தெஹிவாளை பள்ளிவாசல் விவகாரம் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற விடிவெள்ளி
பத்திரிகையின் ஊடகவியலாளர்கள் பௌத்த மத பிக்குகளால்
சுற்றிவளைக்கப்பட்டு,
அவர்களது
கமரா கருவிகளுக்கு இழைக்கப்பட்ட சேதங்கள் மிகவும் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியதொன்று என்று அகில
இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன்
தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் ஊடக சுதந்திரம் என்பது மிகவும் முக்கியமானதொன்று மக்களுக்கு
எதிராக சில இனவாதிகளால் மேற்கொள்ளப்படும்
நேரடி மற்றும் மறைமுகமான அடக்கு முறைகளை வெளிக் கொண்டு வந்து அதனை மக்களின் முன் நீதிக்காக
சமர்ப்பிக்கும் உண்ணத பணியினை ஊடகங்கள் செய்கின்றன.
ஊடகவியலாளர்களை பொறுத்த மட்டில் அவர்களது தியாகம்,அரப்பணம்
சமூகம் சாரந்த சிந்தனை என்பது மிகவும் பெருமதியானது,அவர்கள் செய்யும் பணிகள் போற்றப்பட
வேண்டும்.விடிவெள்ளி பத்திரகை என்பது
மிகவும் நேர்மையான முறையில் சகல தரப்புக்களின் செய்திகளை வெளிக் கொண்டுவருவதிலும்,முஸ்லிம் சமூகத்தின் தேவைகளை சுட்டிக்காட்டுவதிலும் முன்னின்று
செய்றபடும் ஒரு ஊடகமாகும்.தம்புள்ள பள்ளிவாசல்
விடயத்தில் முழுமையாக உண்மை நிலையினை வாசகர்களுக்கு துணிந்து வழங்கியதை நினைவுபடுத்த
விரும்புகின்றேன்.
இவ்வாறான நிலையில் தெஹிவளை சம்பவம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற
விடிவெள்ளி ஊடகவியலாளர்கள் தடுக்கப்பட்டமை,அவர்கள் அவமதிக்கப்பட்டமை தகவல்
சுதந்திரத்திற்கு ஏற்பட்ட அச்சுறுத்தலாகவே
கருதுகின்றேன் என்றும் அமைச்ர றிசாத் பதியுதீன் வெளியிட்டு்ள்ள அறி்க்கையில்
குறிப்பிட்டுள்ளார்.
0 கருத்துரைகள் :
Post a Comment