பலஸ்தீனில் இஸ்ரேலின் சட்டவிரோத குடியிருப்பு பகுதியில் தயாரிக்கும்
உணவுப் பொருட்களை வாங்குவதை பிரபல பிரிட்டனின் உணவு விற்பனை நிறுவனம் புறக்கணிக்க திட்டமிட்டுள்ளது.
ஆக்கிரமிக்கப்பட்ட
மேற்கு கரை மற்றும் அதன் சமீப பிரதேசங்களில் தயாரிக்கப்படும் உணவுப்பொருட்களை
ஏற்றுமதிச் செய்யும் இஸ்ரேல் நிறுவனங்களுடனான வர்த்தகத்தை நிறுத்த
பிரிட்டனில் மிகப்பெரிய 5-வது உணவு நிறுவனமான கோ-ஆபரேட்டிவ் க்ரூப் (co-operative group) தயாராகுவதாக
கார்டியன் பத்திரிகை கூறுகிறது.
குடியிருப்பு
பகுதிகளில் தயாரிக்கப்படும்
உணவுப் பொருட்களை பிரிட்டனின் நிறுவனம்
புறக்கணிப்பது இஸ்ரேலிய நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
சட்டவிரோத
குடியிருப்பு பகுதிகளில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களை ஏற்றுமதிச் செய்யும்
நிறுவனங்களுடன் வர்த்தகத்தை நிறுத்துவதற்கான கொள்கையின் ஒரு பகுதிதான் இந்த
புறக்கணிப்பு நடவடிக்கை என்று கோ-ஆபரேட்டிவ் க்ரூப் கூறியுள்ளது. ஆனால், இஸ்ரேலின் இதர பகுதிகளில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களை ஏற்றுமதிச்
செய்யும் நிறுவனங்களுடன் வர்த்தகம் தொடரும் என்று கோ-ஆபரேட்டிவ்
அறிவித்துள்ளது.
கோ-ஆபரேட்டிவ்
நிறுவனத்தின் முடிவை இஸ்ரேல் தயாரிப்புகளை புறக்கணிக்க பிரச்சாரம் நடத்தும்
பாய்காட் இஸ்ரேல் நெட்வர்க் (Boycott Israel Network) வரவேற்றுள்ளது.
0 கருத்துரைகள் :
Post a Comment