animated gif how to

பாகிஸ்தானில் ஹிந்து மத பெண்களுக்கான விதிகளில் தளர்வு

May 28, 2012 |

ஹிந்து பெண்களுக்கு அநீதம் இழைக்கப்படுவதாக தினத்தந்தி போன்ற இந்திய நாளேடுகள் அவதூறுகளை பரப்பி வரும் வேளையில் பாகிஸ்தானில் வாழும் மணமான ஹிந்துப் பெண்கள் தேசிய அடையாள அட்டை பெற விதிகளை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் திருத்தியிருக்கிறது.

ஹிந்துக்கள் திருமணத்தைப் பதிவு செய்ய சட்டம் ஏதும் அந்நாட்டில் இல்லை. எனவே திருமணமான பெண்கள் அதை சட்டப்பூர்வமாக நிரூபித்து தேசிய அடையாள அட்டை பெற முடியாமல் இருந்தது.

இனி திருமணமான பெண்கள் தாங்களாகவே முன்வந்து தங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டது என்பதையும் தங்களுடைய கணவர் பெயர் இன்னார் என்பதையும் உறுதி கூறி ஆவணம் அளித்தால் போதும்.

அதில் இருவரின் கையொப்பமும் இருந்தால் அது சட்டப்பூர்வ ஆவணமாக ஏற்கப்பட்டு தேசிய அடையாள அட்டை வழங்கப்படும். ஹிந்துத் திருமணங்களையும் சட்டபூர்வமாக அங்கீகரிக்க மசோதா ஒன்றும் தயாராகி வருகிறது.


0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!