animated gif how to

எகிப்து ஜனாதிபதி தேர்தல்: முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் வேட்பாளர் கலாநிதி மூர்ஸி வெற்றி

June 18, 2012 |

எகிப்து ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாம் சுற்று வாக்கு எண்ணும் பணிகள் அநேக இடங்களில் முடிவுக்கு வந்துள்ளன. இதன் பிரகாரம் கலாநிதி முர்ஸி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.(வீடியோ இணைப்பு)


எனினும், இறுதித் தேர்தல் முடிவுகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை

கலாநிதி முர்ஸி 52.50 வீதமான வாக்குகளை பெற்றுள்ளதாகவும், போட்டியாளரான அஹ்மத் ஷபீக் 47 வீத வாக்குகளைப் பெற்றுள்ளதாகவும்  பெரும்பாலான சுயாதீன ஊடகங்கள் கலாநிதி முர்ஸி தொடர்ந்தும் முன்னிலையில் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளன.
 
திங்கட்கிழமை தனது பிரச்சார அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய கலாநிதி முஹம்மத் முர்ஸி, “இந்த வெற்றிக்காக நான் அல்லாஹ்வுக்கு நன்றி சொல்கிறேன். சுதந்திரத்திற்கும், ஜனநாயகத்திற்கும் ஆதரவாக வாக்களித்த எல்லா எகிப்தியர்களுக்கும் நன்றிகள். இது எல்லா எகிப்தியர்களுக்குமான வெற்றியாகும்எனத் தெரிவித்துள்ளார்.

மகிழ்ச்சி நிறைந்த ஆதரவாளர் கூட்டத்தின் மத்தியிலேயே அவர் இந்த மாநாட்டை நடத்தினார். நாம் சமாதானத்தின் செய்தியையே கொண்டுவந்தோம். புரட்சிக்கும் புரட்சியாளர்களுக்கும், ஆண்களுக்கும் பெண்களுக்கும், தாய்மார்களுக்கும் சகோதரிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் மாணவர்களுக்கும், எகிப்தின் உள்ளே இருப்பவர்களுக்கும் வெளியே இருப்பவர்களுக்கும், முஸ்லிம்களது எகிப்துக்கும் கிறிஸ்தவர்களது எகிப்துக்கும்என எல்லோருக்கும்தான் நாம் இந்த செய்தியைக் கொண்டுவந்தோம்
 
புரட்சியில் ஷஹீதானவர்களது குடும்பத்திற்கு, அவர்களது சட்ட ரீதியான உரிமை கிடைக்கும் என நான் உறுதிப்படுத்துகிறேன்நவீன சிவில் அரசாங்கம் ஒன்றை அமைப்பதே தமது முதன்மையான பணி எனவும், கிறிஸ்தவர்களது அடிப்படை உரிமைகள் மதிக்கப்படும். அவர்களைப் பழிவாங்கும் எண்ணம் தமக்கில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

சட்டத்தையும் யாப்பையும் மதிக்கின்ற எகிப்து மக்களுக்கு பணியாளனாக இருக்க விரும்புவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். பழிவாங்கும் சிந்தனை தன்னிடம் இல்லை என்று மறுத்த எகிப்திய ஜனாதிபதி முர்ஸி எகிப்தின் எழுச்சிக்காக அனைவரும் கைகோர்க்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.

இதன் பின்னர், “சுதந்திரமான புரட்சியாளர்களது வெற்றி தொடரும். இராணுவ ஆட்சி வீழட்டும்என ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர். எகிப்தின் கணிசமான கிறிஸ்தவர்கள் அஹ்மத் ஷபீக்கிற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.









Link: http://www.aljazeera.com/news/middleeast/2012/06/2012617223351982587.html
AL JAZEERA

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!