கடந்த
3 தசாப்தகாலமாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் தொடர்பாக இலங்கையில் நீதியமைச்சர்
ரவூப் ஹக்கீமுடன் அல் ஜஷீரா தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றை நடத்தியிருந்தது.
கேள்வி: ஐக்கிய
நாடுகளின் மனிதவுரிமைகள் ஆணையகம் இலங்கையில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட
போர்க்குற்றங்கள் தொடர்பாக கேள்வியெழுப்பியிருந்தது. அந்த விடயங்கள் தொடர்பாக
விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஆணைக்குழு அரசாங்கத்தை வலியுறுத்தியிருந்தது. அதற்காக
இலங்கை என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது?
ஹக்கீம் - பதில்: இலங்கை தொடர்ந்தும் சர்வதேச
சமூகத்தினரின் நிலைப்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்து வருகின்றது. இராணுவத்தினரால்
மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் போர்க்குற்றங்கள், அதனோடு தொடர்புடையவர்கள்
குறித்து ஆராய்ந்து வருகிறது. எனினும், ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவை
அமர்வில் இலங்கையின் மீது அமெரிக்கா கொண்டு வந்த பிரேரணைக்கு 24 நாடுகள்
ஆதரவாகவும், 15 நாடுகள்; எதிராகவும்
வாக்களித்திருந்தன. 8 நாடுகள் வாக்களிக்காமலும்
இருந்தன.
கேள்வி: அப்படியானால் பிரேரணை
வெற்றிபெற்றது, அதன்பின்னர்
ஏதேனும் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை இலங்கை மேற்கொண்டதா?
பதில்: நாங்கள்
தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்துவருகிறோம். இருந்த போதும் சில விடயங்களில்
தாமதங்கள் ஏற்பட்டுள்ளன. சில சம்பவங்கள் தொடர்பான உண்மைகளை கண்டறிவதற்கு முடியாத
நிலை உள்ளது. சர்வதேச சமூகத்தில் நாம் ஒரு முக்கிய அங்கத்தவராக இருக்கின்றோம்.
எனவே, இந்த
விசாரணைகளை தட்டிக்கழிக்கமுடியாது.
கேள்வி: நீங்கள்
கூறுகின்றீர்கள் சர்வதேச அழுத்தங்களில் இருந்து விடுபட முடியாதென்று, அப்படியானால் அதற்காக என்ன
நடவடிக்கைகளை எடுத்துள்ளீர்கள்.
பதில்: விசாரணைகளுக்கான
முதலிடத்தில் LLRC எனப்படும்
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை
நடைமுறைப்படுத்தவுள்ளோம். அந்த பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கே இலங்கை அரசாங்கம்
முன்னுரிமை வழங்கி செயற்படுகின்றது. ஏற்கனவே இதற்கான ஏற்பாடுகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கேள்வி: மனிதவுரிமைகள் பேரவையின்
அறிவுறுத்தலுக்கு அமைய யுத்த நடவடிக்கைகளில் ஈடுபட்ட இராணுவத்தினர் மற்றும்
அவர்களுக்கான கட்டளை வழங்கியவர்கள் போர்க்குற்றத்தில் ஈடுபட்டிருந்தால் அதற்காக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு
குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்காக என்ன முனைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பதில்: இந்த ஆணைக்குழு அதற்காகவே நியமிக்கப்பட்டுள்ளது, யுத்தத்தின் போது அதில் தொடர்புடைய அனைத்து தரப்பினரிடமும்
விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, குற்றம்சுமத்தப்பட்டவர்கள் மீது விசாரணை நடத்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது.
0 கருத்துரைகள் :
Post a Comment