ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணமான பக்தியாவில் ஆக்கிரமிப்பு அந்நிய படையான
நேட்டோ ராணுவம் நடத்திய கொடூரமான தாக்குதலில் ஒரு
குடும்பத்தின் குழந்தைகள் உள்பட எட்டு பேர் கொலைச் செய்யப்பட்டனர்.
எதிர்ப்பு வலுவடைந்ததைத் தொடர்ந்து நேட்டோ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. குர்தா
சரியா மாவட்டத்தில் சுரு கைலில் இச்சம்பவம்
நடந்துள்ளது.
கிராமவாசியான அப்பாவி முஹம்மது ஷாபியும் அவரது மனைவி மற்றும்
ஆறு குழந்தைகள் நேட்டோவின் வெறிக்கு பலியாகியுள்ளனர்.
மாகாண அரசு செய்தித் தொடர்பாளர் ரூஹுல்லாஹ் ஸாமுன் இப்படுகொலையை உறுதிச்
செய்துள்ளார். தாலிபான் அல்லது இதர போராளி குழுக்களுடன்
எவ்வித தொடர்பும் இல்லாதவர்கள்தாம் கொலைச் செய்யப்பட்டதாக
செய்தி ஏஜன்சிக்கு அளித்த பேட்டியில் ரூஹுல்லாஹ் கூறியுள்ளார்.
சிவிலியன்கள் கொலைச் செய்யப்பட்டதைக் கண்டித்து ஆப்கானிஸ்தானின் பல்வேறு
பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன.
அமெரிக்கா
மற்றும் கர்ஸாய்க்கு எதிராக முழக்கமிட்ட மக்கள் அமெரிக்க கொடியை எரித்தனர்.
சாதாரண மக்கள்(சிவிலியன்கள்) கொலைச் செய்யப்படுவது தொடர்பாக ஆப்கான்
அரசுக்கும், நேட்டோ படைக்கும்
இடையே கசப்புணர்வை
ஏற்படுத்தியிருக்கும் வேளையில் மீண்டும் கொலைக்கார நேட்டோ படையினர் அநீதிமான தாக்குதலை தொடர்ந்துள்ளனர்.
போராளிகளை குறித்து ரகசிய தகவல் கிடைத்துள்ளதாக நாடகமாடி அமெரிக்கா
தலைமையிலான நேட்டோ ஆக்கிரமிப்பு அந்நிய படையினர்
ஆப்கானில் தாக்குதல் நடத்துவது தொடர்கதையாகி வருகிறது. இத்தாக்குதல்களில் கொலைச் செய்யப்படும்
நபர்களில் பெரும்பாலோர் சாதாரண மக்கள் ஆவர்.
சிவிலியன்களை கொலைச் செய்வது இரு நாடுகளுக்கு இடையேயான உறவை பாதிக்கும்
என நேட்டோ கமாண்டர் ஜெனரல் ஜான் ஆலன்
மற்றும்
அமெரிக்க தூதர் ரியான் க்ரோக்கர் ஆகியோரை அழைத்து கர்ஸாய் இரண்டு வாரங்களுக்கு முன்பு விளக்கியிருந்தார்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு 18 சிவிலியன்கள்
நேட்டோ தாக்குதலில் கொலைச் செய்யப்பட்டனர்.
இதனிடையே, ஆப்கானின் தெற்கு பிராந்தியத்தில் நிகழ்ந்த
குண்டுவெடிப்புகளில் நேட்டோ படையினர் நான்குபேர் கொலைச் செய்யப்பட்டனர். சனிக்கிழமை
இரவிலும், நேற்றும் நடந்த தாக்குதல்களில் இவர்கள் கொல்லப்பட்டனர்.
பலியான ராணுவத்தினரின் பெயரோ அல்லது தேசம்
குறித்தோ நேட்டோ தகவல் வெளியிடவில்லை. இதன் மூலம் ஆப்கானில் இவ்வாண்டு பலியாகும் வெளிநாட்டு
ராணுவத்தினரின் எண்ணிக்கை 169 ஆக உயர்ந்துள்ளது.
0 கருத்துரைகள் :
Post a Comment