animated gif how to

தீவிரவாததிற்கு எதிராக ஒன்றுபடுவோம்! சர்வதேச இளைஞர் பாராளுமன்ற பிரதித் தலைவர் முயிஸ் வஹாப்தீன்!

July 16, 2012 |

தீவிரவாததிற்கு எதிராக ஒன்றுபடுமாறு சர்வதேச இளைஞர் பாராளுமன்ற பிரதித் தலைவர் முயிஸ் வஹாப்தீன் கோரிக்கை!
மியன்மார் முஸ்லிம்கள் தாக்கப்பட்ட விடயம் தொடர்பில் மியன்மார் அரசாங்கம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்திற்கு அநீதிழைத்திருப்பதை சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டு வந்து அழுத்தம் கொடுக்கும் நோக்கில் எம்து சர்வதேச இளைஞர் பாராளுமன்றம் ஏற்பாடு செய்து வருகிறது என்று பிரதித் தலைவர் முயிஸ் வஹாப்தீன் தெரிவித்தார்.

மியன்மார் முஸ்லிம்களுக்கு எதிராக பெளத்த தீவிரவாத இயக்கங்கள் மேற்கொள்ளும் பயங்கரவாத தாக்குதல்களை நிறுத்துவதற்கும் சர்வதேச சமூகத்தை தலையிடுமாறும் வேண்டி நிற்கிறது.
இது தொடர்பாக சர்வதேச இளைஞர் பாராளுமன்றத்தின் பிரதித் தலைவர் முயிஸ் வஹாப்தீன் மெட்ரோ மிரருக்கு மேலும் தெரிவிக்கையில்;
கடந்த சில வாரங்களாக பௌத்த தீவிரவாத குழுக்கள் மியன்மார் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளும் படுகொலைகள், பெண்கள் கற்பழிப்பு, வீடுகளை கொல்லையிடல், உடமைகள் சூறையாடல் போன்ற நிகழ்வுகள் தங்களை மிகவும் கவலைக்குள்ளாக்குவதாக தெரிவித்துள்ளதோடு, மியன்மார் அரசாங்கத்தின் மீது தாக்கம் செலுத்துகின்ற, அனைத்து நாட்டு ஆட்சியாலர்கள், ஐக்கிய நாடுகள் சபை, உலக அனைத்து மனித உரிமை அமைப்புகள், அரபு லீக், சர்வதேச இஸ்லாமிய வாலிபர் இயக்கங்கள் அனைத்தும் இத் தீவிரவாத தாக்குதளை நிறுத்துவதற்கும், மியன்மார் முஸ்லிம்களின் உயிர்களையும், உரிமைகளையும் பாதுகாப்பதற்கும் முன் வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
அராக்கான் மாகண முஸ்லிம்கள் அதிகமான அளவில் கடும்போக்கு பௌத்த தீவிரவாத அமைப்பினரின் தாக்குலுக்கு முகம் கொடுக்க முடியாமல் செய்வதறியாது திண்டாடுவதாகவும் இத் தாக்குதலால் உயிர் இழந்த முஸ்லிம்களின் எண்னிக்கையினை கணக்கிட்டு கூற முடியாதுள்ளதாகவும்காணப்படும் இந்நிலையில் தீவிரவாத தாக்குதல் ஆரம்பித்த பத்து நாட்களுக்குள் சுமாராக ஐம்பதாயிரம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளதாக உத்தியோகப்பற்றற் கருத்து தெரிவிக்கின்றது.
ஒரு நாட்டின் பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் அந்த நாட்டில் வாழ்கின்ற சிறுபான்மை சமூகத்தினரின் வாழ்வுரிமையை பாதுகாப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கா விட்டால் அது ஒரு பாரதூரமான குற்றமாகும் என்பதை நாம் வலியுறுத்தி தெரிவித்துக் கொள்கின்றோம்.
இது விடயத்தில் மியன்மார் அரசாங்கம் மெளனமாக இருப்பதை கண்டிப்பதோடு மியன்மார் அரசு கூடிய விரைவில் இதற்கான முடிவினை காண வேண்டும் எனவும் கோருகிறோம். உறுதியான தீர்மானம் ஒன்றை மேற்கொண்டு முஸ்லிம்களின் இருப்பையும் பாதுகாப்பையும் உத்தரவாதப்படுத்துமாறு கோரி ஜெனிவாவில் இயங்கும் அரப் லீக் தூதுவராலயத்திற்கு இது தொடர்பான பிரேரணை ஒன்றை சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஜெனீவாவை தலைமையகமாக கொண்டு 36 நாடுகளில் குறிப்பாக இளைஞ்சர்களை வலுவூட்டும் சர்வதேச இளைஞர் பாராளுமன்றத்தின் பிரதித் தலைவர் முயிஸ் வஹாப்தீன் மேலும் தெரிவித்தார்.
மியன்மாரின் மொத்த சனத்தொகையில் முஸ்லிம்கள் 15 வீதமாகவும், அரைவாசி முஸ்லிம்கள் அராகான் மாகாணத்தில் வாழ்வதாகவும் புள்ளி விபரம் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!