animated gif how to

அல்ஹைதா, தலிபான் அமைப்புகளுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை - வருகிறது சட்டம்

June 04, 2012 |

TM
அல்ஹைதா மற்றும் தலிபான் அமைப்புகளுடன் தொடர்புடைய தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தடைகளை விதிப்பதற்கான  ஒழுங்கு விதிகளை அரசாங்கம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது. ஐ.நா.வுடனான தனது கடப்பாடுகளுக்கமைவாக செயற்படுவதற்காக இவ்விதிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

1999 ஒக்டோபரில் ஐ.நா. பாதுகாப்புச் சபையினால் ஏகமனதாக த நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இந்த ஒழுங்கு விதிகள் வினைத்திறனாக்கும். பயங்கரவாதத்தை முறியடிப்பதற்கும் குறிப்பாக அல் கயீடா மற்றும் தலிபான்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்குமாக பரந்தளவிலான தந்திரோபாயங்களை இப்பிரேரணை வரைந்துள்ளது.

இந்த ஒழுங்குவிதிகளின்படி அல் கயீடா மற்றும் தலிபான்களுடன் தொடர்புடைய தனி நபர்கள், மற்றும் நிறுவனங்களின் நிதி முற்றும் ஏனைய நிதிச்சொத்துக்கள், பொருளாதார வளங்கள் முடக்கப்படும்.

மேற்படி இரு அமைப்புகளுடன் தொடர்புடைய தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களின் பட்டியலை ஐ.நா. பாதுகாப்புச் சபை தயாரித்துள்ளது. இந்த ஒழுங்குவிதிகளின் கீழ் அமைக்கப்படவுள்ள தகுதிவாய்ந்த அதிகாரசபை மூலம் இத்தகவல்கள் இலங்கை மக்களுக்கு வழங்கப்படும்.

நாடாளுமன்றத்தில் இந்த ஒழுங்குவிதிகள் அங்கீகரிக்கப்பட்டவுடன் அவை வர்த்தமானியில் பிரகடனப்படுத்தப்படும். ஐ.நா. அங்கத்துவ நாடுகள் மற்றும் பிராந்திய அமைப்புகள் வழங்கும் தகவல்களுக்கு ஏற்ப குறித்த பட்டியலை மேற்படி அதிகாரசபை தொடர்ச்சியாக புதுப்பிக்கும். இவ்வருடம் மேற்படி பட்டியல் 16 தடவை புதுப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஒழுங்குவிதிகளின்படி, மேற்ப பட்டியலிலுள்ள எந்வொரு நபருக்கும் சொந்தமான அல்லது பங்குடைய நிதி மற்றும் நிதிச் சொத்துகள், பொருளாதார வளங்களுடன் எவரும் கொடுக்கல்வாங்கல்களை மேற்கொள்வது தடுக்கப்படும்.
இந்த ஒழுங்குவிதிகளின்படி, மேற்படி பட்டியலிலுள்ள நபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் நிதி மற்றும் பொருளாதார வளங்கள் கிடைக்கச் செய்வது சட்டவிரோதமாக்கப்படும். அல் கயீடா மற்றும் தலிபான் செயற்பாட்டாளர்கள் தொடர்பான தகவல்களை மறைத்துவைப்பதும் இந்த ஒழுங்குவிதிகளின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாக்கப்படும்.

New laws to freeze assets of al-Qaeda, Taliban supporters

By Chandani Kirinde
The Government will soon present regulations in Parliament to apply sanctions on individuals and entities associated with al-Qaeda or the Taliban, in keeping with its obligations to the United Nations.

The regulations will give effect to the UN Security Council resolution adopted unanimously in October 1999. This resolution sets out wide-ranging strategies for combating terrorism and particular measures to be imposed against al-Qaeda and the Taliban.

The regulations will impose a freeze on funds and other financial assets or economic resources of individuals and entities associated with al-Qaeda or the Taliban.

The Sanctions Committee which was set up after the UNSG resolution has made a “Consolidated List” of persons and entities with links to the two groups and this information will be made available to the Sri Lankan public by the Competent Authority who will be appointed under the new regulations.

The list will be published in the Gazette once the regulations get parliamentary approval and will be updated if there are any subsequent amendments to it. The Committee regularly updates the list on the basis of relevant information provided by member states and international and regional organisations with sixteen updates so far this year.

The regulations prohibit persons from dealing with any funds, other financial assets or economic resources that belong wholly or are jointly owned, held or controlled by a person whose name is on this list. It will also be illegal to make funds, other financial assets or economic resources available, directly or indirectly, to any persons who are linked to the two groups. Withholding information regarding funds and assets of al-Qaeda or Taliban operatives too will be an offence punishable by law, under these regulations.

Persons who violate these regulations will be charged in the High Court and, if convicted, will be liable to imprisonment of up to two years and a fine of up to one million rupees or both.

1 கருத்துரைகள் :

Anonymous said...

Idhellathukum pinnaala Israel Namathu Arusuden Pinnip Pinaindhu Iyangi varuhiradhu Enbadhai Marakka Vendaam!! ..
Indru Neatralla "Mahaweli Thittam" kaalam mudhal thottu (Meel kudiyeatram Sambandhamaaha) Avarhalin Uravu namadhu pala arasuhaludun Irundhu Vandhulladhu..! (Varalaarai theadi padiyungal..!) .. Yuththa kaalaththil kooda namathu Padaiyinarkum, Pulihalin padaiyinarkum orey neyraththil thamadhu naattil payitchi aliththullaadhu..! -ingu Arasa Padaiku -Missiles um - Pulihal tharappukku Anti-Missiles um walangiyulladhu..! _Yudhdham Nindru poanadhaal Ivarhalukkey periya Nashtam.. Aanaalum Namadhu Arasu Seivadhu'ariyaadhu Ivarhalidam Maattik kondu ulladhu..! - Ippoadhu Kooda Avarhalin "Strategical Level" - pangalippu "Dry-zone Irrigation System" "Nation Water Management Process", etc.. enbavatril vearoondri ulladhu -Mattumandri -Thaadhihal (Nurses) Ani Aniyaaha payitrappattu avarhalathu naatukku anuppuvadhum -matrum paniyaalar Anaivaraiyum Angu sendravudan Moolai Salavai Seidhu "Yahoodhisththai" thalaiyil vidhaiththu Inge ulnaatil Iyanga Anuppuvadhum - Indru Arasukku Mattumandri -pala pirachchinahalukkum thavirka mudiyaatha oru Pangalippaaha (Israel) maariyulladhu..! .. Pala Kulappangalai -Mattraiya madhathtavarhalaiy0 namm Sondha madhaththavarhalaiy0 payanpaduthti seivadhil Ivarhal Vallunarhal...! -Maylum Innaattil Meel kudiyeatram Sambandhappatta muranpaaduhalilum Ivarhalin ul-kai (Irahasiya pangalippu) irukkalam enbadhey thatpoadhu ulla periya kavalai - Eynenil Idam/ Nilam Pidippadhil ivarhalai vittaal veayru yaaruuu!! ..

Post a Comment

Flag Counter

Free counters!