தம்புள்ள பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதிக்கும் மு.கா. தலைவர் ரவூப்
ஹக்கீமுக்குமிடையில் இடம்பெறவுள்ள நேரடிச் சந்திப்பு
தோல்வியடைந்தால் மு.கா. அரசில் இருந்து விலகுவது என்ற தீர்மானத்தை எடுக்கும் என்று மு.கா.
முக்கியஸ்தர் ஒருவர் நேற்று உதயனுக்குத் தெரிவித்தார்.
மீண்டும் கட்சியின் உயர் பீடம் கூடி இந்தத் தீர்மானத்தை மேற்கொள்ளும் என்று அவர்
மேலும் கூறினார். தம்புள்ள பள்ளிவாசல் விவகாரம்
மார்க்கத்தோடு தொடர்புபட்ட உணர்வுபூர்வமான விடயம் என்பதால் மக்களின் விருப்பத்திற்கு
எதிராக எந்தவொரு அரசியல் தீர்மானத்தையும்
தம்மால் எடுக்கமுடியாது என்று அவர் மேலும் கூறினார்.
அந்த முக்கியஸ்தர் மேலும் கூறுகையில்,
தம்புள்ளை பள்ளிவாசல் மீதான தாக்குதல் இலங்கை முஸ்லிம்கள் அனைவரையும்
ஆத்திரமடையச் செய்துள்ளது. பள்ளிவாசலை அந்த இடத்தில்
இருந்து அகற்ற வேண்டுமென்ற பௌத்த தேரர்களின் கோரிக்கையை எந்தவொரு முஸ்லிமும் ஏற்கவில்லை.
முஸ்லிம்களின் ஒட்டுமொத்த விருப்புகளை நிறைவேற்றுவதற்காகத்தான் அவர்கள்
அரசியல் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்துள்ளனர்.
அந்த மக்களின் விருப்புகளை அவமதித்து எந்தவொரு பிரதிநிதியாலும் செயற்பட முடியாது.
இந்த விடயத்தில் முஸ்லிம்களின் விருப்பு, வெறுப்புகளை மதித்துத்தான் முஸ்லிம்
காங்கிரஸ் செயற்படும். அந்த அடிப்படையில்
ஹக்கீமுக்கும் ஜனாதிபதிக்குமிடையிலான சந்திப்பின் போது எமக்குச் சாதகமான வகையில்
தீர்ப்புக்கிடைக்காவிட்டால் முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடத்தைக்கூட்டி அரசில் இருந்து
விலகுவது பற்றிப் பரிசீலிக்கப்படும்
என்றார்.
நன்றி – ஒன்லைன் உதயன்
1 கருத்துரைகள் :
http://www.sonakar.com/2011/09/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/
Post a Comment