animated gif how to

புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லுரி மாணவிகளால் நூல் வெளியீடு

July 16, 2012 |

புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லுரியின் 17 ஆவது விடுகை வருட மாணவிகளால் தயார் செய்யப்பட்ட "உமர் இப்னு கத்தாப் (ரழி) அவர்களின் சாம்ராஜிய முகவரிகள்" என்ற ஆய்வு நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை (14) கல்லுரியின் ஷாமில் மண்டபத்தில் இடம்பெற்றது.

பிரதம அதிதியாக சியம்பலாகஸ்கொட்டுவ அல்-மதீனா தேசிய பாடசாலை அதிபர் அஷ்ஷெய்க் எம்.ஜே.எம்.மன்சூர் அவர்களும்,நுால் அறிமுகம் மற்றும் மதிப்புரை என்பனவற்றை எங்கள் தேசம், பிரபோதய ஆசிரியர் எம்.எச்.எம்.ஹஸன் அவர்களும் நிகழ்த்தியதுடன், விசேட அதிதிகளாக புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ.பாயிஸ்,பெரியபள்ளிவாசல் தலைவர் எஸ்.ஆர்.எம்.எம்.முஸம்மில் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.
நூல் பற்றி விபரங்களுக்கு பணிப்பாளர் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லுரி,மன்னார் வீதி, புத்தளம் என்ற முகவரியுடனோ,0322266638 அல்லது 0779772938 என்ற தொலைபேசி இலக்கத்துடனோ தொடர்பு கொள்ளலாம்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!