தூது: சர்வாதிகாரி பஸ்ஸாருல் ஆஸாதின்
ராஜினாமாவைக் கோரி கடந்த ஆண்டு துவங்கிய ஜனநாயகரீதியான போராட்டத்தில் இதுவரை 14,500க்கும் அதிகமானோர் கொலைச்
செய்யப்பட்டுள்ளனர். இதில் 2302 பேர் கடந்த மாதம் மட்டும் கொலைச் செய்யப்பட்டார்கள் என்று அரசு
சாரா அமைப்பான சிரியா மனித உரிமை கண்காணிப்புக்குழு(எஸ்.ஒ.ஹெச்.ஆர்) செய்தி
தொடர்பாளர் ராமி அப்துற்றஹ்மான் தெரிவித்துள்ளார்.
கொலைச்
செய்யப்பட்டவர்களில் 10,177 பேர் சாதாரண மக்கள் ஆவர். 4,300 பேர் பாதுகாப்பு படையினர்.
ராணுவத்தினருடன் மோதும் புரட்சி ஆயுத படையினரும் சாதாரண மக்களில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஐ.நா-அரபு
லீக் மத்தியஸ்த பேச்சுவார்த்தை அமலுக்கு வந்த ஏப்ரல் 12 ஆம் தேதிக்கு பிறகு 3,350 பேர் மரணித்துள்ளனர்.
15 மாதங்களாக
சிரியாவில் தொடரும் போராட்டத்தில் கடந்த 2,3 மாதங்களாக கடுமையான மோதல்கள்
குறித்து செய்திகள் வெளியானதாக எஸ்.ஒ.ஹெச்.ஆர் கூறுகிறது.
ஐக்கிய
நாடுகள் சபையின் கீழ் செயல்படும் கண்காணிப்பாளர்கள் மோதல் நடைபெறும் ஹும்ஸ், ஹபா ஆகிய நகரங்களுக்கு நேற்று
சென்றனர். ஷியா மக்களின் நிகழ்ச்சியில் நேற்று முன் தினம் இங்கு குண்டுவெடிப்பு
நிகழ்ந்தது. இதில் 14 பேர்
கொல்லப்பட்டனர்.
இதனிடையே, சிரியாவில் எதிர்ப்பாளர்களின்
ஆதரவாளர்களை பழிவாங்கும் நோக்குடன் ராணுவம் கூட்டுப் படுகொலைச் செய்வதாகவும், அதற்கான ஆதாரங்கள்
கிடைத்துள்ளதாகவும் ஆம்னஸ்டி இண்டர்நேசனல் கூறுகிறது.
மோதலை
முடிவுக்குக் கொண்டுவர சர்வதேச தலையீடு அத்தியாவசியம் என்று ஆம்னஸ்டி கூறுகிறது.
2 கருத்துரைகள் :
iran pradhamar ahamed nijadhi padhavi vilagugirar endru oru seidhi veliyaagi ulladhu adhu unmaiya.
thoodhu online endra link il ulladhu
plz reply
Post a Comment