(றிப்தி அலி -TM)
2012ஆம் ஆண்டுக்கான ஹஜ் பயணத்திற்கான கட்டுப்பாடு விலை இன்று
சனிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமையாக 425,000 ரூபா ஹஜ் பயணத்திற்கான கட்டுப்பாடு விலை என
ஹஜ் விவகாரங்களுக்கான சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி அறிவித்துள்ளார்.
குறித்த
கட்டுப்பாட்டு விலைக்கு மேலதிகமாக கட்டணம் அறவிடும் ஹஜ் முகவர்களுக்கு எதிராக சட்ட
நடவடிக்கை எடுக்கப்படும் என சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர்
மேலும் தெரிவிக்கையில்,
"இலங்கையிலிருந்து 2012ஆம் ஆண்டு ஹஜ் பயணத்தினை மேற்கொள்வதற்காக 6,245 பேர் முஸ்லிம்
சமய கலாசார திணைக்களத்திற்கு விண்ணப்பித்திருந்தனர். இவர்களிடையே நடத்தப்பட்ட
நேர்முக பரீட்சையின் ஊடாக சுமார் 5200 பேர் இம்முறை ஹஜ் பயணத்தை மேற்கொள்ள தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
எனினும், தற்போதைய நிலையில்
சவூதி அரேபிய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட கோட்டாவிற்கு இணங்க 2,800 பேர் மாத்த்pரம ஹஜ் பயணத்தினை
மேற்கொள்ள முடியும். இதனால் சுமார் 3,200 வரையான தொடர் இலக்கத்தினை கொண்ட
விண்ணப்பதாரிகள் இலங்கையிலிருந்து 2012ஆம் ஆண்டு ஹஜ் பயணத்தினை மேற்கொள்வதற்கு
தகுதியானவர்கள் என தெரிவித்து முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தினால் கடிதம்
அனுப்பபட்டள்ளது.
குறித்த கடிதத்தை
அடிப்படையாக கொண்டு ஹஜ் யாத்திரீகர்கள் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ள
முடியும். குறித்த கடிதங்கள் கிடைக்காதவர்கள் முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தினை
தொடர்பு கொள்ள முடியும்.
அத்துடன், ஹஜ் விசாவிற்காக
குறித்த கடிதத்துடன் விண்ணப்பிக்கும் ஹஜ் முகவர்களிற்கு மாத்திரமே விசா
வழங்கப்படும்.
இந்த கட்டுப்பாட்டு
விலைக்கு சில ஹஜ் முகவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும் குறித்த
கட்டுப்பாட்டு விலையின் ஹஜ் கிரியைக்காக யாத்திரிகர்களை அழைத்து செல்ல
முடியாதவர்கள் ஹஜ் முகவர்கள் செயற்பாட்டிலிருந்து விலகியிருக்க முடியும்"
என்றார்.
0 கருத்துரைகள் :
Post a Comment