animated gif how to

தெஹிவளையில் ‘விடிவெள்ளி’ ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்...

May 28, 2012 |

-ஜூனைட்.எம்.பஹ்த்-

தெஹிவளை தாருர் ரஹ்மான் பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற கூட்டத்தில் செய்தி சேரிக்கச் சென்ற விடிவெள்ளி பத்திரிகையின் இரு ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களது கமெரா பறிமுதல் செய்யப்பட்டு அதில் இருந்த புகைப்படங்களும் அழிக்கப்பட்டுள்ளன.

நேற்று மாலை 4 மணியளவில் குறித்த கூட்டம் தெஹிவளை-கல்கிஸ்ஸை மாநகர சபையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் கலந்து கொள்ள ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் கூட்டத் தீர்மானம் தொடர்பில் அறிந்து கொள்ளும் பொருட்டு வெளியில் காத்திருந்த இவ்விரு ஊடகவியலாளர்களையும் சூழ்ந்து கொண்ட பௌத்த பிக்குகள் தலைமையலான குழுவினர் அவர்களை அச்சுறுத்தியுள்ளதுடன் கமெராவை பறிமுதல் செய்து அதிலிருந்து புகைப்படங்களையும் அழித்துள்ளனர்.

இரு ஊடகவியலாளர்களையும் அங்கிருந்து செல்ல முடியாதவாறு இக் குழுவினர் சிறிது நேரம் தடுத்து வைத்துள்ளனர். இது தொடர்பில் உடனடியாக தெஹிவளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த அவர் ஊடகவியலாளர்களையும் கமெராவையும் மீட்டு பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்றியுள்ளார்.

மாநகர சபையின் உள்ளே கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் வெளியில் திரண்டு நின்ற நூற்றுக்கும் மேற்பட்டோரே இவ் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தியுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் செய்தி சேகரித்த முஸ்லிம் ஊடகவியலாளர்களையும் குறித்த குழுவினர் அச்சுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!