animated gif how to

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது அரசியல் தனித்துவத்தை இழந்து விட்டது - BBC

July 16, 2012 |

இலங்கையில் நடை பெற விருக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியுடன் இனைந்து போட்டியிட எடுத்துள்ள தீர்மானம் அக்கட்சிக்குள் மாற்றுக் கருத்துக்களை ஏற்படுத்தியுள்ளது.



அம்பாறையில் ஏழ்மை நிலையிலுள்ள ஒரு முஸ்லிம் குடும்பம்

கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் இக்கட்சி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இனைந்து போட்டியிட்டது.

நடைபெறவிருக்கும் தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணக்கப்பாட்டு அடிப்படையில் போட்டியிட வேண்டும் என்ற பரவலான எதிர் பார்ப்புகளுக்கு மத்தியிலேயே முஸ்லிம் காங்கிரஸ் இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாகக் கூறபபடுகின்றது.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியுடன் இனைந்து போட்டியிட எடுத்த தீர்மானம் காரணமாக கட்சியின் முக்கிய தலைவர்களில் சிலர் அதிருப்தியடைந்துள்ளதாகவும் பிபிசியால் அறியக் கூடியதாக உள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அரசியல் பலம் மிக்க மாகாணம் என்று கருதப்படும் அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் கூட இந்த தீர்மானம் குறித்து மாறு பட்ட கருத்துக்களை BBC க்கு தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இனைந்து போட்டியிடுவதன் மூலமே முஸ்லிம்களின் எதிர்பார்ப்பான முஸ்லிம் முதலமைச்சர் என்ற இலக்கை எட்ட முடியும் என ஒரு சாரார் நம்பிக்கையுடன் காணப்படுகின்றார்கள்.

ஆனால், சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்று சவுதி அரசாங்கத்தின் உதவியுடன் கட்டப்பட்ட வீடுகளைக் கூட வழங்கத் தயங்கும் அரசாங்கத்துடன் எப்படி முஸ்லிம் காங்கிரஸ் இணக்கப்பாட்டுக்கு வரலாம் என்று மறு சாரார் கூறுகிறார்கள்.

இந்த தீர்மானம் காரணமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது அரசியல் தனித்துவத்தை இழந்து விட்டதாகவும் சில மக்கள் BBC யிடம் தெரிவித்தனர்.

இலங்கையில் தேசிய அளவில் முஸ்லிம்களின் பெரிய கட்சியாகவும், தன்னை முஸ்லிம் மக்களின் தலைவராகவும் ரவூஃப் ஹக்கிம் அவர்கள் காட்டிக் கொள்ள விழைகிறார், ஆனால் யதார்த்தத்தில் அது சாத்தியப்படாத ஒன்றாகவே இருந்துள்ளது என்று சுட்டிக்காட்டுக்கிறார் இலங்கை ஆய்வாளரும் கிழக்கு பல்கலைகழகத்தின் முன்னாள் துணை வேந்தருமான டாக்டர் யுவி தங்கராஜா.

போருக்கு முன்னர் சிறுபான்மை கட்சிகளின் ஆதரவு மத்திய அரசுக்கு தேவைப்பட்டது என்றும், போருக்கு பின்னரான காலத்தில் அந்தச் சூழல் மாறிவிட்டது என்றும் அவர் கூறுகிறார். மத்திய அரசில் பல கட்சிகளின் முஸ்லிம் தலைவர்கள் அமைச்சர்களாக இருக்கும் வேளையில், முஸ்லிம் வாக்குகளுக்காம ஸ்ரீலங்கா முஸ்லிம் கட்சியை மட்டுமே மஹிந்த ராஜபக்ஷ அரசு சார்ந்திருக்க வேண்டிய நிலை இல்லை எனவும் டாக்டர் தங்கராஜா தெரிவித்தார்.

அரசாங்கத்துடன் தான் இணைந்து செயல்பட்டால் மட்டுமே தனக்கும், தனது சமூக மக்களுக்கும் நலன் ஏற்படும் என்று ஹக்கீம் கருதியிருக்கக் கூடும் எனவும் கூறும் டாக்டர் தங்கராஜா, அப்படியான சிக்கலின் பின்னணியிலேயே இந்த முடிவை அவர் எடுத்திருத்திருக்கலாம் எனவும் கூறுகிறார்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!