தான்குடியில் இயங்கும் இஸ்லாமிய நிறுவனம் ஒன்றும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் மற்றும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்கு இவ்விடயம் தொடர்பாக கவனம்செலுத்துமாறு கேட்டு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தெரியவருகின்றது.
மேற்படி விடயம் தொடர்பாக வைத்தியசாலை அபிவிருத்தி குழுவின் அங்கத்தவர்களில் ஒருவரான மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் என்.கே.றம்ழான் அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது வைத்தியசாலையின் அபிவிருத்தி உட்கட்டமைப்பு விடயங்களிலேயே தாம் கவனம் செலுத்தியதாகவும் இவ்வாரான மலசலகூடங்களை சென்று பார்வையிடாதது தங்களது தவரு எனவும் தெரிவித்ததுடன் இது விடயமாக கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்தார்.
இவ்வாறன செயற்பாடுகள் முஸ்லிம்கள் மனதை பெரிதும் புண்படுத்துவதோடு, பல சந்தேகங்களையும் உண்டாக்குவதாக எமக்கு இந்த செய்தியை தெரியப்படுத்திய வாசகர் தெரிவித்தார்.
தகவல்: KWC






0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!