தினம் ஒருவர் வீதம் அமெரிக்க ராணுவத்தில் இவ்வாண்டு தற்கொலை நிகழ்ந்துள்ளதாக
அமெரிக்க பாதுகாப்புத்துறை அண்மையில்
வெளியிட்டுள்ள
அறிக்கை கூறுகிறது. ராணுவத்தினர் மத்தியில் தற்கொலைக் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரங்கள்
நடந்தபொழுதும் அவையெல்லாம் பலனளிக்கவில்லை
என்பதை இவ்வறிக்கை ஒப்புக்கொள்கிறது.
இவ்வாண்டும் 155 தினங்கள்
கழிந்தபொழுது, 154 அமெரிக்க
ராணுவத்தினர் தற்கொலைச் செய்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இவ்வாண்டு கொலைச் செய்யப்பட்ட
ராணுவத்தினரை விட தற்கொலைச் செய்தவர்களின் எண்ணிக்கை
அதிகமாகும். இத்தகவலை பாதுகாப்புத்துறையை மேற்கோள்காட்டி அசோசியேட் பிரஸ் கூறுகிறது.
முந்தைய ஆண்டில் இதே கால அளவில் நடந்த தற்கொலைகளை விட 18 சதவீதம் இவ்வாண்டு அதிகரித்துள்ளது.
தற்கொலைக்கான காரணத்தை முழுமையாக
புரிந்துகொள்ள முடியவில்லை என்று பாதுகாப்புத்துறை புதிதாக உருவாக்கிய தற்கொலை தடுப்பு
பிரிவின் தலைவர் ஜாக்கி காரிக் தெரிவித்துள்ளார்.
தற்கொலையை கட்டுப்படுத்த முடியாததுக் குறித்து கவலை
ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இவ்வாண்டு ஜூன் 3-ஆம் தேதி வரையிலான தற்கொலை நிகழ்வுகள்
பாதுகாப்புத்துறையின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. பல வருடங்களாக சொந்த நாடு மற்றும்
குடும்பத்தினரிடம் இருந்து பிரிந்து
இருப்பது
ராணுவத்தினரிடையே பெரும் நிராசை மற்றும் கோபத்திற்கு காரணம் என முன்னர் வெளியான அறிக்கை கூறியிருந்தது.
0 கருத்துரைகள் :
Post a Comment