animated gif how to

பிளாஸ்‌டிக் போத்தலில் குடிநீர் அருந்துபவர்களின் அவதானத்திற்கு..!

June 02, 2012 |

வெளியூர்களுக்கு பயணம் செல்லும்போதுபெரும்பாலோனோர்குடிப்பதற்கு பிளாஸ்‌டிக் போத்தலில் குடிநீரை உபயோகிப்போம். பல்வேறு நிறுவனங்கள் தயாரிக்கின்ற குடிநீர்போத்தல்களை நாம் வாங்கி பயன்படுத்துவோம்.


இதில் எந்த நிறுவனம் நல்ல நிறுவனம் என்பதை நாம் ஆராய்வதில்லை.அதோடு இப்போத்தலின் அடியில் பொறிக்கப்பட்டுள்ள மர்ம எண்களை நம்மில் பெரும்பாலோனோர் அறிந்திருக்கவும் வாய்ப்பில்லை.

அனைத்து குடி நீர் போத்தலின் அடி பாகத்திலும் முதல் வரையிலான எண்களில் ஏதாவது ஒரு எண் பொறிக்கப்பட்டிருக்கும்.

இந்த எண்கள் அந்தபோத்தல் எந்த இரசாயனப்பொருளை கொண்டு தயாரிக்கப் பட்டது என்பதை உணர்த்தும்.

படத்தில் எண்களும் அதற்கான இரசாயனப்பொருளின் பெயரும் இடம் பெற்றுள்ளது.


இந்த இரசாயனப்பொருட்கள் அனைத்துமே நம் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியவை.

போத்தல்களிலுள்ள நீரை அருந்திவிட்டு எக்காரணம் கொண்டும் அதில் மீண்டும் நீரை நிரப்பி பயன்படுத்தக்கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால் உடலுக்கு பெரும் தீங்குகள் ஏற்பட வாய்ப்புள்ளது .

கிராமங்களில் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இதுபோன்ற போத்தல்களில் குடி நீரை நிரப்பி பாடசாலைகளுக்கு தினமும் அனுப்புகிறார்கள். இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

மேலும் புதிதாக வாங்கிய குடிநீர் போத்தல்களையும் வெயில் படும் இடங்களிலும் வைக்கக்கூடாது. அப்படி வைப்பதால் போத்தலின் இரசாயனபொருட்கள் வெகு எளிதில் நீரில் கலந்து விட வாய்ப்புள்ளது.

இவற்றில் 1, 3, 6 ஆகிய எண்கள் பொறிக்கப்பட்டுள்ள போத்தல்கள் மிகவும் தீங்கு விளைவிக்க கூடியவை .

ஆகவே இனிமேல் தண்ணீர் போத்தல் வாங்கும் போது  நிறுவனம் பெயர் மற்றும் போத்தலின் அடியிலுள்ள எண்களையும் கவனித்து வாங்குவது சிறந்தது.

தண்ணீர் முடிந்ததும்போத்தலைசூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் அப்புறப் படுத்துவது அதை விட சிறந்தது.


-இஹ்ஸான்-

1 கருத்துரைகள் :

haadi said...

தகவல் போதாது

Post a Comment

Flag Counter

Free counters!