animated gif how to

தெஹிவளை தாருர் ரஹ்மான் பள்ளிவாசலில் தொழுகை நடாத்த அனுமதி மறுப்பு..!

May 28, 2012 |

தெஹிவளை பிரதேச தாருர் ரஹ்மான் மஸ்ஜித் , சிறுவர் மதரஸா தொடர்பாக முஸ்லிம் தரப்புக்கும், ஆர்பாட்டகாரர்கள் தரப்புக்கும் இடையில் பொலிசாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் தெஹிவளை ஜெயசிங்க மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை, 27 ஆம் திகதி மாலை தொடக்கம் நீண்ட நேரமாக இடம்பெற்றது.

தாருர் ரஹ்மான் தெஹிவளை -கல்கிசை மாநகர சபையில் மஸ்ஜித்தாகவும், ஆரம்ப பாடசாலையாகவும் 2002 ஆண்டு தொடக்கம் பதியப் பட்டுள்ளது.அதேபோன்று வக்பு சபையில் மஸ்ஜித்தாகவும் 1999 ஆம் ஆண்டு மஸ்ஜித்தாக பதிவு செய்யப்பட்டு அவற்றுக்கான ஆதாரங்கள் முஸ்லிம் தரப்பில் இருந்தபோதும் தெஹிவளை -கல்கிசை மாநகர சபையில் மஸ்ஜித்தாகவும், ஆரம்ப பாடசாலையாகவும் 2002 ஆண்டு பதிவு செய்யப்பட்டமைக்கான பதிவுகள் தெஹிவளை -கல்கிசை மாநகர சபையின் ஆவணங்களில் இல்லை என்று மாநகர நிர்வாக தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

இதனால் மதரஸாவாக இயங்க அனுமதி வழங்கப்பட்ட போதும் மஸ்ஜிதாக இயங்க முடியாது என்று தெரிவிக்கபட்டுள்ளது. பதிவு செய்யப்பட்டு பதிவை உறுதிப் படுத்தும் ஆவணங்களுக்கு என்ன நடந்துள்ளது என்பது பற்றியும், இவைகள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் தற்போது முஸ்லிம் தரப்பில் ஆராயப்படுகிறது.
 
இருந்தபோதும் குறித்த பகுதியில் மத்ரஸா மாத்திரமே இயங்க வேண்டுமெனவும், பள்ளிவாசல் இயங்கக்கூடாதென சிங்கள் கடும்போக்காளர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் அறியவருகறது.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!