animated gif how to

''வேர் அறுதலின் வலி'' என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா..!

May 28, 2012 |

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு முஸ்லிம்களின் பலாத்கார வெளியேற்றத்தை கவிதை வடிவில் ஆவணப்படுத்தும் நோக்குடன்  (www.jaffnamuslim.com) யாழ் முஸ்லிம் இணையம் வெளியிடவுள்ள ''வேர் அறுதலின் வலி'' என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 02-06-212 அன்று, காலை 10 மணிக்கு, முஸ்லிம் மாதர் நிலையம், இல 201 டீ.ஆர்.விஜயவர்த்தனா மாவத்த, கொழும்பு 10 (Muslim Ladies Study Circle, No. 201, D. R. Wijewardena Mawatha,Colombo 10) என்ற முகவரியில் நடைபெறவுள்ளது.


இந்நிகழ்வுக்கு நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியரும், முஸ்லிம் மீடியா போரம், சிறிலங்கா முஸ்லிம் கவுன்சில் ஆகியவற்றின் தலைவருமான என்.எம்.அமீன் தலைமை தாங்கவுள்ளார்.

பிரதம அதீதிகளாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீமும், வணிகத் துறை அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான றிசாத் பதியுதீனும் கலந்துகொள்ளவுள்ளனர்.

சிறப்பு அதீதிகளாக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா - சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர், மாவை சேனாதிராஜா எம்.பி. - செயலாளர் - இலங்கை தமிழரசு கட்சி, கே.ஏ. பாயிஸ் புத்தளம் நகர சபைத் தலைவரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

கௌரவ அதீதிகளாக மௌலவி எம். முபாரக் - அதிபர் யாழ் ஒஸ்மானியா கல்லூரி, , எம்.எஸ். ஜலீல் - பணிப்பாளர் - யாழ் கல்வி அலுவலகம், சட்டத்தரணி எம்.எம். ரமீஸ் - பிரதிமேயர் - யாழ் மநகர சபை, மௌலவி எம்.பீ.எம். சுபியான் - யாழ் மாநகர சபை உறுப்பினர், டாக்டர் ஹிஜாஸ்  - மஹரகம தேசிய வைத்தியசாலை, டாக்டர் ஏ.சீ.ஜனொஸ் சதாத் - அநுராதபுரம் தேசிய வைத்தியசாலை, எம்.எம். இமாம் - முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

விருதுபெறும் மூத்த இலக்கிய படைப்பாளிகள்

1. கவிமணி மௌலவி புஹாரி - காத்தான்குடி, 2. கலாபூஷணம் எஸ்.ஐ. நாஹுர்கனி - மாபோல,  3. ஏ.எல்.எம். சத்தார் - பாணந்துறை, 4. ரீ.எல். ஜவ்பர்கான் - காத்தான்குடி, 5. கவிஞர் ஜன்ஸி கபூர் - அநுராதபுரம், 6. ஏ.எஸ். இப்ராஹீம் கலைமேகம் - மூதூர்,  7. கவிமணி நீலா பாலன் - வெலிமடை, 8. ஏ.எம்.எம். அலி - கிண்ணியா, 9. நவாலியூர்க் கவிராயர் - யாழ்ப்பாணம், 10. கலாபூஷனம் அப்துல் லத்தீப் - புத்தளம்,
11.
கலாபூஷனம் கே.எம்.ஏ. அஸீஸ் - சாய்ந்தமருது

சிறப்பு விருது பெறும் மூத்த படைப்பாளிகள்

1. கலாபூஷணம் கவிஞர் யாழ் அஸீம் 2. கலைவாதி கலீல் 3. முல்லை முஸ்ரிபா

முதற் பிரதியை புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக்கொள்ள, சிறப்பு பிரதியை சமூக சேவையாளர் எச்.எச்.எம். நியாஸ் பெற்றுக்கொள்வார்.
கிண்ணியா அமீர் அலி நிகழ்வுகளை தொகுத்தளிப்பதுடன், கவிஞர் யாழ் அஸீம் கவி வாழ்த்துரைப்பார்.

இந்நூல் வெளியீட்டு விழாவுக்கு அழைப்பிதழ் கிடைக்காதவர்களும் கலந்துகொள்ள முடியும் தொடர்புகளுக்கு 0717268466, 0112671596. 

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!